பிப்ரவரி, 2011 க்கான தொகுப்பு


மும்பை,பிப்.27:ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடந்த குண்டுவெடிப்புகள் மற்றும் நாசவேலைகளில் ஈடுபட்ட ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கொலைத் தொடர்பான வழக்கில் ஹிந்துத்துவா பெண் தீவிரவாதியான சன்னியாசினி பிரக்யாசிங் தாக்கூர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் ஏற்கனவே மலேகான்-2008 குண்டுவெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு சிகிட்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மலேகான் வழக்கை விசாரித்துவரும் Maharashtra Control of Organised Crime Act (MCOCA) நீதிமன்றத்தின் அனுமதியுடன் மத்தியபிரதேச போலீஸார் பிரக்யா சிங்கை கைது செய்தனர். இதனை சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ரோஹினி சலியன் தெரிவித்தார்.

இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளில் முக்கிய பங்காற்றிய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதி சுனில் ஜோஷி கடந்த 2007-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி மத்தியபிரதேச மாநிலம் தேவாஸில் வைத்து துப்பாக்கியால் சுடப்பட்டு கொல்லப்பட்டார்.

ஸம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான அஸிமானந்தாவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் ஜோஷியை கொன்றது ஆர்.எஸ்.எஸ்-காரர்கள்தாம் என்ற உண்மை வெளியானது.

ஜோஷி கொல்லப்பட்ட தினம் இவருடைய வீட்டிற்கு சென்ற பிரக்யா சிங் ஜோஷியின் பொருட்களையும் இதர ஆதாரங்களையும் அங்கிருந்து கடத்திச் சென்றதாக புலனாய்வுக்குழு கண்டறிந்தது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


திரிபோலி,பிப்.27:உள்நாட்டில் எதிர்ப்புப் போராட்டம் வலுவடைந்து சர்வதேச அளவில் எதிர்ப்பு அதிகரித்த நிலையில் தனது ஆதரவாளர்களுக்கு ஆயுதங்களை வழங்குகிறார் அந்நாட்டு சர்வாதிகாரி முஅம்மர் கத்தாஃபி.

ஆயுதக் கிடங்குகளை எனது ஆதரவாளர்களுக்கு திறந்துக் கொடுத்துள்ளேன் என கத்தாஃபி தெரிவித்துள்ளார்.

திரிபோலியில் போலீஸ் நிலையங்கள் ஆயுதம் ஏந்திய கத்தாஃபியின் ஆதரவாளர்களின் கட்டுப்பாட்டிலிருப்பதாக AP நியூஸ் கூறுகிறது. இவர்களின் ட்ரக்குகள் தெருக்களில் ரோந்து வந்துக் கொண்டிருக்கின்றன. லிபியாவின் பல பகுதிகளிலும் ராணுவம் மக்களுடன் சேர்ந்ததால் இந்த நடவடிக்கையை கத்தாஃபி மேற்கொண்டுள்ளார்.

கத்தாஃபி ஆதரவாளர்களின் தாக்குதலில் நேற்றும் ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். லிபியாவுக்கு எதிரான தடையை பிரகடனப்படுத்திய உத்தரவில் அமெரிக்க அதிபர் ஒபாமா நேற்று முன்தினம் இரவு கையெழுத்திட்டார்.

திரிபோலியில் அமெரிக்க தூதரகம் மூடப்பட்டது. ராணுவத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டன. பிரிட்டனும் கத்தாஃபியின் சொத்துக்களை முடக்க தீர்மானித்துள்ளது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலும், ஐரோப்பிய யூனியனும் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருக்கின்றன. ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் சிறப்புக்கூட்டம் ஒன்றை கூட்டுகிறது. மக்களை கொல்லும் கத்தாஃபிக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை மேற்கொள்ள ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலிடம் வலியுறுத்தியுள்ளார்.

