எஸ். டி. பி. ஐ.ன் புதிய நிர்வாகிகள் தேர்வு

Posted: மார்ச் 6, 2011 in SDPI

சென்னை : எஸ்.டி.பி.ஐன் முதலாவது மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை எழும்பூர் ஃபைஸ் மஹாலில் இன்று (05.03.2011) காலை 11 மணிக்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் துவங்கியது. மாநில பொதுச் செயலாளர் ஏ.எம். ரஃபீக் அஹமது அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்.

பொதுச் செயலாளர் நெல்லை முபாரக் அறிக்கை வாசித்தார். தொடர்ந்து மாநில தலைவர் எஸ்.டி.பி.ஐன் கடந்த ஒன்னரை வருட செயல் பாடுகள் குறித்தும் தேர்தல் நிலைபாடு குறித்தும் துவக்கவுரையாற்றினார். வரும் தேர்தலில் மகத்தான வகையில் எஸ்.டி.பி.ஐ தேர்தல் களத்தில் களப்பணியாற்றும் என குறிப்பிட்டார்.

தொடர்ந்து மத்திய தேர்தல் பார்வையாளர்களை கர்நாடக மாநில எஸ்.டி.பி.ஐ தலைவர் அப்துல் மஜித் மற்றும் அஃஸர் பாஷா ஆகியோர் முன்னிலையில் வரும் இரண்டு வருடங்களுக்கான மாநில நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்கண்டவர்கள் மாநில நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி

மாநில துணை தலைவர் அப்துல் ஹமீது (எ) பிலால் ஹாஜியார்

பொதுச்செயலாளர்கள்: எம். முஹம்மது முபாரக், எஸ். எம். முஹம்மது ரபிக்

செயலாளர்கள்:
ஜி. அப்துல் சத்தார்
இ. அபுபக்கர் சித்திக்
பொருளாளர்:
அ. அஹமது பாஷா

மாநில செயற்குழு உறுப்பினர்கள்
1. முஹம்மது முபாரக் திருச்சி
2. அபுதாஹிர் கோவை
3. அப்துல் சலாம் காரைகால்
4. முஹம்மது ஜமால் இராமநாதபுரம்
5. முஹம்மது பஷிர் திருப்பூர்
6. நிஷார் தூத்துக்குடி
7. செய்யது அலி நாகர்கோவில்

அதை தெடர்ந்து தேசிய அளவில் கட்சி வளர்ச்சி குறித்து மத்திய பார்வையாளர்கள் அறிக்கை தாக்கல் செய்தனர். தெடர்ந்து பொதுக் குழு உறுப்பினர்களின் ÷கள்விகலுக்கு பதில் அளிக்கப்பட்டது. முடிவாக புதிய மாநிலத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி ஏற்புரை நிகழ்த்தினார்.
மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா மற்றும மாநில செயலார் ஜி. அப்துல் சத்தார் ஆகியோர் தீர்மானங்களை வாசித்தனர். தொடர்ந்து மாநில துணை தலைவர் பிலால்
ஹாஜியாரின் நன்றியுரையுடன் பொதுக்குழு முடிவடைந்தது.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. எஸ்.டி.பி.ஐ துவங்கப்பட்டு ஒன்றரை வருடத்திற்குள்ளாகவே சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது. இத்தேர்தலில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வக்ஃபு வாரியத்தை முறைப்படுத்துவது. போன்ற கோரிக்கைகளுடன் எஸ்.டி.பி.ஐக்கு உரிய பிரதிநிதிதுவம் தரும் கட்சியுடன் கூட்டணி வைப்பது என்றும் இல்லை எனில் 10 தொகுதிகளில் தனித்து போட்டியிடுவது என்றும் இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

2. தமிழகத்தில் வகுப்பு அடிப்படையில் ஒர சில குறிப்பிட்ட பகதிகளில் குறைந்த சதவிகிதத்தில் வாழ்ந்து வரும் சமுதாயங்களுக்கு வழங்கப்படும் அரசியல் பிரதிநிதித்துவம் பெரும்பான்மையாக தமிழகம் முழுவதும் பரவி வாழும் முஸ்லிம் சமூகத்திற்கு அரசியல்கட்சிகள் வழங்காதது மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டியது. அரசியல் கட்சிகள் இந்நிலையை கவனத்தில் கொண்டு முஸ்லிம்களுக்கு உரிய அரசியல் அங்கீகாரத்தை வழங்கும் வகையில் ஒவ்வொரு கட்சியும் தலா 10 தொகுதிகளை முஸ்லிம்களுக்கு வழங்க வேண்டும் என இப்போதுக்குழு வலியுறுத்துகிறது,

3. தொடர்ந்து தமிழர்களை மீனவர்களை படுகொலை செய்துவரும் இலங்கை அரசை வண்மையாக இப்பொதுக்குழு கண்டிக்கிறது. இவ்விஷயத்தில் மத்திய மாநில அரசின் மெத்தனம் போக்கும் தொடர் கதையாகவே இருந்து வருகிறது. மீனவர்களின் வாழ்க்கையை நிலைப்படுத்தி பாதுகாப்பாக வாழ்வதற்கு மத்திய மாநில அரசுகள் உறுதியான நடவடிக்கைகளை காலம்தாழ்த்தாமல் செய்ய இப்பொதுகுழு கேட்டுகொள்கிறது.

