ஆரியப் பேய்களை அடித்தோட்ட வேண்டும்!

Posted: ஜூன் 19, 2011 in POPULAR FRONT

JUNE 19, மதுரை: “”திராவிட இனம் என்பதே இல்லை. திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர்,” என, மதுரையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி குறிப்பிட்டார்.

மதுரைக் கல்லூரியில் ஆங்கில துறை பேராசிரியர்

சுப்ரமோனி எழுதிய “பரமஹம்சா-த வேதாந்திக் டேல்’ நூல் வெளியீட்டு விழா நடந்தது. நூலை வெளியீட்டு சுப்ரமணியசாமி பேசியதாவது: அமெரிக்காவில் பொருளாதார மேம்பாடுக்கு உதவும் இந்துத்துவா கொள்கை என்ற தலைப்பில் என்னை பேச அழைத்தனர்.

அந்தளவுக்கு அமெரிக்காவில் இந்துத்துவா, சனாதன தர்மத்தை கை பிடிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்தியா ஆசிரமங்களில் அமெரிக்க சாதுக்கள் அதிகளவில் உள்ளனர். திராவிட இனம் என கருணாநிதி போன்றோர் பேசுகின்றனர். திராவிட இனம் என்பதே இல்லை.

திராவிடம் என்பது ஒரு பகுதியின் பெயர். தென்னிந்தியாவின் ஒரு பகுதி திராவிடம் என ஆதிசங்கரர் கூறியுள்ளார். ஆங்கிலேயர் திராவிடர், ஆரியர் என இன பாகுபாட்டை ஏற்படுத்தினர்.

திராவிடன் என்று ஒர் இனமே இல்லையாம் , முதலில் கொஞ்சம் அறிவியல் உண்மைகளைப்பார்ப்போம். ஆரிய, திராவிட இனங்கள் இருப்பது உண்மை. Biology படித்தவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன். மனித உடலில் உள்ள செல்களில் இரண்டு இடங்களில் டி.என்.ஏ. இருக்கிறது.

1 ) உட்கரு (Nucleus) 2 ) மைட்டோகாண்ட்ரியா. இதிலே உட்கரு டி.என்.ஏ. என்பது தாயிடமிருந்து பாதி குரோமோசோம்கள், தந்தையிடமிருந்து பாதி குரோமோசோம்கள் இணைந்து உருவாகிறது. மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. தாயிடமிருந்து மட்டுமே செல்கிறது. இந்தியாவின் பலதரப்பட்ட மக்களை ஆராய்ந்து எடுக்கப்பட்ட அறிவியல்பூர்வமான ஆய்வுகள் ஒரு விஷயத்தை தெளிவாக கூறுகின்றன.

தென்னிந்தியர்களுடைய ( பிராமணர் அல்லாதோர் ) உட்கரு டி.என்.ஏ. மற்றும் மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. இரண்டுமே திராவிட ( தென்னிந்திய ) வகையை சார்ந்தவை. அதாவது அவர்களது தாய்வழி குரோமோசோம்களும் தந்தை வழி குரோமோசோம்களும் திராவிட வகையை சார்ந்தவை. மாறாக பிராமணர், வட இந்தியாவின் பெரும்பாலான மக்களுடைய செல்களில் உள்ள மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ. திராவிட வகையை சார்ந்தவை.

ஆனால் அவர்களுடைய உட்கரு டி.என்.ஏ.வில் தாய்வழி திராவிட வகை குரோமோசோம்களும், தந்தைவழி ஆரிய வகை குரோமோசோம்களும் உள்ளன. இதிலே ராஜபுத் போன்ற இனத்தாருடைய தந்தைவழி குரோமோசோம்கள் நார்டிக்- ஆரியர்களுடைய குரோமோசோம்களை ஒத்தும், பிராமணர்களுடைய தந்தை வழி குரோமோசோகள் மத்திய ஆசியா மற்றும் யூதர்களின் குரோமோசோம்களை ஒத்தும் காணப்படுகின்றன.

இப்போ இதனோடு சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டதையும், அந்த மக்களின் பெண்களை ஆரியர்கள் அபகரித்துக்கொண்டனர் என்று சொல்லப்படுவதையும் ஒப்பிட்டு பார்த்தால் உண்மை புரியும். இந்த ஆய்வை பிரிட்டிஷ்காரர்கள் செய்யவில்லை. பிரித்தாளும் சூழ்ச்சி என்றும் இதை பொத்தாம்பொதுவாக சொல்லிவிட முடியாது.

ஏன்னா இதை சொன்னது ஃபின்லாந்து நாட்டு அறிவியலமைப்பு. சொல்லப்பட்ட காலமும் சுதந்திரத்துக்கு முன்பு அல்ல பிரித்தாளும் சூழ்ச்சி என்று சொல்வதற்கு. இதை அவர்கள் 2000வது ஆண்டு வெளியிட்டனர். அப்போதிருந்த பா.ஜ.க. ஆட்சி இதை வெளியே பரவலாக தெரிந்துவிடாதபடி பார்த்துக்கொண்டது. இதை தவிர இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட எந்த ஆய்விலும் 5000 ஆண்டுகளுக்கு முந்தைய குதிரையின் படிமங்கள் கிடைக்கவில்லை.

