தொகுதி பங்கிடும் நேரத்திலே…

Posted: மார்ச் 21, 2011 in SDPI

சென்ற வாரம் நமது பகுதியில் தமிழக தேர்தல் இன்னும் சூடுபிடிக்கவில்லை என்று எழுதினாலும் எழுதினோம், தற்போது தமிழக அரசியல் சூழல்; ஏகத்திற்கும் உச்ச உஷ்ணத்தில் உள்ளது. தொகுதி பங்கீடு சுமூகமான முறையில் சென்று கொண்டிருந்த அதிமுக கூட்டணி வெற்றியை நோக்கி செல்வதாகவே பெரும்பான்மையான மக்கள் கருதினர்.

இச்சூழலில்தான் அதிமுக தலைவர் ஜெயலலிதாவின் வழக்கமான ‘அதிரடியால்’ கூட்டணியே ஆட்டம் கண்டது. கூட்டணி கட்சிகள் கேட்ட தொகுதிகளை, சென்ற முறை அவர்கள் வெற்றி பெற்ற தொகுதிகளில் எல்லாம் அதிமுக போட்டியிடும் என்று அறிவிப்பு செய்து அனைவரையும் அதிரச் செய்தார் ஜெயலலிதா.

கூட்டணி கட்சிகள் எல்லாம் தங்களின் கோபத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில் என்ன செய்வதென்றே தெரியாமல் நின்றவர், ஒரு காலத்தில் தமிழக அரசியலில் சூறாவளி என்றும் போர்வாள் என்றும் கூறப்பட்ட மதிமுக தலைவர் வைகோ தான். மற்ற கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளின் எண்ணிக்கையாவது மிஞ்சியது. ஆனால் இவரை ஜெயலலிதா கூட்டணியில் சேர்த்துக் கொள்ளவே இல்லை. வைகோவின் நிலை பரிதாபத்தின் உச்சத்தை அடைந்துள்ளது. ஏற்கெனவே தொண்டர்கள் மற்றும் தலைவர்கள் பற்றாக்குறை என்ற அளவில் சென்று கொண்டிருக்கும் அவரின் கட்சிக்கு இது மிகப்பெரும் சோதனையாகவே அமைந்தது.

தற்போதைய சூழலில் சமரச பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்கப்பட்டு சுமூகமான முறையில் சென்று கொண்டிருக்கின்றன. கொள்கை கோமாங்களான காம்ரேட்கள் முதலில் சமரசத்தை எட்டிப் பிடித்தனர். தீவிரவாதிகளை மடக்கிப் பிடிக்கும் விஜயகாந்தும் சமரசத்திற்கு ஒத்துக் கொள்ள, வைகோ தனித்து விடப்பட்டார். தேர்தல் புறக்கணிப்பு என்ற முடிவை அறிவித்துள்ளார்.

தேர்தல் களம் சுறுசுறுப்பை அடைந்துள்ள நிலையில் முஸ்லிம் வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் நிலைகள் என்ன? நாம் சென்ற முறை குறிப்பிட்டது போலவே, இரு திராவிட கட்சிகளும் தங்களின் உண்மை முகத்தை மீண்டும் ஒரு முறை வெளிக்காட்டின.

சோஷியல் டெமாகிரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா அறிவிப்பு செய்துள்ள ஆறு தொகுதிகளில் அவர்களை எதிர்த்து நிற்க தங்களின் கூட்டணியில் உள்ள முஸ்லிம் கட்சிகளுக்கே ஆளுக்கொரு தொகுதியை ஒதுக்கின இரு திராவிட கட்சிகளும்.

