அயோக்கியத்தனமான நாடு என்பதை அமெரிக்கா மீண்டும் நிரூபித்துள்ளது’-பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

Posted: மே 5, 2011 in POPULAR FRONT

புதுடெல்லி:உஸாமா பின்லேடன் தொடர்பாக வெளிவரும் செய்திகள் உண்மையெனில் உலகின் நம்பர் 1அயோக்கியத்தனமான நாடு என்பதை அமெரிக்கா மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளது என பாப்புலர்ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் வெளியிட்டுள்ள அறிக்கையில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

உஸாமா கொலைத் தொடர்பான மர்மங்கள் இதுவரைமுடியவில்லை. செய்திகளின் உறைவிடமாகஅமெரிக்கா திகழ்வதால் இவ்வாறு தான் செய்திகள் வெளியாகும். பலகீனமான நாடுகள் மீதான தங்களின் மேலாதிக்கத்தை உறுதி செய்ய எல்லாவித சர்வதேசசட்டங்களையும், சாதாரணமரியாதைகளையும் காற்றில் பறத்திக் கொண்டு அமெரிக்கா மேற்கொள்ளும்நடவடிக்கைஉலகில்மிகப்பெரியஅயோக்கியத்தனமான நாடு தாங்கள் தாம் என்பதை நிரூபிக்கின்றது என்று கூறினார்.

உலக வர்த்தக மையத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 2001-ஆம் ஆண்டு அதற்கு காரணமானவர் எனஅமெரிக்கா குற்றஞ்சாட்டிய உஸாமா பின் லேடனை ஒரு சர்வதேச தீர்ப்பாயத்தின் முன்பாக அல்லது கத்தர், சவூதி அரேபியா போன்ற நாடுகளிடமோ ஒப்படைக்க தயார் என தாலிபான் அரசுஅறிவித்திருந்தது.

ஆனால், அந்த வாக்குறுதியை நிராகரித்த அமெரிக்கா ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டது. தொடர்ந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் நடத்தப்பட்ட அக்கிரமமான தாக்குதல்களில் லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.ஏராளமானகுழந்தைகள்அனாதைகளாக்கப்பட்டனர்.

இதர நாடுகளின் இறையாண்மையின் மீது ஆக்கிரமிப்பை மேற்கொண்டு சர்வதேச சட்டங்களையும், மனிதஉரிமைகளையும் மீறும் அமெரிக்கா, குவாண்டனாமோ உள்ளிட்ட வெளிப்படையான மற்றும் ரகசியமானஏராளமான சித்திரவதை மையங்களை நடத்துகிறது.கிட்டத்தட்ட200பேர்குவாண்டானாமோவில்விசாரணையின்றி இரும்புக் கம்பிகளின் பின்னால் அடைக்கப்பட்டுள்ளனர். தங்களது நட்பு நாடுகளில் சி.ஐ.ஏ ரகசிய சிறைகளை நிர்மாணித்து ஆயிரக்கண-க்கானோரைசித்திரவதை செய்வதும் புதிய செய்தியல்ல.

ஒருவரின் இறந்த உடலை கடலில் வீசுவது என்பது எல்லாவித மரியாதை-களையும்,மதச்சட்டங்களையும் பகிரங்கமாக மீறும் செயலாகும். எல்லா மதங்களையும் மதிக்கிறேன் எனக்கூறும் பாரக் ஒபாமாவிடமிருந்து தான் இத்தகையதொரு நடவடிக்கை வெளபட்டுள்ளது .முஸ்லிம்களை கொந்தளிப்பில் ஆழ்த்த விரும்புவோரின் கைப்பாவையாக ஒபாமா மாறியுள்ளார் என்பதன்
நிரூபணம் தான் இச்செயலாகும்.

எனினும் உஸாமாவின் படுகொலை மூலமாக ஆப்கானிலும், ஈராக்கிலும் ஆக்கிரமிப்பை தொடர்வதற்கான கடைசித்துருப்புச் சீட்டும் அமெரிக்காவிற்கு நஷ்டமாகியுள்ளது.
ஆக்கிரமிப்பிற்கு எதிராக உள்நாட்டில் நடைபெறும் எதிர்ப்பு போராட்டம் சதாம் ஹுஸைன் மற்றும் உஸாமா பின்லேடன் மரணத்தின் மூலமாக முடிந்துவிடும் என நவீன காலனியாதிக்க சக்திகள் கருதுவது ஆபத்தமாகும்.

ஆக்கிரமிப்பாளர்களின் கடைசி படை வீரரும் நாட்டை விட்டு வெளியேறும் வரை மக்கள் எதிர்ப்பு போராட்டம் தொடரும் என்பதற்கு வரலாறு சான்று பகர்கிறது. எல்லாவிதமான பயங்கரவாதத்தையும்
எதிர்ப்பதுடன் அயோக்கியத்தனமான நாடுகளின் மேலாதிக்கம் இறுதியாக தோற்கடிக்கப்படவும்,எல்லா நாடுகளின் சுதந்திரமும், இறையாண்மையும் பாதுகாக்கப்படவும் அதன் மூலமாக உலகத்தில்
அமைதி தவழவும் வேண்டுமென எதிர்பார்ப்பதாக இ.எம்.அப்துற்றஹ்மான் அறிக்கையில் கூறியுள்ளார்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s