மேற்குவங்காளம்:மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் எஸ்.டி.பி.ஐயில் இணைந்தார்

Posted: ஏப்ரல் 11, 2011 in SDPI

கொல்கத்தா:முர்ஷிதாபாத்தில் ஆரம்பகால கம்யூனிஸ்ட் தலைவரும் பிரபலமான அரசியல்வாதியுமான நஸ்ருல் இஸ்லாம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து விலகி சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

பகவன்கோலா சட்டமன்றத் தொகுதியில் இடதுசாரி கூட்டணி வேட்பாளரை எதிர்த்து சுயேட்சையாக போட்டியிடும் நஸ்ருல் இஸ்லாம் அத்தொகுதியில் எஸ்.டி.பி.ஐயின் சுயேட்சை வேட்பாளராக களத்தில் உள்ளார்.

கறைபடாத கரத்திற்கு சொந்தக்காரரான நஸ்ருல் இஸ்லாம் பகவன்கோலாவில் பெரும் மக்கள் ஆதரவு பெற்ற தலைவராவார். சி.பி.எம் கட்சியின் மண்டல கமிட்டியின் உறுப்பினரான நஸ்ருல் இஸ்லாம் இரண்டு தடவை முஹம்மத்பூர் கிராமப் பஞ்சாயத்து தலைவராகவும், ஒரு முறை பஞ்சாயத் சமிதியிலும் பதவி வகித்துள்ளார்.

நஸ்ருல் இஸ்லாமுடன் அவருடைய ஆதரவாளர்களில் சிலரும் எஸ்.டி.பி.ஐயில் இணைந்துள்ளனர்.

பகவன்கோலாவில் இடதுசாரி கூட்டணியில் சோசியலிஸ்ட் கட்சி சார்பாக சாந்த் முஹம்மது வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். ஆனால், போதைப் பொருள் கடத்தல் மூலமாக கோடிக்கணக்கான பணத்தை சம்பாதித்துள்ள தற்போதைய எம்.எல்.ஏவான சாந்த் முஹம்மதை வேட்பாளராக நிறுத்தக்கூடாது என இடதுசாரி தலைமையிடம் கோரிக்கை விடுத்திருந்தார் நஸ்ருல் இஸ்லாம். ஆனால், அவருடைய கோரிக்கையை மீறி இடதுசாரி கூட்டணி சாந்த் முஹம்மதை வேட்பாளராக அறிவித்தது.

இதனைத் தொடர்ந்து நஸ்ருல் இஸ்லாம் சுயேட்சையாக போட்டியிட தீர்மானித்தார். தனக்கு ஆதரவு கேட்டு அவர் எஸ்.டி.பி.ஐ தலைவர்களை அணுகினார்.

மேற்குவங்காளத்தில் எஸ்.டி.பி.ஐ தலைமையுடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு நஸ்ருல் இஸ்லாம் எஸ்.டி.பி.ஐயில் இணைய தயார் என அறிவித்தார்.

எளிமையான வாழ்க்கையை வாழ்ந்துவரும் நஸ்ருல் இஸ்லாம் பதிகமாரி கிராமத்தில் இரண்டு அறைகளைக் கொண்ட சிறிய வீட்டில் வசித்துவருகிறார். சைக்கிளில்தான் இவர் கிராமத்தில் பயணிக்கிறார். 1960-களில் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்துவதற்காக ஏராளமான தியாகங்களை செய்தவர்தாம் நஸ்ருல் இஸ்லாம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு கட்சியிடம் இதே கோரிக்கையை முன்வைத்தேன். அப்பொழுது கட்சியின் தீர்மானத்தை ஏற்றுக்கொண்டேன். கள்ளக் கடத்தல் உள்ளிட்ட காரியங்களில் குற்றச்சாட்டுக்கு ஆளாகிய சாந்த் முஹம்மதை வேட்பாளராக அறிவித்த நடவடிக்கையை அங்கீகரிக்கவியலாது என நஸ்ருல் இஸ்லாம் தெரிவித்தார்.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. Thameem சொல்கிறார்:

    Alhamdullilah……

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s