பாப்புலர் ஃப்ரண்டின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு ஏன் தடை?

Posted: ஓகஸ்ட் 18, 2011 in POPULAR FRONT

சுதந்திரம் நமது பிறப்புரிமை! சுதந்திரத்தை கொண்டாடுவதற்கு ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் முழு உரிமை உண்டு! அதை தடுப்பதற்கு எந்த ஒரு சக்திக்கு அனுமதி இல்லை!

இது இந்திய அரசியல் அமைப்பு சாசன சட்டத்தில் குறிப்பிடப்பட்ட வரிகள். இப்படி இருக்க முஸ்லிம்கள் நடத்தும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு மட்டும் தடை செய்ய ஏன் அரசாங்கமும், காவல்துறை அதிகாரிகளும் வரிந்து கட்டிக்கொண்டு செயல்பட வேண்டும்? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஏன் சுதந்திர தினத்தை இவ்வாறு கொண்டாட வேண்டும்? இவை போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கவே இச்சிறு கட்டுரையை எழுதுகிறேன். தவறுகள் இருந்தால் சுட்டிக்காட்டும்படி அன்போடு வேண்டிக்கொள்கிறேன்.


இந்திய விடுதலைப்போர்:

வியாபார நோக்கத்திற்காக இந்தியாவிற்குள் நுழைந்த வெள்ளையர்கள் நமது நாட்டை கொஞ்சம் கொஞ்சமாக சூறையாடி அடிமைப்படுத்தியதை நாம் நன்கு அறிவோம். அப்போது இருந்த இந்திய மக்களுக்கு சுதந்திர உணர்வை ஊட்ட வேண்டும், சுதந்திரத்திற்காக போராடவேண்டும், நமது நாட்டை விடுதலை அடைய செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கையை முதலில் உருவாக்கியதே முஸ்லிம்கள் தான். கேரளாவில் மலபார் மாப்பிள்ளைமார்கள் நடத்திய போராட்டங்களும், தமிழகத்தில் கான் ஷாஹிப் (மருதநாயகம்) நடத்திய போராட்டங்களும், கர்நாடகாவில் மைசூர் சிங்கம் திப்புவின் போராட்டங்களையும் நாம் எளிதில் மறந்து விட முடியாது.

தனது இரு மகன்களையும் கொலை செய்து அவர்களது தலையை தட்டில் வைத்து பகதூர்ஷாவிடம் காட்டிய போதும் சுதந்திர வேட்கையை சிறிதும் குறைத்திடாது திடமான மன உறுதியுடன் செயல்பட்ட வரலாறு நம்மிடம் உண்டு.

வெள்ளையர்களின் இராணுவத்தில் பணியாற்றுவது ஹராம் (தடை செய்யப்பட்டது) என்று ஃபத்வா (தீர்ப்பு) கொடுத்த மத குருமார்களை தூக்கில் போட்ட வரலாறும் இந்த முஸ்லிம் சமூகத்திற்கு உண்டு.

தமிழகத்தில் “கப்பலோட்டிய தமிழன்” வ.உ. சிதம்பரனாருக்கு கப்பல் வாங்க அன்றைய காலத்தில் ஒரு பெரும் தொகையை பொருளாதார உதவியாக வழங்கிய ஃபக்கீர் முஹம்மதின் வரலாறும் நம்மிடம் உண்டு. இப்படி எண்ணற்ற வரலாறுகள் நம் புதிய தலைமுறையினர் கேள்விப்பட்டதே இல்லை என்று கூறலாம்.

முஸ்லிம்களின் உண்மை வரலாறு மறைக்கப்பட்டது:

முஸ்லிம்களின் சுதந்திர போராட்டத்தை அடுத்த தலைமுறையினர் தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக எல்லா ரீதியிலும் முஸ்லிம்களின் வரலாறு மறைக்கப்பட்டது. முஸ்லிம்கள் இந்த தேசத்தின் தியாகிகளாக இல்லாமல் துரோகிகளாக இருந்தார்கள் என்பது போன்ற பொய்யான வரலாறுகள் திரிக்கப்பட்டு மக்கள் மத்தியில் பரவலாக்கப்பட்டது.

முகலாய மன்னர்கள் இந்து சமூக மக்களை அடிமைப்படுத்தினார்கள் என்றும், ஒளரங்கஜீப் அவர்கள் செருப்பை வணங்க சொன்னது போன்ற எண்ணற்ற பொய் பிரச்சாரங்கள் நாடு முழுவதும் பரப்பப்பட்டு முஸ்லிம்களை தேச விரோதிகளாக சித்தரிக்கும் கயமத்தனம் அரங்கேறியது.

நமது வீட்டில் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளிடம் ” நமது நாட்டிற்கு சுதந்திரம் வாங்கிக்கொடுத்தது யார்?” என்று கேள்வியை கேளுங்கள். பெரும்பான்மையான குழந்தைகளிடமிருந்து மஹாத்மா காந்தி என்றும், ஜவஹர்லால் நேரு என்றும் சுபாஷ் சந்திர போஸ் என்று தான் பதில் கிடைக்கும். ஆனால் நாம் மேலே குறிப்பிட்ட எத்தனையோ முஸ்லிம் சுதந்திர போராட்ட வீரர்களை நம்மில் எத்தனை பேர் அறிந்து வைத்துள்ளோம். ஏன் நமக்கு அவர்களை பற்றிய செய்திகள் நமக்கு கிடைக்காமல் போனது? காரணம் திட்டமிட்டே நம் முஸ்லிம்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டது.