ஆரியர்கள் தமது குதிரைப்படையின் காரணமாகத்தான் திராவிடர்களை தோற்கடித்தனர் என்பதும், 5000 ஆண்டுகளுக்கு முன்னர்தான் சிந்துசமவெளி நாகரீகம் அழிக்கப்பட்டது என்பதையும் கவனிக்கவும். தவிர இந்த 5000 வருடத்துக்குட்பட்ட மன்னர்கள்தான் குதிரைப்படை வைத்திருந்தனர். இது எல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். என்னதான் விளக்கம் சொன்னாலும் ஏற்க விரும்பாத சிலருக்காக இந்த விளக்கம்.: ஆரியர்கள் திராவிடர்கள் என்று இரண்டு இனங்கள் உண்டு என்பது எங்கள் நம்பிக்கை.

ஆணும், ஆணும் சேர்ந்து பிள்ளை பெற்றுக்கொள்ள முடியும், பூமியை பாயாக சுருட்டமுடியும், மனித இனம் உருவாகி 1 லட்சம் வருடங்களே ஆகியுள்ள நிலையில் 17 லட்சத்து 50 ஆயிரம் வருடத்துக்கு முன்னாடி ஒரு மனிதர் பாலம் கட்ட முடியும், பூமியும் வராகமும் சேர்ந்து மனிதக்குழந்தையை பெற்றுக்கொள்ள முடியும் என்று சிலர் நம்பும்போது ஆரியர், திராவிடர் என்று நம்புவது முற்றிலும் சரியே.

இது வரலாறு: ஆரிய திராவிடப் பகுப்புகள் ஆங்கிலேயரின் சூழ்ச்சியாம் ! ஆங்கிலேயர் ஆண்டது வெறும் 200 ஆண்டுகள் தான். ஆனால் வாழ்ந்த இடம் வறண்டுபோனதால் கைபர், போலன் கணவாய்கள் வழியாக ( நடக்க முடியாத பெண்களையும் குழந்தை முதியோரையும் அம்போவென விட்டுவிட்டு) இந்தியாவுக்குள் வந்த ஆரியர்கள் நாடாளும் ஆசையில் தம்மை உயர்குலத்தோர் என்றும், கடவுளுக்கு நெருக்கமானவர்கள்.. என்றும் சொல்லிக்கொண்டு அரசர்களுக்கு ஆலோசகராக இருந்து ஆட்சிகளைக் கைப்பற்றியது வரலாற்றில் உள்ளது.

தென்னகத்தில் (கேரளம், தமிழ்நாடு என்று பிரிக்கப்படாத காலத்தில்) ஒற்றுமையாய் வாழ்ந்துவந்த திராவிட மக்களிடையே சாதி மதப் பாகுபாடுகளை ஏற்படுத்தி அவற்றின் பெயரால் அடிமைப்படுத்தி ஆண்டுவந்த ஆரியர்களின் கொட்டத்தை திப்புசுல்தான் ஒழித்தார் என்பதும் வரலாற்று உண்மை .

தென்னகத்தின் பூர்வகுடிகள் தான் திராவிடர்கள். அவர்கள் மதம் என்ற ஒன்றால் பிரித்தறியப்படவில்லை.  இப்போதும் செல்லமுத்து மாரியம்மன் கோவில் திருவிழாவில் மோர்ப்பந்தல் அமைக்கும் மரைக்காயரையும், பிள்ளைக்கு உடல்நலமாக வேண்டும் என்று தர்ஹாவில் மந்திரித்து புனிதநீர் தெளித்துக்கொள்ளும் பிராமணர் அல்லாத மற்ற இந்துக்களையும் எனக்குத் தெரியும் .

ஆதி திராவிடர் பகுதியில் கட்டப்பட்ட கோவிலுக்கு குடமுழுக்கு செய்யமறுத்த குருக்களையும் எனக்குத் தெரியும். இப்போது சொல்லுங்கள் யார் திராவிடர் என்று … “A debt should be paid off till the last penny; An enemy should be destroyed without a trace”. இது ஆரிய மாமணி சாணக்கியனின் வாக்கு. இதைப்பின்பற்றும் இந்துத்துவாவினரின் ஊதுகுழல் தான் இந்த சுப்பிரமணிய சாமி.

வரவிருக்கும் ஆபத்து; இலங்கையின் பூர்வகுடிகளான தமிழர்கள் இப்படித்தான் வேரோடும் வேரடிமண்ணோடும் அழித்தொழிக்கப் படுகிறார்கள். ஆட்சியதிகாரத்தைக் கைக்கொள்ள நினைக்கும் இந்துத்துவாவின் எதிரி திராவிடர்களின் சமயப்பொறை தான் . ஆகவே திராவிடர்களை அழிக்கத் தலைப்படுகிறார்கள் , அதின் முதல்படிதான் சுப்பிரமணிய சாமியின் இந்தப் பேச்சு. இத்தகையோரின் பிரித்தாளும் சூழ்ச்சிகளுக்கு நாம் இரையாகிவிடக் கூடாது..

இல்லையெனில் இன்று, கணினிக்கு ஏற்ற மொழி சமஸ்கிருதம், தமிழ் எழுத்துக்களும் பிராமியிலிருந்து வந்தவை என்று சொல்வதுபோல் நாளை சொல்வார்கள் திராவிடர்களை ஆளப் படைக்கப்பட்டவர்கள் ஆரியர்கள், மனிதர்களாக வாழும் முறை மனு சாஸ்திரம் என்று.

திராவிடம் என்பது ஒரு பகுதியெனில் அதில் பன்னெடுங்காலமாய் வாழ்வோர் திராவிடரல்லாமல் வேறு யார்? தமிழர்களே நாம் தான் திராவிடர்கள், இந்த ஆரியப் பேய்களை அடித்தோட்ட வேண்டும். விசமக் கருத்துக்களைப் பரப்பும் சுப்பிரமணிய சாமி போன்றோருக்கு சரியான பதிலடி கொடுக்கப்பட வேண்டும்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s