தமிழகத்தில் அரசியல் தற்கொலைக்கு தயாராகும் பீஜேபி

Posted: ஏப்ரல் 15, 2011 in POPULAR FRONT

தமிழகத்தில் இந்துத்துவா எதிர்ப்பு பிரசாரம் பல ஆண்டுகளுக்கு முன்பே திராவிட இயக்க தலைவர்களால் தீவிரமாக செயல்படுத்தப்பட்டதால் தமிழகத்தில் பீஜேபி செல்லாகாசாகவே உள்ளது. மத்தியில் பீஜேபி ஆட்சி ஏற்பட்டு, மத்திய அமைச்சர் பதவியை வைத்து திராவிட கட்சிகளுக்கு ஆசை காட்டி, சில ஆண்டுகளுக்கு முன்னர், எம்.எல்.ஏ க்களாகவும், எம்.பி களாகவும் இருந்தனர் தமிழக பீஜேபியினர். மத்தியில் ஆட்சியியை இழந்ததில் இருந்து தமிழகத்தில் பீஜேபி எம்.எல்.ஏ களோ, எம்.பி களோ இல்லை. உள்ளாட்சி அமைப்புகளின் சிலவற்றில் பீஜேபி உறுப்பினர்கள் உள்ளனர். இந்தியாவில் பல்வேறு குண்டு வெடிப்புகளை நடத்திய இந்த சங்பரிவார கும்பலின் அரசியல் பிரிவான பீஜேபி தமிழகத்தில் தீண்டதகாத கட்சியாகவே தற்போது உள்ளது. எந்த பெரிய கட்சியும் கூட்டணிவைக்காத நிலையின் சில்லரை கட்சிகளின் துணையோடு தனியாக தேர்தலை சந்திக்கவிருகின்றது. தமிழகத்தில் பாஜக மட்டும் 223 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது, 233 தொகுதியிலும் வேட்பாளர்களை நிறுத்தி, குறைந்த பட்டச பிரசாரம் செய்ய குறைந்தது ரூ. 50 கோடியாவது தேவைபடும். இத்தனை கோடி செலவு செய்து எவ்வளவு வாக்கு பெற்றும் என்பது கேள்வி குறிதான். தேர்தலில் “தனியாக நிற்பது தற்கொலைக்கு சமம்” என்ற பழமொழி தற்போது பீஜேபிக்கு ரொம்ப பொருத்தமாக உள்ளது

தமிழக பீஜேபியின் தற்போதைய நிலை

பாராளுமன்ற உறுப்பினர்கள் : ஒருவர்கூட இல்லை
சட்ட மன்ற உறுப்பினர்கள் : ஒருவர் கூட இல்லை
மாநகராட்சி கவுன்சிலர் : 2
நகராட்சி வார்டு உறுப்பினர் : 44
பேரூராட்சி வார்டு உறுப்பினர் 148
மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 3
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 31

தமிழகத்தில் பீஜேபியின் அரசியல் செல்வாக்கை (?) பார்க்கும் முன் அதனுடைய வரலாற்றை பார்க்கலாம்

தமிழகத்தில் கடந்த கால பீஜேபியின் அரசியல் நிலவரம்

1980 – ல் 7 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
1986 – ல் 14 தொகுதியில் போட்டியிட்டது, ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
1991 -ல் 113 தொகுதியில் போட்டியிட்டது. ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறவில்லை.
1996 -ல் நடந்த சட்ட சபை தேர்தலில் 142 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி குமரி மாவட்டம் பத்மநாதபுரம் தொகுதில் சி.வேலாயுதன் மட்டும் வென்று முதன் முதலில் தமிழக சட்ட சபையில் நுழைந்தது பீஜேபி.

1998 -ல் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி வைத்து 5 தொகுதியில் போட்டியிட்டு 3 தொகுதிகளில் திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி வென்றது.

1999 -ல் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிடது. 4 தொகுதியில் (கன்னியாகுமரி, திருச்சி, கோயம்புத்தூர், நீலகிரி)வென்றது .

2001 சட்ட சபை தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து 21 தொகுதியில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் (காரைகுடி, மைலாபூர், மயிலாடுதுறை, தளி) வென்றது.

2004 பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 6 தொகுதியில் போட்டியிட்டு ஒன்றில் கூட வெற்றிபெறவில்லை. . இந்த தேர்தலில் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 14,55,899.

2006 சட்ட சபை தேர்தலில் 225 தொகுதிகளில் தனித்து போட்டி யிட்ட பீஜேபி ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியவில்லை. குமரி மாவட்டத்தில் உள்ள மூன்று தொகுதியில் (குளச்சல், கிள்ளியூர், திருவத்தூர்) 2 ஆம் இடம் பிடித்தது.

