போர்ப்ஸ்கஞ்ச்:உயிர்போகும் கடைசி நிமிடங்களில் கலிமா சொல்லிக்கொண்டிருந்த எனது மகனை அடித்து உதைத்தார்கள்-ஆமீனா காத்தூன்

Posted: ஜூன் 19, 2011 in INDIAN MUSLIM, NEWS

புதுடெல்லி:போலீசின் குண்டடிபட்டு கடைசி மூச்சை விட்டுக் கொண்டிருக்கும் வேளையில் உரக்க’கலிமா’ சொல்லிக் கொண்டிருந்த எனது மகனை ’கலிமா சொல்வதை நிறுத்து’ எனக்கூறி போலீசார்அடித்து உதைத்தார்கள் என ஆமினா காத்தூன் கூறும் பொழுது அவரது கண்கள் கண்ணீரை சொரிந்தன.

மேலும் விபரங்களை கேட்ட பத்திரிகையாளர்களிடம் இப்பொழுதும் கிராமத்தில் போலீஸ் உள்ளது.வேறு ஏதேனும் கூறுவதற்கு பயமாக உள்ளது என மெதுவாக கூறி மகேஷ் பட்டின் அருகே அச்சம்மிகுந்து அமர்ந்திருந்தார் தாஹிருல் காத்தூன்.

பீகாரின் அராரியா மாவட்டத்தில் போர்ப்ஸ்கஞ்சில் பொதுவழி சாலையை ஆக்கிரமிக்க முயன்றதைஎதிர்த்து போராட்டம் நடத்திய முஸ்லிம் கிராமவாசிகள் மீது கடந்த ஜூன் 4-ஆம் தேதி பீகாரின் காவி கறைபடிந்த போலீஸ் நடத்திய அநியாயமான துப்பாக்கிச்சூட்டில் சொந்தங்களை இழந்தவர்களுடன்பாலிவுட் திரைப்பட இயக்குநரும், சமூக ஆர்வலருமான மகேஷ்பட், சமூக சேவகர் ஷப்னம் ஹாஷ்மி ஆகியோர் நடத்திய பத்திரிகையாளர்கள் சந்திப்பு பீகார் போலீஸின் கொடூர முகத்தை வெளிக்கொணர்ந்தது.

போர்ப்ஸ்கஞ்சில் விசாரணை நடத்திய உண்மை கண்டறியும் குழு சேகரித்த தகவல்களை வெளியிடமகேஷ் பட்டும், ஷப்னம் ஹாஷ்மியும் இணைந்து டெல்லியில் பத்திரிகையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினர். கொல்லப்பட்டவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் இழப்பீடும், காயமடைந்தவர்களுக்கு ஒருலட்சம் ரூபாய் இழப்பீடும் வழங்க வேண்டும் என இருவரும் கோரிக்கை விடுத்தனர். சனிக்கிழமை காலை ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியாகாந்தியை சந்தித்த இவர்கள் நாளை மனித உரிமை கமிஷனிடம் புகார் அளிப்பர்.

கர்ப்பிணியான பெண், ஆறுமாத குழந்தை உள்பட 5 பேரை போலீஸ் சுட்டுக்கொன்றதாக ஆமினாகாத்தூன் கூறுகிறார். பா.ஜ.கவின் பீகார் மாநில தலைவர் சுசில்குமார் மோடியின் மகன்நடத்தும் குளுகோஸ் தொழிற்சாலைக்காக பல வருடங்களாக நாங்கள் உபயோகிக்கும் சாலையைஆக்கிரமிக்க முயன்றதை கண்டித்து போராட்டம் நடத்தினோம்.

வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு போராட்டம் நடந்த இடத்திற்கு சென்றோம்.ஆக்கிரமிக்கப்பட்ட இடத்தில் சட்டத்திற்கு புறம்பாக கட்டப்பட்ட மதில் சுவரை இடித்ததற்குபழிவாங்கும் விதமாக போலீஸ் கண்ணில் கண்டவர்களையெல்லாம் சுட்டுத்தள்ளியது-காத்தூன் கூறுகிறார்.

ஆண்கள் மஸ்ஜிதில் தொழுகையை முடித்த கையோடு போராட்டம் நடத்த சென்றனர். கைக்குழந்தைகளுடன்குண்டடிப்பட்டு விழுந்த பெண்களையும், குழந்தைகளையும் லத்தியால் அடித்த போலீஸ் வீடுகளில்நுழைந்து கண்ணில் கண்டவற்றையெல்லாம் உடைத்தது என ஆமினா கூறுகிறார்.

எல்லோரும் பாபா ராம்தேவின் உண்ணாவிரதத்தை கொண்டாடும் வேளையில் தான் நாங்கள் உண்மை நிலையைகண்டறிய பீகாரின் போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றோம் என மகேஷ் பட் கூறுகிறார். சச்சார் கமிட்டியின்அறிக்கையில் கூறியபடி முஸ்லிம்கள் தாழ்த்தப்பட்ட மக்களை விட மோசமான சமூக சூழலில் வாழும் மாவட்டம் தான் போர்ப்ஸ்கஞ்ச் உள்படும் அராரியா மாவட்டம்.

இத்தகையதொரு சூழலில் வாழும் மக்களை இவ்வாறு கொன்றொழித்துவிட்டா சிறுபான்மைநலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்? மகேஷ் பட் கேட்கிறார். போலீஸ் வகுப்புவாதமயமாக்கப்படும் வேளையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் மெளனம் சாதிப்பது மர்மமாக உள்ளது. நிதீஷ்குமாரை சந்திப்பதற்கு அவரை 26 முறை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். ஒரு முறை கூட அவர் பதிலளிக்கவில்லை என மகேஷ் பட் கூறினார்.

இந்த ‘நாய்களின் கிராமத்தை’ சிறையாக மாற்றுவோம் என பீகார் மாநிலத்தின் துணை முதல்வர் கூறிய மறுநாள் தான் கர்ப்பிணியையும், ஆறுமாத பிஞ்சு க்குழந்தையையும் போலீஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றது என சமூக ஆர்வலர் ஷப்னம் ஹாஷ்மி கூறுகிறார். ஜூன் மூன்றாம் தேதி சமரச பேச்சுவார்த்தைக்குப் பிறகு மேற்கண்ட மிரட்டலை பீகார் துணை முதல்வர் விடுத்தார்.

கிராமவாசிகளின் உடலில் பாய்ந்த 14 தோட்டாக்களில் ஒன்றை தவிர மீதமுள்ள 13 தோட்டாக்களும் இடுப்புக்கு மேலே துளைத்துள்ளன. போராட்டத்தில் ஈடுபட்டோரை கலைப்பதற்கு அல்ல மாறாக கொலை

செய்வதே பீகார் போலீஸின் நோக்கம் என ஷப்னம் ஹாஷ்மி கூறினார்.

Advertisements
பின்னூட்டங்கள்

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s