துறைமுகத்தை இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு திமுக அளிக்க,ராமநாதபுரத்தை மனித நேய மக்கள் கட்சிக்கு வழங்கியது அதிமுக. அதுவரை முஸ்லிம் லீக்கிற்கு இரண்டு தொகுதிகள் என்று கூறி வந்த திமுக, எஸ்டிபிஐ தொகுதியை அறிவித்தவுடன் அவசர அவசரமாக முஸ்லிம் லீக்கிற்கு ஒரு தொகுதியை அதிகமாக வழங்கியது.துறைமுகத்தில் லீக் சார்பாக போட்டியிடுபவர் திருப்பூர் அல்தாஃப். இவர் சில தினங்களுக்கு முன்னர்தான் முஸ்லிம் லீக்கில் தன்னுடைய கட்சியை இணைத்தார்! ஆதற்கு முன்னர் ஸ்டாலினை சந்தித்து தங்களின் ஆதரவை திமுகவிற்கு தெரிவித்தார். முஸ்லிம் லீக்கின் தொகுதிகளையும் வேட்பாளர்களையும் யார் முடிவு செய்கிறார்கள் என்பதை மக்கள் தற்போது தெளிவாக உணர்ந்துள்ளார்கள்.

ஆரம்ப காலத்தில் முஸ்லிம் லீக்கிற்காக தியாகங்கள் செய்தவர்களின் சம்பவங்களை நாம் கேட்டதுண்டு. அத்தகைய தியாகங்களால் வளர்க்கப்பட்ட முஸ்லிம் லீக் தற்போது திமுகவின் சிறுபான்மை பிரிவு போல் செயல்படுவது வேதனையாக உள்ளது.

அரசியலில் புதிதாக வந்துள்ள மனித நேய மக்கள்கட்சி இவர்களின் நிலையும் தற்போது விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. கடந்த பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு தோல்வி அடைந்தது, தற்போது அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளது என இவர்களின் நிலைப்பாடு தொடர்ந்து விவாதத்திற்கு உள்ளாகியே உள்ளது. இவர்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டது கூட நமக்கு பெரிதாக தெரியவில்லை. அதற்காக கலைஞரை இவர்கள் ஏகத்திற்கும் குறை சொல்வது ஏற்றுக் கொள்வதாக இல்லை. அத்துடன் ஜெயலலிதாவிற்காக வக்காலத்து வாங்குவதும் எந்த விதத்தில் நியாயம் என்று தெரியவில்லை.

‘பாபரி மஸ்ஜித்தை இடித்து விட்டுத்தான் ராமர் கோயில் கட்ட வேண்டும்’ என்று ஜெயலலிதா ஒரு போதும் சொல்லவில்லை என்று கூறுவதை சமுதாயம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. இத்தகைய ஒரு வாதத்தை ஜெயலலிதா நேரடியாக சொல்லவில்லை என்னும் போது இவர்கள் எதற்கு இதனை கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. ஜெயலலிதா அதிரடியான அறிவிப்பை மேற்கொண்ட போது, மற்றவர்களை போல் எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியை மேற்கொண்டார்கள். இறுதியாக மூன்று தொகுதிகளின் பெயர்களை அறிவித்த ஜெயலலிதா எஸ்டிபிஐ போட்டியிடும் ராமநாதபுரத்தையும் இவர்களுக்கு வழங்கினார்.எஸ்டிபிஐ முதலிலேயே தொகுதிகளை அறிவத்த நிலையில் முஸ்லிம் லீக் மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் வேறு தொகுதிகளை கேட்டிருக்கலாம் என்பதே மக்களின் கருத்தாக உள்ளது.

ஆறு தொகுதிகளில் முஸ்லிம் வேட்பாளர்களை அறிவித்துள்ள எஸ்டிபிஐ ஒரு தொகுதியிலாவது மாற்று மதத்தினரை வேட்பாளராக நிறுத்தி இருக்கலாம் என்ற கருத்தும் மக்கள் மத்தியில் உள்ளது. இனி வரும் காலங்களில் இதனை எதிர்பார்க்கலாம் என்று நம்புகிறோம்.

நிலைமைகள் இவ்வாறிருக்க, சமுதாயத்திற்கு சேவை செய்யும் முஸ்லிம் வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

சிந்தனைக்கு

-ஏர்வை ரியாஸ்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s