ஃபலஸ்தீன் அமைச்சரவை ராஜினாமா செய்தது

Posted: பிப்ரவரி 15, 2011 in MUSLIM WORLD

ராமல்லா,பிப்.15:பிரதமர் ஸலாம் ஃபய்யாத் தலைமையிலான ஃபலஸ்தீன் அமைச்சரவை ராஜினாமாச் செய்தது. புதிய அமைச்சரவையை உடனடியாக உருவாக்க ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார்.

ஃபலஸ்தீனில் எல்லா பிரிவினருடனும் விவாதித்தப் பிறகு புதிய அமைச்சரவையை உருவாக்கவும் அப்பாஸ் உத்தரவிட்டுள்ளார். இதுவரை அளித்த செயல்பாடுகளுக்காக ஃபய்யாதிற்கு அப்பாஸ் நன்றி தெரிவித்தார்.

அரபுலகில் தீவிரமடைந்து வரும் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து இந்த ராஜினாமா நடந்தேறியுள்ளது. அமைச்சரவையை புனர்நிர்மாணிக்க ஃபய்யாதும், அப்பாஸின் ஃபத்ஹ் கட்சியின் பல நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

புதிய அமைச்சரவையை உடனடியாக உருவாக்குவோம் என திட்டக்கமிஷன் துறை அமைச்சர் அலி ஜர்பாவி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளார்.

ஃபத்ஹ் உறுப்பினர்களின் துறைகளை நிர்ணயத்த பிறகு புதிய அமைச்சரவை உருவாக்கப்படும். சட்டமியேற்றும் சபைக்கும், அதிபர் பதவிக்கும் வருகிற நவம்பரில் தேர்தல் நடத்த ஃபலஸ்தீன் ஆணையம் தீர்மானித்த பொழுதிலும் காஸ்ஸாவில் ஆட்சிபுரிந்து வரும் ஹமாஸ் இதனை நிராகரித்துவிட்டது.

ஃபலஸ்தீன் விடுதலை இயக்கத்தின் முக்கிய மத்தியஸ்தர் ஸாஇப் எரகாத் கடந்த சனிக்கிழமை ராஜினாமாச் செய்திருந்தார். இஸ்ரேலுடன் நடத்திய பேச்சுவார்த்தையின் ஆதாரங்களை அல்ஜஸீரா தொலைக்காட்சி வெளியிட்டதைத் தொடர்ந்து எரகாத் ராஜினாமாச் செய்திருந்தார்.

ஃபலஸ்தீன் மக்களின் உணர்வுகளுக்கெதிராக இஸ்ரேலுக்கு கூடுதலான இடங்களை தாரைவார்க்க வாக்குறுதி அளித்த ஆவணங்களை எரகாத்தின் அலுவலகத்திலிருந்து அல்ஜஸீரா கசியவிட்டது.

செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s