துறைமுகத்தை கைப்பற்றுமா SDPI?

Posted: ஏப்ரல் 6, 2011 in SDPI


தமிழகம் முழுவதும் எல்லா ஊர்களிலும், தொகுதிகளிலும் சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் படு வேகமாக நடந்து வருகிறது. மாறி மாறி இலவச அறிவிப்புகள் வந்த வண்ணம் இருக்கின்றது. அதே போன்று ஒரு கட்சி மற்ற கட்சியின் வண்டவாலங்களை தண்டவாளம் ஏற்றும் வேலையும் நடந்து வருகிறது. இத்தகைய சூழ் நிலையில் எந்தக் கட்சியோடும் கூட்டணி சேராமால் தனித்துவமாக‌ 7 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ களம் காண்கிறது!
அதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் தொகுதிதான் நாம் இருக்கக் கூடிய துறைமுகம் தொகுதி. இந்த தொகுதியில் தேர்தல் நிலவரம் எவ்வாறு உள்ளது என்பதை சற்று பார்ப்போம்!

கிட்டத்தட்ட 1,25,000 வாக்காளர்களை கொண்ட தொகுதிதான் இந்த துறைமுகம். இந்தத் துறைமுகம் தொகுதியில் முந்தைய தேர்தலில் போட்டியிட்ட‌ திராவிட முன்னேற்ற கழக வேட்பாளர் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் வெறும் 400 ஓட்டுகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் சீமா பஷீர் அவர்கள் இரண்டாம் இடத்தைப் பெற்றார்.

இந்த முறை தி.மு.க துறைமுகத்தொகுதியில் நின்றால் கண்டிப்பாக தோற்கும் நிலை ஏற்படும் என்பதை நன்கு உணர்ந்து யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு இந்த தொகுதியை ஒதுக்கி போட்டியிட வைத்துள்ளனர். இதனால் வரை முஸ்லிம் அல்லாத ஒரு நபரை நிறுத்தி வந்த தி.மு.க இந்த முறை ஒரு முஸ்லிமை வேட்பாளராக அறிவித்ததற்கு காரணம் மறு முனையில் போட்டியிடுவது எஸ்.டி.பி.ஐ-ன் வேட்பாளர் ஒரு முஸ்லிம் என்பதால் மட்டுமே.

துறைமுகம் தொகுதியில் மக்களின் மன நிலை எவ்வாறு உள்ளது என்பதை சற்று ஆராய்ந்த பொழுது, தி.மு.க சார்பில் போட்டியிடும் திருப்பூர் அல்தாஃபிற்கு அவ்வளவாக ஆதரவு இல்லை என்பதாகவே தெரிகிறது. காரணம் காலங்காலமாக கட்சியிலிருந்து பணியாற்றியவர்களுக்கு சீட் கொடுக்காமல் கட்சியை விட்டு பிரிந்து விட்டு மீண்டும் கட்சியில் இணைந்த அல்தாஃபிற்கு சீட் கொடுத்ததால் முஸ்லிம் லீக்கின் பல உறுப்பினர்கள் கடும் கொதிப்பில் உள்ளனர்.

சமீபத்தில் முஸ்லிம் லீக்கின் பெண் நிர்வாகி சகோதரி ஃபாத்திமா முஸஃபர் அக்கட்சியிலிருந்து வெளியேறியது நாம் அனைவரும் அறிந்ததே! அத்தோடு மட்டுமல்லாமல் தேசிய லீக், இ.த.ஜ போன்ற அமைப்புகளும் அல்தாஃபிற்கு ஆதரவு அளிப்பதாக தெரியவில்லை.

