பகதூர் ஷா ஜாஃபர்” திடலுக்கு மக்களை அழைகின்றோம் – பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப்

Posted: ஓகஸ்ட் 8, 2011 in POPULAR FRONT


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு  கூட்டம் கடந்த‌ 02.08.2011 அன்று சென்னை மண்ணடியில் உள்ள பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலமை அலுவலகத்தில் மாநில தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இச்செயற்குழு கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.1. ஆகஸ்ட் -15 அன்று நெல்லையில் (மேலப்பாளையத்தில்) நடைபெறவிருக்கும் சுதந்திர தின அணிவகுப்பு நிகழ்ச்சிகள் மற்றும் பொதுக்கூட்ட திடலுக்கு “1857 ஆம் ஆண்டு நடைபெற்ற சிப்பாய் புரட்சி என அறியப்படும் ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டத்தின் மூலம் சுதந்திர வேட்கைக்கு வித்திட்ட மொகலாய சக்கரவர்த்தி அபூ ஜாஃபர் சிராஜுதீன் என்ற “பகதூர் ஷா ஜாஃபர் அவர்களின் நினைவாக “பகதூர் ஷா ஜாஃபர்” திடல் என பெயரிட தீர்மானிக்கப்பட்டது.

2. மத்திய அளவில் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பான நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் தனது அறிக்கையை சமர்பித்து அது தொடர்பான ஆலோசனைகளும் முடிந்து விட்டது. ஆனால் முஸ்லிம்களின் இட ஒதுக்கீடு தொடர்பாக எந்தவொரு முன்னேற்றமும் காணப்படவில்லை. எனவே மிஸ்ரா கமிஷன் பரிந்துரைப்படி முஸ்லிம்களுக்கு மத்திய அரசின் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் 10% இட ஒதுக்கீட்டை உடனே அமல்படுத்தக்கோரியும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு 3.5 சதவித இடஒதுக்கீடு 5 சதவிகிதமாக உயர்த்தப்படும் என அறிவித்திருந்த அதிமுக பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் அவர்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்தியும் வருகின்ற அக்டோபர் – நவம்பர் மாதங்களில் பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

3. அண்ணா பிறந்த நாளான செப்டம்பர்-15 அன்று 12 ஆண்டுகள் நிறைவடைந்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது வழமை, கடந்த கால அரசு 12 ஆண்டுகளை 7 ஆண்டுகளாக குறைத்திருந்தது. இப்போதைய நீதித்துறை அமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அவர்கள் முதல்வராக இருந்த போதும், கடந்த காலங்களில் அதிமுக அரசு ஆட்சிலிருந்த போதும் இது வழக்கத்தில் இருந்தது. வருகின்ற செப்டம்பர் 15 அன்று 7 ஆண்டுகள் நிறைவடைந்த ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென இச்செயற்குழு தமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களை கேட்டுக்கொள்கிறது.

4. ஜனதா கட்சியின் தலைவர் என்று தன்னை கூறிக்கொள்ளும் சுப்பிரமணிய சுவாமி டி.என்.ஏ என்ற நாளிதழில் இஸ்லாமிய தீவிரவாதத்தை களைவது எப்படி என்ற தலைப்பில் கடந்த ஜூலை 14ம் தேதி எழுதியுள்ள கட்டுரையில் “காசி மஸ்ஜித் உட்பட 300 பள்ளி வாசல்களை இடிக்க வேண்டும்; முஸ்லிம்கள் தங்களது பூர்வீக மதமான இந்து மதத்தை அங்கீகரிக்க வேண்டும்” என்பது போன்ற இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் இரு சமூகங்களுக்கிடையில் கலவரத்தையும், வெறுப்பை உருவாக்கும் வகையிலும் கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

வகுப்பு வாதத்தை  தூண்டும் வகையில் கட்டுரை எழுதிய சுப்பிரமணிய சுவாமி மீது மத்திய மாநில அரசு சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு கேட்டுக்கொள்கிறது.

இப்படிக்கு

ஏ. ஷேக் முஹம்மது அன்ஸாரி
மாநில செயலாளர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s