இதுதான் எமது சகோதரத்துவம்!

Posted: செப்ரெம்பர் 2, 2011 in ISLAMIC MORAL

day, 03 April 2011 at 18:17

நோயின் காரணமாக நான் சிகிச்சை பெற ஐரோப்பா சென்றிருந்தேன். புதிய இடம். புதிய முகங்கள். விமான நிலையத்தில் சில இளைஞர் கள் என் வரவுக்காக காத்திருந்தனர். நான் அவர்களை இதற்கு முன்னர் கண்டதும் இல்லை. அவர்கள் என் வரவிற்காகவே காத்திருந்தனர். என்னைப்பார்த்து புன்னகைத்தனர். இருக்க இடம் தந்தனர். உண்ண உணவு தந்தனர். நான் கேட்காமலேயே பல உதவிகளைச் செய்தனர். அவர்களுக்கும், எனக்கும் எந்த உறவும் இல்லை. ஒரு உறவுதான் இருந்தது. அதுவே சகோதரத்துவ உறவு. அதுவே அவர்களை எனது நீண்ட நாள் நண்பர்கள் போல பழகவும், உதவி ஒத்தாசைகளைச் செய்யவும் செய்தது. இதனைக் கூறும்போது கலாநிதி முஸ்தபா ஸிபாஈ அவர்களின் கண்களிலிருந்து கண்ணீர் துளி மாலை மாலையாக வடிந்தது.

உண்மையில், அல்லாஹ்வுக்காக சகோதரர்களாக இருப்பதன் விளைவு இதுவாகவே இருக்கும். இதுவே இஸ்லாத்தின் சிறப்பம்சம். மட்டுமன்றி, இஹ்வானிய தஃவாவின் சிறப்பியல்புமாகும். இதனையே இஹ்வானிய சகோதரர் கலாநிதி முஸ்தபா ஸிபாஈ மேலுள்ள வாறு குறிப்பிட்டார்கள்.

இதனை அல்லாஹ் ஸூறதுல் அன்பாலின் 63ஆம் வசனத்திலே பின்வரு மாறு குறிப்பிடுகின்றான்: “அவர்களது உள்ளங்களுக்கிடையே (அல்லாஹ்) பிணைப்பை ஏற்படுத்தினான். (நபியே!) நீர் உலகிலுள்ள அனைத்தையும் செலவழித்தாலும் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்த முடியாது. எனினும், அல்லாஹ் அவர்களுக்கு மத்தியில் பிணைப்பை ஏற்படுத்தினான். நிச்சயமாக அவன் மிகைத்தவனும், மிக ஞானம் மிக்கவனுமாவான்” (அல் அன்பால் : 63)

இதனையே இமாம் ஹஸனுல் பன்னா பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “எமது தஃவா பின்வரும் மூன்று அடிப்படைகளைச் சார்ந்துள்ளது. நுணுக்கமான புரிதல், ஆழமான ஈமான், உறுதியான அன்பு.”

நாம் எங்கிருக்கிறோம்? இதனை நடை முறைப்படுத்த முயற்சி செய்வோமா? இன்ஷா அல்லாஹ்…

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s