தமது பொதுக்குழுவில் திராவிட முன்னேற்ற கழகத்திற்குத்தான் எங்களது ஆதரவு என்று அறிவித்தது தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாத். ஆனால் அதில் உள்ள துறைமுகம் உறுப்பினர்கள் அல்தாஃபிற்கு எப்படி ஆதரவு அளிப்பது? அவர் சரியான பச்சோந்தியாயிற்றே! சமூகத்திற்கு அவரால் எந்த பயனும் ஏற்படப்போவதில்லையே! என்று எண்ணுகின்றனர். அப்படி இருக்க இவர்கள் அல்தாஃபிற்கு ஆதரவாக வாக்களிப்பார்கள் என்று கூற இயலாது. சமீபத்தில் தி.மு.க சார்பாக மண்ணடி தம்பு செட்டி தெருவில் அல்தாஃபை ஆதரித்து ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அதில் முஸ்லிம்க‌ள் சொற்பமாகவே கலந்து கொண்டனர். மீதம் இருந்தது எல்லாம் திராவிட முன்னேற்ற கழகத்தின் தொண்டர்கள் தான். மொத்தம் 120 பேர் தான் அந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள். ஆக மொத்தத்தில் அல்தாஃபிற்கு வாய்ப்புகள் குறைவுதான் என்று கருத்துக்கள் வருகிறது.

இன்னொரு பக்கம் இந்த தொகுதிக்கு கொஞ்சம் கூட சம்பந்தமில்லாத பழ கருப்பையாவை களம் இறக்கி இருக்கின்றது அண்ணா திராவிட முன்னேற்ற கழக்கம். என்னடா இது? முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கக்கூடிய தொகுதியில் முஸ்லிம் அல்லாத ஒரு வேட்பாளரை நிறுத்துகிறார்களே என்று சில பேர் எண்ணலாம்! ஆனால் ஜெயா அவர்கள் சாதரணமானவர்கள் அல்ல. எதுலையும் தந்திரத்தை ஆளக்கூடியவர்! அவ்வளவு லேசாக எண்ணி விடக்கூடாது. இரண்டு பக்கமும் முஸ்லிம் வேட்பாளர்கள் நிற்பதால் முஸ்லிம்களுடைய ஓட்டு கண்டிப்பாக பிரியும், மேலும் ம.ம.க தம்மோடு கூட்டணியில் இருப்பதால் பெறும்பான்மையான வாக்குகளை பெற்ற வெற்றி பெற்று விடலாம் என்று எண்ணுகின்றார் ஜெயா!

ஆனால் “யானைக்கும் அடி சறுக்கும்” என்பது போல இங்கே முஸ்லிம்களுடைய ஓட்டு பிரிவதற்கான வாய்ப்பு மிக குறைவாகவே உள்ளது. அல்தாஃபிற்கு வாக்குகள் கிடைப்பது கடினமே! மேலும் மற்ற தொகுதிகளில் ம.ம.க விற்கு எஸ்.டி.பி.ஐ ஆதரவு தெரிவித்திருப்பதால் அவர்களுக்கு ஆதரவு கொடுக்காமல், கூட்டணி தர்மத்தை மீற முடியாமல் ஆ.தி.மு.கவிற்காக வீரியத்துடன் களம் இறங்க முடியாமல் திக்குமுக்காடி வருகிறது ம.ம.க. இருந்த போதிலும் ம.ம.க வில் இருக்கும் எந்த ஒரு அடிப்படை உறுப்பினரும் எஸ்.டி.பி.ஐ தவிர்த்து அ.தி.மு.கவிற்காக ஓட்டு போட மாட்டான். அப்படி செய்பவர்கள் சமூகத்திற்காக நன்மை செய்பவர்கள் என்று கூற முடியாது.

எஸ்.டி.பி.ஐ துறைமுகத்தில் கடுமையான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. மக்களிடம் அதிக அளவில் ஆதரவை திரட்டி வருகிறது. ஆக இந்த முறை எஸ்.டி.பி.ஐற்குத் தான் அதிக வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கள் வெளியாகிறது. எதுவாயினும் சரி, வெற்றியோ! அல்லது தோல்வியோ! எதுவாயினும் அதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில்தான் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் வார்த்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் கண்டிப்பாக எஸ்.டி.பி.ஐ துறைமுகத்தை கைபற்ற வேண்டும். அது ஒட்டு மொத்த தமிழகத்தையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்பதே பெறும்பான்மையான மக்களின் கருத்தாக உள்ளது.

துறைமுகத்தை கைபற்றமா எஸ்.டி.பி.ஐ ? பொருத்திருந்து பார்ப்போம்!

செய்தி: முத்து

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s