மசூத் குடும்பத்தினருக்கு இழப்பீடு: NCHRO-இன் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி

Posted: மார்ச் 10, 2011 in SDPI


நாகர்கோவில்,:கடந்த 2005-ஆம் ஆண்டு நெல்லை மாவட்டம் கடையநல்லூரைச் சார்ந்த மசூத் என்ற முஸ்லிம் வாலிபரை விசாரணைக்காக கீரிப்பாறை காவல்நிலையத்திற்கு கொண்டுவந்தனர் போலீஸார்.

விசாரணையின்போது அவரை தலைகீழாக தொங்கவிட்டு பழுக்க காய்ச்சிய கூர்மையான இரும்புக் கம்பியை அவரது ஆசனவாய்க்குள் செலுத்தி கடுமையாக அடித்து சித்திரவதை செய்து அவரை கொலைச் செய்தனர் DSPக்கள் பிரதாப்சிங், சந்திரபால், ஈஸ்வரன் மற்றும் குமரிமாவட்ட காவல்துறை அதிகாரிகள்.

காவல்நிலைய சித்திரவதையில் மசூத் கொல்லப்பட்ட வழக்கை கடந்த நான்கு வருடங்களாக மதுரை உயர்நீதிமன்றத்திலும் தென்காசி நீதிமன்றத்திலும் நடத்தி வருகிறது NCHRO என்ற மனித உரிமை இயக்கங்களுக்கான கூட்டமைப்பு.

மேலும் பாதிக்கப்பட்ட மசூதின் குடும்பத்திற்கு இழப்பீடுக்கோரி NCHROவின் மாநில செயலாளர் வழக்கறிஞர் ஜின்னா அவர்கள் தலைமையிலான குழு பலமுறை சென்னையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநரையும், உள்துறை செயலாளரையும் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாநில தலைவர் வழக்கறிஞர் பவானி பா.மோகன், பொதுச்செயலாளர் வழக்கறிஞர் முஹம்மது யூசுஃப் ஆகியோர் தலைமையில் பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வருகிறது NCHRO.

NCHRO வின் தொடர் போராட்டத்தின் விளைவாக தமிழக அரசு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து பாதிக்கப்பட்ட மசூதின் மனைவி அசனம்மாள் மற்றும் குழந்தைகளுக்கு ஒரு லட்சம் ரூபாய் இழப்பீட்டுத்தொகை வழங்குமாறு கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி குமரிமாவட்ட ஆட்சித்தலைவருக்கு உத்தரவிட்டது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s