இன்றைய இந்திய தேசத்தின் நிலை:

“வேற்றுமையில் ஒற்றுமை” என்று பெருமையோடு கூறிக்கொள்ளும் நமது தேசத்தில் மதக்கலவரத்திற்கு பஞ்சமே இல்லை. நித்தம் நித்தம் கலவரம், பாதிக்கப்டுவதோ சிறுபான்மை சமூகம்! ஃபாஸிசம் என்று சொல்லக்கூடிய விஷக்கிருமிகள் நாடு முழுவதும் பரவி நாச வேலைகளில் ஈடுபட்டு வருகிறது. தற்போது நமது தேசம் தீவிரவாத அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வருகிறது. மக்கா மஸ்ஜித், அஜ்மீர், மாலேகான், மும்பை, தென்காசி என அனைத்து இடங்களிலும் சங்கப்பரிவார கூட்டங்கள் தங்களது கைவரிசையை காட்டி வருகிறது. ஆனால் இவற்றில் எல்லாம் குற்றம் சுமத்தப்பட்டு, கைது செய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்படுவதோ அப்பாவி முஸ்லிம்கள்.

இன்னொரு மக்கம் இந்த நாட்டின் வளங்களை சுரண்டக்கூடிய லஞ்ச் லாவண்ய, ஊழலுகு அளவே இல்லை. லட்சத்தை தாண்டி இன்று கோடிக்கணக்கில் அரசியல்வாதிகளால் ஊழல் செய்யப்பட்டு வருகிறது.

போலியான ஜனநாயகமே இன்று இந்த நாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. சுதந்திரம், நீதி, பாதுகாப்பு என்ற அடிப்படை கோட்பாடுகள் கூட மறுக்கப்பட்டு வருகிறது.

பாப்புலர் ஃப்ரண்ட் உருவாக்கம்:

ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் சக்திபடுத்துவது, நசுக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பது என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உருவாக்கப்பட்டது. அனைத்து இந்தியர்களுக்கும் சம உரிமை கிடைக்கவேண்டும் என்ற லட்சியத்திற்காக உருவாக்கப்பட்ட ஒரு சமூக இயக்கம்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. புதிய பாதையில் புதிய இந்தியாவை உருவாக்க புறப்பட்டிருக்கிறது பாப்புலர் ஃப்ரண்ட்.

உரிமைக்காகவும், விடுதலைக்காகவும், இன்னொரு விடுதலை போராட்டத்திற்கு முஸ்லிம் சமூகம் தயாராக வேண்டும். வரலாறு தெரியாதவதன் வரலாறு படைக்க முடியாது ஆகையால் முஸ்லிம் சமூகத்தினுடைய வரலாற்றை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூற வேண்டும், இந்த நாட்டை துண்டாட நினைக்கும் தீய சக்திகளை அடக்கிட வேண்டும் என்ற லட்சியத்தில் கடந்த 2004 ஆம் ஆண்டும் ஒரு புதிய முயற்சியாக தொடங்கப்பட்ட கொண்டாட்டம்தான் இந்த சுதந்திர தின அணிவகுப்பு.

ஆகஸ்ட் 15ம் தேதி வந்துவிட்டால் போதும் ஒரு நாள் விடுமுறை கிடைக்கும், நன்கு ஓய்வு எடுத்துக்கொள்ளலாம், தொலைகாட்சி சேனல்களில் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கண்டு மகிழலாம் என்ற நிலை தான் முஸ்லிம் சமூகத்திலும் நிலவி வந்தது. ஆனால் என்று பாப்புலர் ஃப்ரண்ட் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த தொடங்கியதோ அன்றிலிருந்து மக்கள் மத்தியில் சுதந்திர வேட்கை உருவானதை நம்மால் காண முடிந்தது.

முஸ்லிம்கள் விழிப்புணர்வு அடைகிறார்கள் என்றால் எந்த ஆட்சியாளர்களுக்கும் அது சந்தோஷத்தை ஏற்படுத்தாது. இவர்களின் இந்த வளர்ச்சியை தடுக்க வேண்டும், அதற்காக எல்லா ரீதிகளிலும் இவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்த வேண்டும் என்ற அடிப்படையிலேயே மத்திய அரசும், மாநில அரசும், உளவுத்துறைகளும் செயல்பட்டு வருகிறது.

இவர்கள் மீது எல்லா ரீதியிலும் பொய் வழக்குப் போட்டு இந்த இயக்கத்தை தடை செய்துவிடலாம் என்ற நோக்கில் தான் உளவுத்துறை செயல்பட்டு வருகிறது. அதற்கான செயல்பாடுகளை தான் நாம் தற்போது கண்டு வருகிறோம். ஆனால் அல்லாஹ்வினுடைய ஒளியை யாராலும் தன் வாயினால் ஊதி அனைத்துவிடமுடியாது. இவர்களின் இந்த அடக்குமுறையினால் பாப்புலர் ஃப்ரண்ட் இன்னும் மென்மேலும் வளர்ந்து கொண்டே போகிறது தவிர அதன் வளர்ச்சிக்கு சிறிதும் பாதிப்பில்லை என்பதை இந்த மூடர்கள் உணர்வதில்லை.

பாப்புலர் ஃப்ரண்ட் என்பது ஒரு வார்த்தையல்ல! அது ஒரு அனுபவம்! நன்கு சிந்தித்து மிகுந்த கட்டுப்பாடுடன் கட்டப்பட்ட இரும்புக்கோட்டை. இதை யாராலும் தகர்த்திட இயலாது. எத்துனை அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும் வீறு கொண்டு எழுந்து பணியாற்றும். இன்ஷா அல்லாஹ்!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s