எழுதுவதெல்லாம் எழுத்தல்ல !

Posted: ஜூலை 11, 2011 in ISLAMIC MORAL

போர்களத்தில் சிந்தும் குருதியை விட அறிஞனின் பேனா மை க்கு வலிமை  அதிகம் –  இந்த சொல்லில் தான் எத்தனை எதார்தங்கள்…
பத்திரிக்கை துறை … உலக வரலாற்றில் பல மாற்றங்களை ஏற்படுத்திய ஒரே துறை என்றால் அது பத்திரிக்கை துறை தான் … எத்தனையோ மாற்றங்கள் .. உலக நியதிகளை புரட்டி போட்ட வரலாறுகள் பத்திரிகை துறையினால் மட்டுமே தொடர்ந்து செய்ய முடிகிறது .
அவ்வளவு சாதனைகளை செய்ததாக நான் பீற்றிக்கொள்ளும் இந்த பத்திரிக்கைதுறைதான் என்னையும் என்னை போன்ற சிந்தனை கொண்ட எண்ணற்ற சகோதரர்களுக்கும் பெரும் சவாலாக மாறி நிற்கிறது …
ஆம் ! மகாத்மா காந்தி அவர்கள் பத்திரிகை நடத்தினார் .சுதந்திரம் பற்றிய சிந்தனை வெளிக்கொணர்ந்தது.இந்தியா வெளிச்சம் அடைந்தது .
தந்தை பெரியார் அவர்கள் பத்திரிக்கை நடத்தினார் . ஆதிக்க சாதி வெறியர்கள் தடை செய்தார்கள் …மறுநாள் பெயர் மாறி பத்திரிக்கை வரும் ….இப்படி தன் வாழ்நாளில் ஐம்பதற்கும் மேற்பட்ட பத்திரிகைகள் நடத்தினார் . தமிழ்நாடு தன்மானம் மிக்க நாடாய் மாறினது . இது போல் எண்ணற்ற தலைவர்கள் தங்களின் சிந்தனைகளை பரப்ப பத்திரிகை துறையை பயன்படுத்தி இருக்கிறார்கள் ! ஆனால் இன்றோ
இப்படி பட்ட ஒரு நல்ல துறை முழுக்க முழுக்க கெட்டு குட்டிசுவராகி நிற்கிறதே ! எனும் வேதனை பீறிட்டு எழுகிறது .
பத்திரிகைத்துறை இன்றோ அதன் நிலைப்பாடு என்னவென்று பார்த்தால் …
செய்திகளை பரபரப்பாக கொடுக்க வேண்டும் … அதனால் அதன் உண்மை தன்மைகளை அலசி ஆராய்ந்து கொடுப்பதில்லை .அடுத்து புலனாய்வு பத்திரிக்கைகள் என்ற பெயரில் சில பத்திரிகைகள் அடுத்தவர்களின் அந்தரங்கள் பற்றி தெரிந்து கொண்டு எழுதுவது சில சமயங்களில் ப்ளாக்மெயில் செய்து அவர்களிடம் தொகையை பெற்று கொள்வது .
இதைவிட ஒரு மிகபெரும் கொடுமை ஒன்று உள்ளது அது குறிப்பிட்ட இனத்தை தொடர்ந்து அவமதித்தும் ,அவதூறுகளை அள்ளி தெளித்தும் ஒரு மிகபெரும் போரையே செய்து வருகின்றன .

