பரமக்குடி: எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் நிகழ்சிகள் நடைபெற்றுவருகிறது. இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆச்சார்யா மடம் அருகில் 15/02/2011 அன்று மாலை 6 மணியளவில் எகிப்திய மக்களை வாழ்த்தியும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் நிகழ்சிகள் நடைபெற்றது. சர்வாதிகார ஆட்சியை சவுக்கடி கொடுத்து அமைதிப் புரட்சியின் மூலம் எகிப்தில் ஹோஸ்னி முபாரக்கின் ஆட்சியை வீழ்த்திய எகிப்து மக்களுக்கு வாழ்த்து தெரிவித்தும், தற்போது நிலவி வரும் இரானுவ ஆட்சியை அகற்றி ஜனநாயக ஆட்சியை மலரச்செய்ய இந்திய அரசை துணைபுரிய வலியுறுத்தியும் அமைதி பேரணி நடைபெற்றது. அமைதி பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் மு.செய்யது ஹாலிது த்லைமை தாங்கினார். ஷோஸியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியாவின்(SDPI) மாநில செயற்குழு உறுப்பினர் B.அப்துல் ஹமீது, SDPIன் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் M.I.நூர் ஜியாவுதீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைதி பேரணியில் மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர். இதுவல்லாமல் உலகெங்கிலும் உள்ள அரசியல் தலைவர்கள் முதல் அறிஜர்கள்வரை எகிப்த் மக்களுக்கு வாழ்த்துக்களை அளித்தவண்ணம் உள்ளார்கள்.
வந்து குவியும் வாழ்த்துக்கள்!! மகிழ்ச்சியில் எகிப்து மக்கள்!!
Posted: பிப்ரவரி 18, 2011 in POPULAR FRONT0
Advertisements