மும்பை குண்டுவெடிப்பு: வன்மையாக கண்டிக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்

Posted: ஜூலை 15, 2011 in POPULAR FRONT

 

சமீபத்தில் மும்பையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. இந்த குண்டுவெடிப்பின் பல அப்பாவி பொதுமக்கள் உயிர் இழந்துள்ளனர். அதிகமானோர் படுகாயமுற்றிருக்கின்றனர். மத்திய அரசும் மாநில அரசும் தக்க நடவடிக்கை எடுத்து இந்த குண்டு வெடிப்பை நிகழ்த்திய உண்மை குற்றவாளிகளை உடனே கைது செய்யவேண்டும் என்றும் இனியும் இதுபோன்ற தீவிரவாத செயல்கள் நடைபெறுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக்கொள்கிறது.

நீண்ட இடைவெளிக்குப்பிறகு மும்பை மாநகரம் மீண்டு தீவிரவாத தாக்குதல்களுக்கு இலக்காக்கப்பட்டிருக்கிறது. இத்தகைய செயல்களை செய்து பல அப்பாவி மக்களின் உயிரை பறித்ததோடு மட்டுமல்லாமல் நாட்டின் அமைதியையும், பாதுகாப்பையும் சீர்குழைத்துள்ளனர்.
வழக்கம் போல் ஆதாரம் இல்லாத வகையில் கைது நடவடிக்கையில் ஈடுபட்டு அப்பாவி மக்களை கைது செய்து சித்திரவதை செய்வதை தவிர்த்துக்கொண்டு நன்கு விசாரணை மேற்கொண்டு உண்மை குற்றவாளிகளை கண்டு பிடித்து தக்க தண்டனை வழங்க வேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் காவல்துறை ஏஜென்ஸிகளிடம் கேட்டுக்கொள்கிறது.
 சமூகத்தின் எல்லா துறைகளைச்சேர்ந்தவர்களும் சரி, காவதுறை மற்றும் மீடியாக்களும் சரி உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் கூறியது போன்று ஆதாரமற்ற வீண் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று பாப்புலர் ஃப்ரண்டும் கேட்டுக்கொள்கிறது.

குண்டுவெடிப்பின் போது உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் தங்களுடைய ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. மேலும் காயமுற்றவர்களின் வெகுசீக்கிரம் சுகம் பெற பிரார்த்திக்கின்றோம் என பாப்புலர் ஃப்ரண்டின்ட் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் தெரிவித்துள்ளார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s