ஆம் அது முஸ்லீம்களுகெதிரான சிந்தனையை வளர்க்கும் போர் 


இதன் மூலம் முஸ்லிம்கள் என்றாலே மற்றவர்கள் எதிராக பார்க்கும் நிலையை உருவாக்கி விட திட்டம் தீட்டி செயல் படுகின்றனர் அதில் கிட்டதட்ட வெற்றியும் பெற்று விட்டனர் என்பதே யதார்த்த நிலை
இப்படிதான் கோவை குண்டு வெடிப்பு நிகழ்ந்த போது ஆயிஷா என்ற பெண் மிகபெரும் தீவிரவாதி என்று எழுதி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளிகளாக சித்தரித்தனர் .
நடுநிலை நாளேடு என பீற்றிக்கொள்ளும் தினமணி கீழக்கரை வழியாக இலங்கை தப்பி செல்ல ஆயிஷா திட்டம் என்றும் அதற்கு கீழக்கரை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவருவதாகவும் ஒரு செய்தியை அந்த பகுதி பதிப்பில் மட்டும் வெளியிட்டது . இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த பகுதி சகோதரர்கள் ஒரு அறிவுபூர்வமான வேலையை செய்தார்கள் …
அது முதலில் தினமணிக்கு ஒரு கடிதம் எழுதி எதன் அடிப்படையில் இப்படி செய்தி வெளியிட்டுளீர்கள் ? அவ்வாறு துணை புரியும் இளைஞர்கள் விவரம் தாருங்கள், நாங்கள் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டு எழுத அது தினமணியின் குப்பைக்கே சென்றது 
விட வில்லை பத்திரிக்கை கவுன்சில் க்கு இந்த செய்தியை புகாராக அனுப்ப பின்பு 
பஞ்சாயத்திற்கு வந்தார்கள் … நம்ம ஆட்களும் தெளிவான டீலிங் செய்தார்கள் .அது எல்லா பதிப்புகளிலும் முதல் பக்கம் இந்த செய்தி பொய் என்று மறுப்பு போடவேண்டும் பகிரங்க மன்னிப்பும் கேட்க வேண்டும் என்று அவ்வாறே எல்லா பதிப்புகளிலும் வந்தது . அத்துடன் நிற்க வில்லை எல்லா பகுதிகளிலிருந்தும் இது என்ன மறுப்பு செய்தி ?அப்படி என்ன தான் எழுதி இருந்தீர்கள் முஸ்லிம்கள் பற்றி ? என்று கேள்விகளை கேட்க செய்தனர் . அவர்களும் உணர்ந்து இருப்பார்கள் என்று நம்புகிறோம்!
தினமலர் சொல்லவெ வேண்டாம் ….அவதூறு செய்திக்காக விடியல் வெள்ளி மாத இதழ் ஆசிரியருக்கு நஷ்ட ஈடு லட்ச ரூபாய் கொடுக்க வேண்டும் என்று நீதிமன்றத்தால் தீர்ப்பே வழங்கப்பட்டது …. அவ்வப்போது அரிப்பை தீர்த்து கொள்ள கார்ட்டூன் போடுவது …இது காவியின் பத்திரிக்கை என்பதால் பெரிய ஆச்சர்யம் இல்லை

ஆனால் இன்று தமிழக அரசியல் என்ற பத்திரிகை மயிலாடுதுறையில் விபச்சாரத்தை தட்டி கேட்ட இஸ்லாமிய பெரியவரை பற்றி எழுதி இருந்தது தான் உச்சகட்ட வேதனை!
இந்த அவதூறு பிரசாரத்தை செய்தவர் திருவாளர் ராகவன். இவரும் இதே பகுதியை சார்ந்தவர் தான் .அவருக்கு மன்சூர் கைலி சென்டர் சுமார் முப்பத்து ஆண்டு காலமாக தனது சொந்த இடத்திலேயே மிக பிரபல்யமாக வியாபாரதிலும்  அறநெறியை கொண்டு செயல்பட்டு வருவது தெரியும் …பின்பு ஏன் ? ஆம் சகோதரரர் அப்துர் ரவூப் அவர்களின் இஸ்லாமிய பிரசாரங்கள் தான் இவருக்கும் இவரை பின்னின்று இயக்குபவர்களுக்கும் மிக கடுமையான எரிச்சலையும் ஏற்படுத்தி இருக்கின்றன .
அன்பு சகோதரர் ராகவன் அவர்களே ! உங்களுக்கு சில கேள்விகள் ?
நீங்கள் எழுதிய ஃபாலோ அப் கட்டுரையிலிருந்தே சில கேள்விகள் ?

