துபையில் புதுப் பொலிவுடன் நடைபெற்ற Better Family! Better Society!! இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி

Posted: ஜூன் 13, 2011 in POPULAR FRONT

Emirates India Fraternity Forum (EIFF) ஏற்பாடு செய்திருந்த Better Family!
Better Society!! என்ற இஸ்லாமிய சமூக நிகழ்ச்சி கடந்த 10.06.11 வெள்ளியன்று அல் கிஸைஸில் புதுப் பொலிவுடன் நடைபெற்றது.

சரியாக மாலை 6 மணிக்கு நிகழ்ச்சி துவங்கியது. ஆரம்பமாக அருள்மறை வசனங்களை ஓதினார் சகோ. முஜீப் அவர்கள். அதன் பின்னர் சகோ. ஆஷிக் அவர்கள்அனைவரையும்வரவேற்று,அறிமுகவுரைஆற்றினார்.நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவரும் அவரே.DSC03209

பின்னர் “நம்மை நாமே புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. வலசை ஃபைஸல் அவர்கள் உரை நிகழ்த்தினார். சமுதாயப் புனரமைப்புக்கு மூல காரணமாக விளங்குவது தன்னைத் தானே புனரமைப்பதுதான் என்று கூறிய அவர், சுய மாற்றத்திற்கான வழிவகைகளை அழகுற எடுத்துரைத்தார்.

சமுதாயப் புனரமைப்பின் அடுத்த காரணியாக விளங்கும் “குடும்பத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. எம்.எஸ். அப்துல் ஹமீது அவர்கள் உரை நிகழ்த்தினார். குடும்பம் ஒரு பல்கலைக்கழகமாக மிளிர வேண்டுமெனில் அங்கே செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து
குறிப்பிட்ட அவர், குழந்தை வளர்ப்பு குறித்து விரிவாக உரை நிகழ்த்தினார்.

இறுதியாக, நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக “சமுதாயத்தைப் புனரமைப்போம்” என்ற தலைப்பில் சகோ. அ. செய்யது அலீ அவர்கள் உரை நிகழ்த்தினார். முஸ்லிம் சமுதாயம் தொய்வுற்ற பொழுதெல்லாம்
வரலாறு நெடுகிலும் அது புனர் நிர்மாணம் செய்யப்பட்டதை வரலாற்றுக் குறிப்புகளோடு நினைவு கூர்ந்தார் அவர். இன்றைய இந்திய முஸ்லிம்களின் நிலையைக் குறிப்பிட்ட அவர், சமுதாய மாற்றத்திற்கு முஸ்லிம்கள் செய்ய வேண்டிய கடமைகளைப் பட்டியலிட்டார்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s