லிபியாவை கவுனிசிலிருந்து வெளியேற்ற ஐ.நா மனித உரிமை கவுன்சில் ஒருமுகமாக ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. கத்தாஃபி அரசு நடத்தும் தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என கவுன்சில் வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே,”நான் மக்கள் மத்தியில்தான் உள்ளேன் கடைசி வரை போராடுவேன் வெளிநாடுகள் அத்துமீறி நுழைவதை என்ன விலைக் கொடுத்தும் தடுப்பேன்” என கத்தாஃபி கூறியுள்ளார்.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


ஸன்ஆ,பிப்.27:ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் ஆட்சிக்கெதிராக யெமன் நாட்டில் நடைபெற்று வரும் போராட்டத்தில் அந்நாட்டின் பிரபல பழங்குடி இனத்தவர்களும் கலந்துக் கொண்டுள்ளனர்.

ஸன்ஆவின் பழங்குடியினர் பகுதியில் நேற்று நடந்த பழங்குடியின தலைவர்களின் கூட்டத்தில் இதுத் தொடர்பான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

ஹாஷித், பாகில் உள்பட முக்கிய பழங்குடியினத் தலைவர்கள் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

அமைதியாக நடந்துவரும் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அரசு நடவடிக்கையைக் கண்டித்து ஆளுங்கட்சியான ஜெனரல் பீப்பிள்ஸ் காங்கிரஸிலிருந்து ராஜினாமா செய்வதாக ஹாஷித் பழங்குடியினத் தலைவர் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் அறிவித்துள்ளார்.

யெமனில் பழங்குடியினருக்கு வலுவான செல்வாக்கு உள்ளது. யெமனில் கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போராட்டத்தில் ஸன்ஆ பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் உள்பட 6 பேர் கொல்லப்பட்டனர்.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்


கோவை வெடிக்குண்டு நாடக நாயகன் ரத்தின சபாபதிக்கு அரசு பதவி, உயர்வு அளித்தது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தமிழ் மாநிலத் தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பத்திரிகைச் செய்தி பின்வருமாறு: ‘கடந்த 22.06.2007 அன்று கோவையை தகர்க்க சதி என தமிழகத்தையே பீதிக்குள்ளாக்கியவர் ரத்தின சபாபதி. இவர் அப்போதைய உளவுத்துறை உதவி ஆணையாளராக பதவி வகித்தவர். சில பொருள்களை கைப்பற்றியதாகக் கூறி சில முஸ்லிம் இளைஞர்களையும் கைதுச் செய்து அவர்கள் மனித நீதிப் பாசறையைச் சார்ந்தவர்கள் என்று அறிக்கையும் விடுத்தார்.

இவ்வழக்கில் உள்ள போலித் தன்மையை உணர்ந்துக் கொண்ட பொதுமக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், நடுநிலையாளர்கள் ஆகியோரிடையே எழுந்த நீதிக்கான குரல்கள் எழுந்தன. இதன் விளைவாக அரசு கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் திரு.ஆர்.பாலன் அவர்களுடைய தலைமையில் சி.பி.சி.ஐ.டியின் சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்.ஐ.டி) விசாரணை நடத்த உத்தரவிட்டது.

சுமார் ஒருவருடமாக இவ்வழக்கை விசாரித்த எஸ்.ஐ.டி கடந்த 2007-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கோவை ஜூடிஸியல் மாஜிஸ்ட்ரேட் நீதிமன்றத்தில் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், “இவ்வழக்கில் கைப்பற்றப்பட்ட வெடிக்குண்டுகள் காவல் துறையினராலேயே பொய்யாக புனையப்பட்டு இவ்வழக்கில் சேர்க்கப்பட்டவை. மேலும் இவ்வழக்கின் ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு புனையப்பட்டுள்ளன. எனவே இது பொய்யாக புனையப்பட்ட வழக்கு என்று கூறி இவ்வழக்கை முடிக்கின்றோம்” என எஸ்.ஐ.டி தனது அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

ஆனால், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகியும் அரசு ரத்தினசபாபதி மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் மீது அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை. மாறாக அவருக்கு கோவை மாநகரிலேயே காவல்துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டது.

