முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை: ஆர்.எஸ்.எஸ்ஸின் அரை ட்ரவுஸர் ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பு

Posted: ஓகஸ்ட் 17, 2011 in POPULAR FRONT

கோழிக்கோடு:சுதந்திர தினத்தை கொண்டாடும் நோக்கிலும், சுதந்திர போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த வீரர்களின் தியாகத்தை நினைவுக் கூறவும் பாப்புலஃ ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்பிற்கு கேரள, தமிழ்நாடு மாநில அரசுகள் தடைவிதித்தன. ஆனால், கேரளாவில் ஆயுதங்களை ஏந்திய ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தின் அணிவகுப்பிற்கு போலீஸ் பாதுகாப்பு அளித்துள்ளது.

கேரள மாநிலத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா புனலூர், தாமரச்சேரி, மஞ்சேரி, சாவக்காடு ஆகிய இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த திட்டமிட்டிருந்தது. இந்நிலையில் இந்த் அணிவகுப்பை சி.பி.எம், ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் எதிர்ப்பதாகவும், பல்வேறு அமைப்புகள் தனித்தனியாக சுதந்திர தின அணிவகுப்புகளை நடத்துவதை அனுமதிக்க இயலாது எனவும் மாவட்ட ஆட்சி தலைவர்கள் தடை விதித்தனர்.

சீருடை அணிந்து அணிவகுப்பை நடத்துவது மக்களின் உணர்ச்சிகளை தூண்டும் என்பது சில மாவட்ட ஆட்சித் தலைவர்களின் வாதமாகும்.

ஆனால், இத்தடைகள் அமுலில் இருக்கவே அரை ட்ரவுஸரை அணிந்துகொண்டு ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாத இயக்கத்தை சார்ந்தவர்கள் வாள் உள்ளிட்ட ஆயுதங்களை ஏந்திக்கொண்டு கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுதந்திர தினத்தில் அணிவகுப்பை நடத்தியுள்ளனர்.

பத்தணம்திட்டா, கொல்லம், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு, வயநாடு, கோழிக்கோடு மாவட்டங்களில் பல்வேறு நகரங்களில் ஆர்.எஸ்.எஸ்ஸின் அணிவகுப்பு நடத்தப்பட்டுள்ளது. தேசிய கொடியை ஏந்தி இவர்கள் நடத்திய ஊர்வலத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அளித்துள்ளது.

மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் அணிவகுப்புகளும், பேரணிகளும் நடத்தும்பொழுது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிகழ்ச்சிக்கு மட்டும் தடை ஏற்படுத்திய நடவடிக்கைக்கு சமூக சேவகர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

ஆலுவா, பரவூர் ஆகிய இடங்களில் ஆயுதமேந்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் பதசஞ்சலத்திற்கு போலீஸ் பாதுகாப்பை அளித்தது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னரே இடங்களை நிச்சயித்து அதிகாரிகளிடமிருந்து ஆவணங்கள் மூலம் அனுமதி பெற்ற பிறகே கடந்த வருடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்திவருகிறது. இதுவரை எங்கேயும் அணிவகுப்பின் பெயரால் புகார் அளிக்கப்படவில்லை. ஆனால், முன்னரே விளம்பரப்படுத்தாமல் சில உயர் மட்ட நபர்களின் ஆதரவுடன் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

முஸ்லிம்கள் உள்ளிட்ட பிற்படுத்தப்பட்ட-சிறுபான்மை சமூக மக்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களில் தீவிரமாக பங்கேற்பதும், சமூகத்தின் தேசிய நீரோட்டத்தில் பிரவேசிப்பதையும் தடைச் செய்யும் நோக்கில் ஆர்.எஸ்.எஸ் உள்ளிட்ட அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் நடத்திவரும் சதித்திட்டங்களுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பெரும் மக்கள் ஆதரவு மற்றும் பங்களிப்புடன் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்ததன் மூலம் கேரள, தமிழ மாநில அரசுகள் ஆதரவளித்துள்ளன.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s