மக்களின் நம்பிக்கையை இழந்து விடாமலாவது பார்த்து கொள்ளுங்கள் .
நேர்மையான காவல் துறை அதிகாரி ஒருவர் …( இப்படிதான் உங்கள் கும்பல் ஆதராமில்லா செய்திகளை போடும் போது எழுதுகிறீர்கள் .. அது எப்படிப்பா உங்களுக்கு மட்டும் நேர்மையான அதிகாரிகள் கண்ணுக்கு தெரிகிறார்கள் ?
சரி அந்த நேர்மையான அதிகாரி பெயர் தான் என்ன? அவர் பெயரை வெளியீட்டால் என்ன ? ஏன் பயபடுகிறார் ? உண்மையை உரக்க சொல்லுவதற்கு பயபடுபவர்தான் உங்கள் அகராதியில் நேர்மையானவரா? இது எங்களுக்கு தெரியும் அப்படி ஒருவர் இருக்க வில்லை அது உங்களின் கற்பனை கதாபாத்திரம்- தினமலரின் பழைய படைப்பு இப்போது நீங்கள் ரீமேக் செய்துள்ளீர்கள் !
போன கட்டுரையில் ஷரியத் தீர்ப்பு ! தவறு செய்யும் பெண்களை திருத்துகிறார்.அடிக்கிறார் சூடு போடுகிறார்
என்ற எழுதிய கைகள் இப்போது ஒரே வாரத்தில் மாற்றி எழுதுகிறதே ! எங்களுக்கு புரிகிறது சார் !
நீங்கள் எழுதிய கட்டுரை பெரிய அளவில் மக்களிடம் சேரவில்லை என்றாலும் முஸ்லிம்கள் காவல்துறை, பத்திரிகைத்துறை பற்றி யும் இந்த கூட்டணியின் முஸ்லிம் எதிர்ப்பு நிலை பற்றியும் நன்கு அறிந்தே வைத்து தானே மறியல் செய்ய ஆரம்பித்தார்கள் . உங்களுக்கு ஆகா முஸ்லிம்கள் ஒன்று சேர்கிறார்கள் என்றவுடன் அவர் மேலயே பழி சுமத்துகிறீர்கள் …. நல்லா இருக்கிறது !

இறுதியாக உங்களுக்காக சில வரிகள் …

தீயவன் ஒருவன் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால்
அதை தீர விசாரித்து கொள்ளுங்கள் இல்லையேல் அறியாமையினால் ஒரு குற்றமற்ற சமூகதிற்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம் .பின்னர் நீங்கள் செய்தவை பற்றி நீங்களே வருத்தபடுவீர்கள் !- என்று அல் குர் ஆன் கூறுகிறது … அதனால்
 எந்த செய்தி வந்தாலும் நாங்கள் தீர விசாரித்தே தான் அதை புரிந்து கொள்கிறோம்
அதனால் நீங்கள் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது எங்களுக்குள் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது .
பத்திரிகையாளர்களுக்கும் இஸ்லாம் வழி காட்டுகிறது
தான் கேள்வி பட்ட எல்லாவற்றையும் பரப்புகிறவன் பொய்யன் – என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளார்கள் .
செய்தியாளர்களுக்கு nose for news என்பார்கள் ஆனால் நீங்கள் வெளியிடும் செய்திகளின் தரம் நாற்றம் அடிக்கறது நண்பர்களே!
தயவு செய்து உங்களால் பத்திரிகைத்துறை பெருமை அடையாவிட்டாலும்

மக்களின் நம்பிக்கையை இழந்து விடாமலாவது பார்த்து கொள்ளுங்கள் .

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s