இத்தகைய அரசின் கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும், ரத்தினசபாபதி மீது வழக்குப்பதிவுச் செய்து தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும், பொய்வழக்கு புனையப்பட்டு பாதிக்கப்பட்ட முஸ்லிம் இளைஞர்களுக்கு இழப்பீடு வழங்கக் கோரியும் தமிழகம் முழுவதும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள், பிரச்சாரங்கள், கையெழுத்து இயக்கங்களின் வாயிலாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா போராடி வருகிறது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்தின சபாபதி மீது வழக்கும் பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையிலும், ரத்தின சபாபதிக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பதவி அளிக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. அரசின் இந்த நடவடிக்கைகள் சிறுபான்மையினருக்கு எதிரான போக்கை தெளிவாக உணர்த்துகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் வரையிலும், அரசின் இந்த கண்மூடித்தனமான போக்கை கண்டித்தும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தொடர்ந்து மக்களை திரட்டி போராடும்.’ என அவர் தெரிவித்துள்ளார்.


திரிபோலி,பிப்.25:லிபியாவில் மக்களை நோக்கி சுடத் தயங்கிய ராணுவ வீரர்கள் 130 பேர் கொல்லப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இதனை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஐ.எஃப்.ஹெச்.ஆர் தெரிவித்துள்ளது.

கைகளை கட்டிய பிறகு ராணுவம் இவர்களை சுட்டுக் கொன்றுள்ளதாக அந்த அமைப்பு தெரிவிக்கிறது.

கிழக்கு லிபியாவில் பெங்காஸி நகரத்தில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் மீது தாக்குதல் நடத்த அந்நாட்டின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியின் உத்தரவுக்கு எதிராக ராணுவத்தில் ஒருபிரிவினர் கட்டுப்பட மறுக்கின்றனர்.

இதற்கிடையேத்தான் கத்தாஃபியின் ராணுவ நடவடிக்கைக்கான உத்தரவுக்கு கட்டுப்படாத 130 ராணுவத்தினரை கொன்ற தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவத்தைக் குறித்து சர்வதேச நீதிமன்றம் வழக்குப் பதிவுச்செய்ய வேண்டுமென ஐ.எஃப்.ஹெச்.ஆர் வலியுறுத்தியுள்ளது.

பெங்காசியில் மருத்துவமனைகள் இறந்த உடல்கள் மற்றும் காயமடைந்தோர்களால் நிரம்பி வழிகின்றன. அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா உள்பட சர்வதேச தலைவர்கள், ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் ஆகியன லிபியாவுக்கு கண்டனம் தெரிவித்த நிலையில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு எதிராக லிபிய ராணுவம் நவீன தொழில்நுட்பம் வாய்ந்த ஆயுதங்களை பயன்படுத்துகிறது. ஆனால், லிபியாவின் பெரும்பாலான நகரங்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டை இழந்துக் கொண்டிருக்கின்றன.

செய்தி:மாத்யமம்


தோஹா,பிப்.25:சர்வதேச முஸ்லிம் அறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவரும், பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞருமான டாக்டர்.யூசுஃப் அல் கர்தாவி அல்ஜஸீராவுக்கு அளித்த நேர்முகத்தில், லிபியாவின் ஏகாதிபத்தியவாதி முஅம்மர் கத்தாஃபியை சுட்டுக் கொல்லுமாறு அந்நாட்டு ராணுவத்தினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுத்தொடர்பாக அவர் தெரிவித்த கருத்தின் சாரம்சம் வருமாறு: தனது சொந்த நாட்டு மக்களுக்காக ஏவுகணகளை பயன்படுத்தி போராடுவது ஹீரோயிஸம் அல்ல. நான் எனது லிபியா ராணுவத்தைச் சார்ந்த எனது சகோதரர்களுக்கும், மக்களுக்கு கூறிக்கொள்கிறேன், நீங்கள் மக்களைக் கொல்வதற்கான கட்டளைகளுக்கு கீழ்படியாதீர்கள். ராணுவத்தினரில் எவருக்காவது முடியுமானால் அவர் கத்தாஃபியை கொல்லட்டும் என ஃபத்வா(மார்க்கத்தீர்ப்பு) வழங்குகிறேன்.

அவரைச் சுட்டு வீழ்த்துங்கள். அவரின்(கத்தாஃபி) தீங்கிலிருந்து மக்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்’ இவ்வாறு கத்தாஃபி கூறியுள்ளார்.
UPI.COM

PFI

Posted: பிப்ரவரி 25, 2011 in POPULAR FRONT