மீடியாப் புரட்சி!!!

Posted: ஏப்ரல் 30, 2011 in ISLAMIC MORAL, NEWS, POPULAR FRONT


மீடியாப் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் சிலர் ‘பேஸ்புக் புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள் மற்றும் சிலர் ‘அல்ஜஸீரா புரட்சி’ என்று வர்ணிக்கிறார்கள். சர்ச்சைக்குரிய ‘விக்கிலீக்ஸ்’ உரிமையாளர் ஜூலியன் அஸான்ஞ் “நான்தான் இந்த மாற்றங்களுக்கு வழிகோலியவன்’’ என்று பகிரங்கமாக உரிமை கோரியிருக்கிறார். இந்த மாற்றங்களின் சாதக, பாதகங்கள் எப்படி இருந்தாலும் உலகில் நடக்கும் எல்லா நிகழ்ச்சிக்குப் பின்னாலும் இந்த ஊடகவியலாளர்கள் இருக்கிறார்கள் ஊடகங்கள் இருக்கின்றன என்பது உண்மை.
இந்தவகையில்,இன்றைய உலகின் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் இந்த ஊடகவியலாளர்கள்தான்’’ என்று பல தசாப்தங்களுக்கு முன்னால் சமூகவியல் அறிஞர் ஒருவர் வர்ணித்தார். அது எவ்வளவு பெரிய உண்மை என்பதை கண்கூடாகக் கண்டு வருகிறரோம். ஊடகவியலாளர்கள் கருத்து உருவாக்குபவர்கள் என்றும் வர்ணிக்கப்படுகிறார்கள். அவர்கள் இன்று புரட்சியை உருவாக்குபவர்களாக மாறியி ருக்கிறார்கள். இது மிகப்பெரிய உண்மை. சில ஆண்டுகளுக்கு முன்னர் மலேசியாவின் முன்னாள் பிரதமர் மகாதீர் முஹம்மத் அவர்கள் ஓர் ஆழமான கருத்தைச் சொல்லி யிருந்தார்.

“யாருடைய கரங்களில் கப்பல் படை இருந்ததோ அவர்கள்தான் 19ஆம் நூற் றாண்டில் சக்திவாய்ந்தவர்களாகத் திகழ்ந் தார்கள் விமானப்படை வைத்திருந்தவர்கள் 20ஆம் நூற்றாண்டின் பலசாலிகளாக திகழ்ந்தார்கள் யாரிடம் ஊடக பலம் இருக்கிறதோ அவர்கள்தான் 21ஆம் நூற்றாண்டின் சக்தியாக இருப்பார்கள்.”

இந்த உண்மையை இன்று நாங்கள் உலகில் காண்கிறரோம். உலக அரங்கிலும் சரி, சர்வதேச மட்டத்திலும் சரி நமது நாட்டைப் பொறுத்தவரையிலும் கூட முஸ்லிம் சமூகம் தனது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு ஒரு தலைநிமிர்ந்த சமூக மாக மாற வேண்டும் என்றிருந்தால் இந்த சமூகம் அறிவூட்டப்பட வேண்டும் இந்த நாடு அறிவூட்டப்பட வேண்டும் சர்வதேசம் அறிவூட்டப்பட வேண்டும். அதற்கான ஒரே வழி சக்திவாய்ந்த மீடியாக்களின் சொந்தக்காரர்களாக நாங்கள் இருப்பதுதான்.

உண்மையை உரத்துச் சொல்கின்ற மீடி யாதான் இந்தக் காலத்தின் ஜிஹாத். இக் காலத்தில் நாங்களும் நீங்களும் சுமக்க வேண்டிய ஆயுதம் அதுதான். கத்தியில்லாத ரத்தமில்லாத யுத்தத்தை செய்பவர்கள் சாதகமாகவோ பாதகமாகவோ இந்த ஊடகவியலாளர்கள்தான். அவ்வளவு பெரிய சக்தியை அவர்கள் பெற்றிருக்கிறார்கள்.

“இன்று இஸ்லாமிய உலகத்திற்கு மூன்று வகைகயான மனிதர்கள் தேவைப்படுகிறார்கள். முதலாவது புத்திஜீவிகள் (Intellectuals), இரண்டாவது துறைசார் நிபுணர்கள் (Professionals) மூன்றாவது ஊடகவியலாளர்கள் (Media Persons)

எந்தளவு தூரம் உங்களுடைய பொறுப்பு மிக மகத்தானது என்பதை நினைத்துப் பாருங்கள். ஊடகத் துறை என்பது ஒரு தொழில் அல்ல அது ஒரு Mission அல்லது ஒரு Noble Vision.

ஒரு முஸ்லிம் ஊடகவியலாளர் இதனை ஒரு தொழிலாகக் கருதாமல் ஏனையவர்க ளுக்கு செய்யும் சேவையாகக் கருதுவார். முஸ்லிம் ஊடகவியலாளர் ஒர் இனவாதி அல்ல அவர் ஒரு கொள்கைவாதி

இந்த நாட்டில் வாழும் ஒரு சாரார் மொழியால் அடையாளப்படுத்தப்படுகிறார்கள். இன்னொரு சாரார் பிரதேசத்தால் அடையாளப்படுத்தப்படுகின்றனர். இன்னுமொரு சாரார் இனத்தால் அடை யாளப்படுத்தப்படுகிறார்கள். இந்த நாட்டி லும் சரி, சர்வதேசத்திலும் சரி ஒரு கொள்கையால் அடையாளப்படுத்தப்படு கின்ற ஒரே சமூகம் முஸ்லிம்கள்தான்.

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அஞ்சி, பயந்து கொள்ளுங்கள். உண்மை பேசுபவர்களோடு இருங்கள்.” (அல்குர்ஆன்)

நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடத்தில் ஒரு சந்தர்ப்பத்தில் இவ்வாறு வினவப்பட்டது: “ஒரு முஃமின் கோழையாக இருப்பானா? நபியவர்கள் சொன்னார்கள் சிலபோது இருக்கலாம். ஒரு முஃமின் உலோபியாக இருப்பானா? நபியவர்கள் சொன்னார்கள் சிலபோது உலோபியாகவும் இருப்பான். ஒரு முஃமின் பொய் சொல்பவனாக இருப்பானா என்று கேட்கப்பட்டபோது ஒரு முஃமின் ஒருபோதும் பொய் சொல்பவனாக இருக்கவே மாட்டான். என நபியவர்கள் சொன்னார்கள்.

மற்றொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் சொன்னார்கள்: “ஒரு முஃமினிடத்தில் எல்லா கெட்ட பண்புகளும் இருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பொய் அவனை அணுகவே மாட்டாது.”

எல்லோருமாக இணைந்து இந்தப் பணியைச் செய்ய அல்லாஹ்
அருள் புரிவானாக!

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s