4. தமிழகத்தின் வளர்ச்சி மற்றும் பல லட்சம் மக்களின் வேலைவாய்ப்பிற்கு உறுதுணையாக அமைந்திடும் சேது கால்வாய் திட்டடத்தை சில விஷகளின் திட்டமிட்ட பிரச்சாரத்திற்கு பலியாகி மத்திய அரசால் பல ஆயிரம் கோடி ருபாய் செலவழிக்கப்பட்ட நிலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இது விஷயத்தில் அரசு தொடுத்துள்ள உச்சிநீதிமன்ற வழக்கு விசாரணை விரைவாக தொடங்கப்பட வேண்டும் என இம் பொது குழு கேட்டிக்கொள்கிறது. தமிழ் நாடும் தமிழ் நாட்டு மக்களும் பயனடையும் இதுபோன்ற அரசின் பல திட்டங்களை வேண்டுமென்றே தடுத்திடும் நோக்கில் செயல்படும் பி.ஜே.பியை வரும் தேர்தல் தமிழகத்தில் இருந்து முற்றிலும் துøடத்தெறிய வேண்டும் என இப்பொதுக்குழு நாட்டு மக்களை கேட்டுக் கொள்கிறது.

5. மதுவை அரசு கட்டுப்படுத்த வேண்டும் என அரசியல் சாசன சட்டத்தன் வழிகாட்டும் பிரிவு4 வலியுறுத்தும் நிலையில் தமிழகத்தில் அரசே மதுக்கடைகளை நடத்துவதை கைவிட்டு பூரண மதுவிலக்கை தமிழகத்தில் அமல்படுத்துமாறு இப்பொதுக்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

6. உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து திருப்பூரில் சாயப்பட்டறைகள் மூடப்பட்டதால் லட்சக் கணக்கானோர் வேலையிழந்துளிளனர். திருப்பூரின் தொழில் வளம் முடங்கியுள்ளது. இந்நிலையை மாற்றி இப்பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி லட்சக் கணக்கான தொழிலாளர்களின் எதிர் காலத்தை பாதுகாக்குமாறு மத்திய மாநில அரசுகளை இப்பொதுக்குழு கோருகிறது.

7. இந்தி அரசியல் வாதிகளாலும் பண முதலைகளாலும் பல லட்சம் கோடி கருப்பு பணம் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கிவைக்கப்பட்டுள்ளது தெளிவான பிறகும் காங்கிரஸ் மற்றும பா.ஜ.க அரசுகள் இவற்றை மீட்க எவ்வித உரிய நடவடிக்கையையும் மேற்கொள்ளாதது கண்டிக்கதக்கது. சுவிஸ் வங்கிளில் மட்டும் 72 லட்சம் கோடி ரூபாய் பதுக்கி வைக்கபட்டுள்ளதாகதகவல்கள் தெரிவிக்கின்றன இப்பணங்களை மீட்டு நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு பயன் படுடத்துமாறு மத்திய அரசை இப்பொதுக்குழு வலியுறுத்துகிறது.

8. உரிய விலை கிடைக்காததாலும் நூல் போன்ற மூலபொருட்களின் விலைவுயர்வாலும் நெசவுத் தொழில் நலிவடைந்து. அதை நம்பி வாழும் லட்சக் கணக்கானோரின் எதிர் காலம் கேள்விக் குறியாகியுள்ளது. மத்திய மாநில அரசுகள் நூல்விலையேற்றத்தை கட்டுப்படுத்தி நெசவுத் தொழிலை பாதுகாக்குமாறு இப்பொதுக்குழு கோருகிறது.

9. கோவையில் 2002ம் குண்டு வெடிகுண்டு நாடகம் நடத்தி முஸ்லிம்களை தீவிரவாதியாக சித்தரித்து கைது நடவடிக்கைகளில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரி ரத்ண சபாபதி மீது நடவடிக்கை எடுக்காததோடு. அண்மையில் அவருக்கு பதவிவுயர்வு அளித்திருப்பது முஸ்லிம்களை அதிர்சியடைய செய்துள்ளது. உடனடியாக அவரை பதவி நீக்கம் செய்யுமாறு மாநில அரசை இப்பொதுக்குழு கோருகிறது.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Thameem சொல்கிறார்:

    Inshaallah

  2. Mohamed Salih சொல்கிறார்:

    Missing – a General Secretary – Abdul Hameed from Ramnad

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s