தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம்- ராம.கோபாலன் கைதாகி விடுதலை

Posted: செப்ரெம்பர் 5, 2011 in POPULAR FRONT

சென்னை: சென்னை திருவல்லிக்கேணியில் தடையை மீறி விநாயகர் சிலையுடன் ஊர்வலம் செல்ல முயன்ற இந்து முன்னணி அமைப்பாளர் ராம.கோபாலன் கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டார். நேற்று சென்னையில் விநாயகர் சிலைகள் ஊர்வலம் அமைதியாக நடந்தது. இந்து முன்னணி அமைப்பினருக்கு விநாயகர் ஊர்வலம் நடத்த தடை விதிக்கபப்ட்டிருந்தது. அப்படி இருக்கையில் நேற்றிரவு 7 மணி அளவில் இந்து முன்னணி அமைப்பாளர் ராம. கோபாலன் விநாயகர் சிலையுடன் திருவல்லிக்கேணி ஹை ரோட்டில் ஊர்வலமாகச் சென்றார். அவருடன் சில இந்து முன்னணி தொண்டர்களும் தங்கள் தலையில் விநாயகர் சிலைகளை வைத்துக் கொண்டு ஊர்வலமாகச் சென்றனர். அந்த ஊர்வலம் பாரதி சாலை சந்திப்பில் வந்தபோது அங்கு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்தனர். இருப்பினும் அவர்கள் ஐஸஹவுஸ் மசூதி வழியாகச் செல்ல முயற்சித்தனர். ஆனால் போலீசார் அவர்களை அனுமதிக்கவில்லை. இதையடுத்து அவர்கள் அனைவரும் ரோட்டில் சிலைகளுடன் அமர்ந்தனர். அப்போது நிருபர்களிடம் பேசிய ராம.கோபாலன், நாங்களும் ஒவ்வொரு ஆண்டும் விநாயகர் சிலையுடன் ஊர்வலம் வருகிறோம். போலீசாரும் எங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி மறுக்கின்றனர். எங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம். நிச்சயம் ஒருநாள் வெற்றி காண்போம் என்றார். இதையடுத்து ஊர்வலமாக வந்த ராம.கோபாலன் உள்ளிட்ட இந்து முன்னணியினர் கைது செய்யப்பட்டு அண்ணாசாலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், நேற்றிரவே கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் போலீசார் விடுவித்தனர்.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s