2009 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு ஒரு இடத்திலும் வெற்றிபெறவில்லை. கன்னியாகுமரி தொகுதியில் மட்டும் 2 – ஆம் இடம் பெற்றது.
இந்த தேர்தலில் பிஜேபி செல்வாக்கு உள்ள தொகுதிகள் என சொல்லப்பட்ட தொகுதிகளில் பீஜேபி பெற்ற வாக்குகளின் விபரம்.

கன்னியாகுமரி – 2,54,474 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
ராமநாதபுரம் – 1,28,322
கோவை – 37,909 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
திருச்சி – 30,329 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
தூத்துகுடி – 39,997
தென் சென்னை – 42,925
நெல்லை – 39,997
வட சென்னை – 23,350
நீலகிரி – 18,690 (கடந்த காலங்கலில் பீஜேபி எம்பி இருந்த தொகுதி)
கிரிஷ்னகிரி – 20,486

பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 7,11,790. இதில் ராமநாதபுரத்தில் பீஜேபி சார்பாக போட்டியிட்ட திருநாவுகரசர் 1,28,322 வாக்குகளை பெற்றுள்ளார், திருநாவுகரசர் இப்போது காங்கிரஸில் சேர்ந்து அறந்தாங்கி தொகுதியில் போட்டிஇடுகின்றார். இதனால் திருநாவுகரசர் பெற்ற வாக்குகளை பீஜேபி இழக்க நேரிடும். கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட பொன். இராதாகிருஷ்னன் மட்டும் 2,54,474 பெற்றார். எனவே குமரி மாவட்டத்தை கழித்துவிட்டு பார்த்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 3,28,994. இவை பாரளுமன்ற தேர்தலில் பெற்ற வாக்குகள். சட்ட மன்ற தேர்தல் என்னும் போது மொத்த வாக்குகளை 6 – ஆல் வகுத்து கொள்ள வேண்டும் இதிலும் மேலே குறிபிட்ட 7 தொகுதிகளை கழித்தால் பீஜேபி பெற்ற மொத்த வாக்குகள் 1,37,837.

பீஜேபியின் செல்வாக்கை பற்றி 6-4-11 – ல் தினமலரில் வெளிவந்த செய்தியில் தமிழகத்தில் பீஜேபி 10 தொகுதிகளில் பலமாக இருப்பதாகவும் 4 தொகுதிகளில் ( குமரி மாவட்டத்தில் 3, மைலாப்பூர் 1) வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுளது. மொத்தமாக தமிழகத்தில் 10 சட்ட மன்ற தொகுதிகள் போக மித முள்ள 224 தொகுதிகளில் பீஜேபியின் ஓட்டு வங்கி வெறும் 1,37,837. எனவே (குமரி மாவட்டத்தை தவிர) மற்ற தொகுதிகளில் 300 முதல் 600 வாக்குகள் பீஜேபிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது (இன்ஷா அல்லாஹ்). மேலும் மைலாப்பூர் தொகுதியில் அதிமுக சார்பில் பிராமண வகுப்பை சேர்ந்த ராஜ லட்சுமி போட்டியிடுவதால் பிராமணர்களின் ஓட்டும் பீஜேபிக்கு கிடைக்காது.

பொதுவாக பீஜேபி தனியாக நிற்க்கும் போது திமுக, திமுக விற்கு எதிரான வாகுகள் மூன்றாவதாக நிற்க்கும் பீஜேபிக்கு கிடைக்கும், ஆனால் இந்த முறை, அதிக பண பலம் படைத்த SRM பச்சமுத்துவின் இந்திய ஜனநாயக கட்சி, மூன்றாவது கூட்டணி அமைத்து அனைத்து தொகுதியிலும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. மேலும் உத்திர பிரதேச முதல் அமைச்சர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி போன்றவையும் அனைத்து தொகுதியில் போட்டியிடுவதால், நடு நிலையாளர்களின் வாக்குகள் அங்கு செல்வதற்க்கு வாய்ப்புகள் உள்ளன. மேலும் சீட் கிடைக்காத சில உதிரி கட்சிகளும் பல தொகுதிகளின் தனித்து போட்டியிட உள்ளன. இதனால் பீஜேபியின் வாக்குகளில் பெருமளவு சரிவு ஏற்படும். எனவே தற்போதுதுள்ள அரசியல் சூழ்நிலையில் குமரி மாவட்டத்தை தவிர வேறு எந்த மாவட்டத்திலும் பீஜேபி இரண்டாம் இடம் கூட வரமுடியாது. மேலும் பீஜேபியை சேர்ந்த பலர் பீஜேபியை விட்டு விலகி உள்ளனர். இப்படிபட்ட சூழ் நிலையில் வரும் தேர்தல், பீஜேபியின் அரசியல் தற்கொலைக்கு அடித்தளமாக அமையும்.

– S.சித்தீக்.M.Tech

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s