பாப்புலர் ஃப்ரண்ட்டுக்கு நஷ்டஈடு வழங்கிய கர்நாடக உயர் நீதிமன்றம்

Posted: பிப்ரவரி 11, 2011 in POPULAR FRONT

பெங்களூர்,பிப்.11:கடந்த 2009 ஜூலை மாதம் மைசூரில் நடந்த அசம்பாவித சம்பவத்திற்க்காக சட்டத்திற்க்கு புறம்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்களை கைது செய்தமைக்காக கர்நாடாக உயர் நீதிமன்றம் ரூபாய் ஐம்பதாயிரத்தை நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்துள்ளது.

இப்படி சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை அதிகாரிகள் நடந்து கொள்வதை ஒரு போதும் நீதிமன்றம் அனுமதிக்காது ஆகையால் இந்த செயலில் ஈடுபட்ட காவல்துறையினரிடமிருந்தே இந்த தொகை வசூலிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியுள்ளது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவைச் சேர்ந்த முஹம்மது வசீம் மற்றும் 164 நபர்கள் கர்நாடகா அரசாங்கத்தின் அராஜபோக்கை எதிர்த்து வழக்கு தொடர்ந்தனர். அதில் அவர்களுக்கு ரூபாய் 10 லட்சத்தை அரசாங்கம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பி.எஸ். பாட்டீல் மேற்கூறியவாரு தீர்ப்பளித்தார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஆளும் பா.ஜ.க அரசாங்கத்தின் அராஜக போக்கை கண்டித்து சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த இருந்தனர். ஆனால் காவல்துறையினரோ கண்மூடித்தனமாக தாக்குதலில் ஈடுபட்டு குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்களை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட பல நபர்களை பெல்ஜியன் நகரில் உள்ள சிறைச்சாலையில் அடைக்கப்பட்டனர். இந்த விசாரணை கர்நாடகா உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் மஞ்சுளா செல்லூர் மற்றும் ஜாவித் ரஹீம் ஆகிய இருவர் முன்பு கொண்டுவரப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரும் கைது செய்யப்பட்டவர்களை உடனே விடுதலை செய்ய வேண்டும் என தீர்ப்பளித்தனர். கைது நடவடிக்கையின் போது சட்டத்தை மீறி செயல்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

மைசூரில் ஏற்ப்பட்ட சிறு பிரச்சனையை பெரிதாக்கி அதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் ஈடுபட்ட சங்கபரிவார கும்பல்களின் அட்டூழியத்தை எதிர்த்த பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்தது. இதை எதிர்த்து ஜனநாயக ரீதியில் போராடிய முஸ்லிம்கள் மீதும் அப்பாவி பொதுமக்கள் மீதும் தடியடி நடத்தி அராஜக போக்கை காவல்துறையினர் கையாண்டு உண்மை குற்றவாளிகளை வலம்வரவிட்டனர்.

ஜூலை 10 ஆம் தேதி வரை இருநூறுக்கும் மேற்ப்பட்ட அப்பாவிகளை கைது செய்தது காவல்துறை.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Thameem சொல்கிறார்:

    Allah akbar……..

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s