வீதியில் விநாயகர்! பீதியில் மக்கள்!

Posted: செப்ரெம்பர் 6, 2011 in POPULAR FRONT

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி மற்றும் இதர இந்து அமைப்புகளின் சார்பில், சென்னையின் பல்வேறு இடங்களில் வைக்கப்பட்டிருந்த, ஆயிரத்து 341 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. திருவல்லிக்கேணியில், தடை செய்யப்பட்ட பகுதியில், ஊர்வலமாக செல்ல முயன்ற இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் உள்ளிட்ட, 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் ஊர்வலம் என்றபெயரில் ஆர்.எஸ்.எஸ்

. மற்றும் ஹிந்து முன்னணி அமைப்பை சேர்ந்த ஹிந்துத்துவாதிகள் தமிழகத்தில் ஒருவகைய பதட்டத்தை ஏற்ப்படுத்தி வருகின்றனர். இவர்கள் வேண்டும் என்றே கலவரம் செய்யும் நோக்கோடு நடத்தும் இந்த ஊர்வலத்தால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுகிறது.

போக்குவரத்து மற்றும் சுகாதார கேடு, பொது அமைதிக்கு பங்கம், அரசுக்கு பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில் வீண் செலவு, கலவர பீதி என்று வடநாட்டு விநாயகரால் தமிழக மக்கள்படும் துயரம் எண்ணில் அடங்காதது. இது போதாதென்று இதர சமூதாய மக்கள் வசிக்கும் பகுதிகள் வழியாக ஊர்வலமாக போய் அவர்கள் மதத்தை பற்றியும், அவர்களை பற்றியும் மோசமான வார்த்தைகளை பேசி, அவர்களின் வழிபாட்டு தளங்களில் செருப்பு, மற்றும் கற்களை எரிந்து கலவரங்களை உண்டாக்கி மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கிறார்கள்.

விநாயகர் வழிபாடு என்பது தமிழர்களின் வழிபாடு கிடையாது, இது ஆரிய வந்தேறி பிராமணர்களால் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டது. . ஒவ்வொரு வருடமும் திருவாரூர் மாவட்டம் முத்துபேட்டையில் இந்த காவி காலிகள் கலவரம் நடத்தாமல் இருந்ததில்லை. இப்படி விநாயகர் ஊர்வலம் என்றாலே கலவர பீதியில் தமிழகம் ஆழ்த்தப்படுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s