காரைக்காலில் நள்ளிரவில் பரபரப்பு; தே.மு.தி.க. வேட்பாளர் மீது தாக்குதல்; கல்வீச்சு-தடியடி

Posted: ஏப்ரல் 16, 2011 in KARAIKAL

புதுவை சட்டசபை தேர்தலில் காரைக்கால் தெற்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் நாஜிமும், தே.மு.தி.க. சார்பில் அசனாவும் போட்டியிடுகின்றனர். நாஜிமுக்கு ஆதரவாக காரைக்கால் மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவரும், நகராட்சி கவுன்சிலருமான சவுதா சின்னத்தம்பி என்கிற அப்துல்காதர் செயல்பட்டு வந்தார்.

இந்த நிலையில் நேற்று அவருக்கு செல்போனில் மிரட்டல் வந்ததாக தெரிகிறது. இதற்கு காரணம் தே.மு.தி.க. வேட்பாளர் அசனாவின் ஆதரவாளர் தான் என்று சந்தேகித்த சின்னத்தம்பியும், தி.மு.க. பிரமுகரான ரசீது என்கிற புறாவும் நேற்று நள்ளிரவு காரைக்கால் டூப்ளக்ஸ் வீதியில் உள்ள அசனாவின் வீட்டுக்கு சென்றனர்.

அங்கு செல்போன் மிரட்டல் தொடர்பாக அசனாவிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் அசனாவை தாக்கி கீழே தள்ளிவிட்டதாக தெரிகிறது. இந்த தகவல் அறிந்த தே.மு.தி.க.வினர் திரளாக அந்த பகுதியில் குவிந்தனர்.

ஏராளமான தி.மு.க.வினரும் அங்கு திரண்டனர். அவர்கள் ஒருவருக்கொருவர் கல்வீசி தாக்கி மோதிக்கொண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுபற்றிய தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு வந்தனர். தி.மு.க.- தே.மு.தி.க. வினரை அங்கிருந்து கலைந்து செல்லுமாறு போலீசார் வலியுறுத்தினர்.

ஆனால் யாரும் கலைந்து செல்லாமல் போலீசார் மீது கல்வீசப்பட்டதாக தெரிகிறது. இதைத்தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பினரையும் அங்கிருந்து கலைந்துபோக செய்தனர். இதற்கிடையே சின்னத் தம்பி, ரசீது ஆகியோர் தாக்கியதால் கையில் காயமடைந்த அசனா காரைக்கால் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

அவரது கார் டிரைவர் சேட்டப்பா உறவினர் அலி உட்பட 3 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். இந்த சம்பவம் காரணமாக காரைக்காலில் பதட்டமான சூழ்நிலை நிலவுகிறது. பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் மோதல் தொடர்பாக இரு தரப்பையும் சேர்ந்தவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

http://www.maalaimalar.com/2011/04/15113856/mid-night-problem-in-karaikal.html

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s