உம்மத்தின் பாதுகாப்பே! பாப்புலர் ஃப்ரண்டின் உயிர் மூச்சு

Posted: ஜூன் 30, 2011 in POPULAR FRONT

அஸ்ஸலாமு அலைக்கும் – அன்பு சகோதரர்களே,

இன்று உம்மத்தின் பாதுகாப்பு என்ற பணியை அல்லாஹ்வின் உதவியால் பாப்புலர் ஃப்ரண்ட் மட்டுமே இந்தியா முழுவதும் செய்கிறது. சென்னை, திண்டுக்கல், முத்துப்பேட்டை போன்ற இடங்களில் விநாயகர் சதுரத்தி என்ற பெயரில் முஸ்லிம்களை அச்சுறுத்தல், பல கிராமங்களில் முஸ்லிம் பெண்களிடம் முஸ்லிம் என்பதற்காக குறி வைத்து கேலி செய்தல்,
முஸ்லிம்களை கிள்ளுக்கீரையாக நினைத்து ஆங்காங்கே தாக்குதல், கொலைகள் இப்படி எத்தனையோ சம்பவங்கள்…..தமிழகத்தில் சுமார் 15 வருடங்களுக்கு முன் நடந்த கொடுமைகளை இப்போதைய இளந் தலைமுறை தெரிந்திருக்க கூட வாய்பில்லை…

அன்று வெறுமனே மசாயீல், சகோதர சண்டை போட்ட உம்மத் பேச துறந்த RSSயின் உண்மை முகம், அவர்களின் சதி, முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்திரித்த போது உம்மத் கூனி குறுகி இருந்த நேரத்தில் உண்மையான தீவிரவாதிகள் RSS காரர்களே என்ற பகிங்கர முழக்கம் (இன்று உலகிற்கே தெரிந்தது), கோவையிலும், மேலப்பாளையத்திலும் இன்னும் சில ஊர்களிலும் தீவிரவாத பழி மற்றும் ஏராளமான பொய் வழக்குகள் முஸ்லிம் இளைஞர்கள் மீது போடப்பட்ட போது நீதிக்கான போராட்டம், கடுமையான காவல்துறை சித்தரவதைகளும் கெடுபிடிகளையும் சந்திக்க போதும் பின் வாங்காமல் அல்லாஹ்வின் உதவி மட்டுமே வைத்துகொண்டு தன்னந்தனியாக போராட்டம்(130 வழக்குகள்), அதில் வெற்றி,   காஷ்மீர் பற்றி யாருமே பேசாத போது அங்கு நடக்கும் மனித உரிமை மீறல்களை வெட்ட வெளிச்சமாகிய துணிவு, உலகில் நடக்கும் முஸ்லிம் போராட்டங்களை பற்றி பிரசாரம் செய்து உம்மத்திற்கு போராட்ட குணத்தை புகுத்தியது…. இப்படிபட்ட பணிகளை கடந்த 20 வருடங்களாக செய்து இன்று அல்லாஹ்வின் உதவியால் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்ததை தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் RSS ஆல் நடத்த முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன்னும் சில வருடங்களில் இந்தியாவில் எங்குமே(குஜராத் உட்பட) நடத்த முடியாது என்ற நிலையை ஏற்படும்.

இந்த உம்மத்தின் கண்ணியம் பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்ட் சகோதரர்கள் கொடுத்த விலை – குடும்பத்தில் புறக்கணிப்பு, பல்வேறு வழக்கு மற்றும் சித்திரவதைகள், வேலை இழப்பு மற்றும் தொழில் நஷ்டங்கள், உயிர் இழப்பு இப்படி எத்தனையோ தியாகங்கள்….விளம்பரம் இல்லாமல் அல்லாவிற்காக, சமூகத்திற்காக எதையும் தியாகம் செய்த செய்ய தயாராக உள்ள சகோதரர்கள்..
இன்று முஸ்லிம்கள் அநீதிக்கெதிரான போராட்டத்தில் இலகுவாக குதிக்கிறார்கள் என்றால் அதில் அல்லாஹ்வின் உதவியும் பாப்புலர் ஃப்ரண்ட் யின் பங்கும் நிச்சயமாக இருக்கிறது. இந்த தியாக பணி தொடர, இந்தியா முழுவதும் விரிவடைய, இந்தியாவில் முஸ்லிம் என்று கண்ணியமுடன வாழ(குஜராத் உட்பட), அழு குரல்களும் கூக்குரல்களை கேட்காத அதை பற்றி தெரியாத முஸ்லிம் சமூகம் தோன்ற உங்கள் ரமலான் ஜகாத்தை பாப்புலர் ஃபரண்ட்க்கு வழங்குங்கள்.
நபி (ஸல்) அவர்கள் இறுதி பேருரையில் கூறியுள்ளார்கள் ”இந்த துல்ஹஜ் மாதம், துல்ஹஜ் 9ஆவது நாள், இந்த மக்கா மாநகரம் எவ்வளவு புனிதமானதோ அதே போன்று தான் முஸ்லிம்களின் உயிர்களும், உடைமைகளுகம், கண்ணியமும் புனிதமானது.” என்று கூறினார்கள். அத்தகைய கண்ணியம் பெற பாப்புலர் ஃப்ரண்ட்க்கு உதவுங்கள்.

ஜஸ்ஸாக்கல்லாஹ்.

இப்படிக்கு

நெ.முஹம்மது
பாப்புலர் ஃப்ரண்ட், சென்னை.
098406 89676

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s