ஷெர்ஷா சூரி

Posted: பிப்ரவரி 8, 2011 in SDPI

கஜினி,குதுப்மினார்,கோஹினூர்,தாஜ்மஹால்,பாபர்,அக்பர் என்று நாம் கேள்விப்பட்ட பலவற்றைப் பற்றி நாம் கேள்விப்படாத பல விஷயங்களை நன்றாக விளக்கியிருக்கிறார். அவற்றுள் என்னைக்கவர்ந்த இரு விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்   பள்ளிப்பாடங்களில் பாபர் மற்றும் அக்பருக்கு இடையில் ‘ஷெர்ஷா’ என்னும் ஆப்கானிய மன்னர் ஆண்டதாக அறிந்திருந்தேன். அவரைப் பற்றி மதன் கொடுக்கும் தகவல்கள் உண்மையிலேயே அந்த மன்னர் மீது சற்று மரியாதை ஏற்பத்துகிறது.

பாபர் – மொகலாய சாம்ராஜ்யம் நிறுவியவர்; அக்பர் – அதை இன்னும் பெரிதாக்கி, நல்ல நிர்வாகம் அளித்தவர். அந்த பாபரின் மகனும் மற்றும் அக்பரின் தந்தையுமான ஹீமாயூனை
தோற்கடித்து ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்தியவரே இந்த ‘ஷெர்ஷா’. இவர் ஆரம்பித்து வைத்த பல நல்ல விஷயங்களை தொடர்ந்ததால்தான் அக்பரின் ஆட்சி முறை சிறந்து விளங்கியது.

1. மத்திய அரசு, மாநில கவர்னர்கள், பெரிய அதிகாரி வர்க்கம் – போன்றவற்றை ஆரம்பித்தவர் ஷெர்ஷாதான்.(இவை அக்பர் அல்லது ஆங்கிலேயரின் கண்டுபிடிப்பு என்று இதுநாள் வரை நான் நம்பியிருந்தேன்).
2. இவரது சாம்ராஜ்யம் ‘சர்க்கார்கள்’ மற்றும் ‘மாவட்டங்கள்’ என்று பல பிரிவுகளை உள்ளடக்கியதாக இருந்தது. அதிகாரிகளின் மெத்தனப் போக்கை குறைக்க அடிக்கடி அவர்களை இட மாற்றங்கள் செய்தார்.
3. நிலச் சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். விளைச்சல் இல்லாக் காலங்களில் விவசாயக் கடன்களைத்(ப.சி-யின் முன்னோடியோ!!!) தள்ளுபடி செய்தார்.
4. ஒவ்வொரு மாவட்டத்திலும் போலீஸ் படை ஏற்படுத்தப்பட்டது. தண்டனைகள மிகக் கடுமையாக்கப்பட்டன.
5. முக்கியமாக ‘இந்து – முஸ்லிம்’ பார பட்சம் பாராமல் பதவி உயர்வு வழங்கப்பட்டது.

அதைச் செய்வோம், இதைச் செய்வோம் என்று ஆட்சிக்கு வந்து இன்று ஒன்றும் செய்யாமல் ‘கஜானாவை’ மட்டும் காலியாக்கும் சில அரசியல்வாதிகளை பார்க்கையில் ‘ஷெர்ஷா’-வை படித்து நாம் பெருமூச்சே விட முடிகிறது.

http://en.wikipedia.org/wiki/Sher_Shah_Suri

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s