ஷஹீத் சையித் குதுப் அவர்களின் அழைப்புப் பணி சிந்தனைக்கு ஒரு படம்- II

Posted: செப்ரெம்பர் 6, 2011 in MUSLIM HISTORY, MUSLIM WORLD

இயக்கத்தில் இணைதல்

சையித் குதுப் அவர்கள் எகிப்து திரும்பியதும் அடுத்தகட்டமாக இமாம் ஹஸனுல் பன்னா பற்றியும் அவரது இஸ்லாமிய இயக்கமான இஹ்வானுல் முஸ்லி மூன்பற்றியும் தேடியறிந்து 1953ல் தன்னை உத்தியோகபூர்வமாக அவ்வியக்கத்தில் இணைத்துக் கொண்டார்.அப்போது இயக்கத்தின் தலைவராக ஹஸன்ஹுழைபி அவர்களும் செயலாளராக அப்துல்காதர் அல்அவ்தா அவர்களும் இருந்தனர்.இதில் குதுப் அவர்கள் முழு நேர ஊழியனாகத் தன்னை இணைத்துக் கொண்டதோடு பிரசாரக் குழுத் தலைவராகவும் பணியாற்றினார்.இஹ்வானுல் முஸ்லிமூன் இயக்கத்தின் தலைவராக குதுப் அவர்கள் இருக்காவிடினும் இயக்கஊழியர்களிலேயே ஹஸனுல் பன்னா(ரஹ்)
அவர்களின் பின்னரான சிந்தனைச் சிற்பியாக போற்றப்படுபவர் இவரே.இஸ்லாமிய அழைப்புப்பிரசாரத்தற்கு குதுப் அவர்கள் தமது சிறுபராயம் முதலே இருந்து வந்த இலக்கிய வேட்கையினை நன்கு பயன்படுத்திக்கொண்டார். பன்னாவின் சிந்தனைகளையும் தனது சிந்தணைகளையும் இணைத்து அவற்றுக்கு இலக்கிய மெரு கூட்டிதனது பேனாமுனையினால் முழுவடிவம் கொடுத்தார்.இவரது இலக்கியத் துறைபற்றிக் கூறுவதாயின் எகிப்திய இலக்கிய உலகின்தலை சிறந்தஎழுத்தாளர்களாக மதிக்கப்படும் தாஹாஹுஸைன்https://pfikaraikal.files.wordpress.com/2011/09/a2begypt.jpg?w=256

(இவர்மதச்சார்புடையவர், இஸ்லாத்தை விமர்சித்து பல கருத்துக்களை வெளியிட்டுள்ளார்),அக்காத்,முஸ்தபாராபிஃ போன்றவர்களுடன் இணைத் துசையித் குதுப் அவர்களது பெயரும் பேசப்படுகின்றது.அவரது இந்தப் பேனா முனைப் புரட்சியின் ஆரம்பகட்டமே எகிப்தின் சடவாத அரசுக்குப் பெரும் இடியாய் இடித்தது.

சிறையில் சையித் குதுப்

இயக்கத்தில் இணைந்த அடுத்த வருடமே(1954ல்) இயக்கத்தின் இஹ்வானுல்முஸ்லிமூன்பத்திரிகையின் தலைமை ஆசிரியராகப் பதவியேற்றார்.என்றாலும் இவர் பதவியேற்று இரண்டு வாரங்களிலேயே இப்பத்திரிகை தடை செய்யப்பட்டது.
அதேஆண்டில்(1954 ஜுலை07)எகிப்து ஜனாதிபதி ஜமால் அப்துல் நாஸருக்கும் ஆங்கிலேயருக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கைச்சாத்தானது.இதுவே ஆங்கிலோ எகிப்து ஒப்பந்தம் எனப்படுகின்றது.

இதற்கு இஹ்வான்கள் தமது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர்.எனவே இஹ்வான்களில் பலர்நாஸரின் அரசால் கைது செய்யப்பட்டனர். இதில் சையித் குதுபும்

ஒருவர்.சிறை அதிகாரிகள் குதுப் அவர்களின் மீது சித்திரவதைகளைக் கட்டவிழ்த்துவிட்டனர்.கடுமையான சுடுநீராலும் குளிர்நீராலும் அவரைப் பதம்பார்த்தனர். சொற்களாலும் கற்களாலும் வதைத்தனர்.பூட்ஸ்கால்களால் உதைத்தனர். பசிவெறி பிடித்த நாய்களை ஏவிக் குதறச்செய்தனர்.இவ்வாறு அவர் மீது புரிந்த சித்தரவதைகள் எல்லை தாண்டிச் சென்று கொண்டிருந்தன.

1955 மே3ம் திகதிசையித் குதுப் அவர்கள் உடல் ரீதியாகப் பெரிதும் பாதிக்கப்பட்டு இராணுவ மறுத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
அந்நிலையிலேயே மீண்டும் அவர் மீது 15 வருட சிறைத் தண்டனைவிதியானது.இச்சந்தர்ப் பத்தைப் பயன்படுத்தி அரசாங்கம் தூதுவர்களைக் குதுப் அவர்களிடம் அனுப்பி“மன்னிப்புக் கோரிக்கை சமர்பித்தால் விடுதலை செய்வதாகவும் கல்வியமைச்சுப்பதிவியில் அமர்த்துவதாகவும் ஆசைவார்த்தை களை வீசிவலை விரித்தது.
ஆனால் அதற்கு குதுப் அவர்கள் அளித்த பதில் மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது.

அவர்அத்தூதுவர்களிடம்கூறினார்:

“அநியாயத்திற் குள்ளாக்கப் பட்டவர்கள் அநியாயத்தை வாழ்க்கையாகக் கொண்டவர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்பது விந்தையான தொருவிடயம்.அல்லஹ்வை முன்னிறுத் திக்கூறுகின்றேன்.
மன்னிப்பைக் கேட்கும் ஒரே ஒரு வார்த்தை தான் என்னைக் காப்பாற்றி விடும் என்றாலும் அதனை நான் சொல்லத் தயாராயில்லை.என்னைப் படைத்த என் இரட்சகனின் முன்நான் அவனைச் சந்திக்க விரும்பும் முகத்தோடு அவன் என்னைப் பொருந்திக் கொள்ளும் விதத்திலேயே நான் சமர்பிக்கப்படுவதை விரும்புகின்றேன்”

என்றார்.இதன் பின்பு சிறையிலிருந்தவாறே நூற்களைப் படிப்பதற்கானவசதிகள் அவருக்கு செய்து கொடுக்கப்பட்டது.இதன் போதுதான்அவர்அல்குர்ஆனுக்குவிளக்கவுரையாக“பீழிலாலில்குர்ஆன்- அல்குர்ஆனின்நிழலில்”என்ற நூலை எழுதினார். அரபுமொழியிலான அல்குர் ஆன் விளக்கவுரைகளில் இதற்குத்தனித்துவமான இடமுண்டு.

15 வருடசிறைத் தண்டனை விதிக்கப்பட்டாலும்10 வருடங்களிலேயே(1964)அவர் விடுதலை செய்யப்பட்டார்.என்றாலும் எகிப்தின் பாதுகாப்புப்படையின் கடுமையான கண்கானிப்பின் கீழே அவர் நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.இக்கால கட்டத்தில்தான் ஸையித் குதுப்அவர்கள்“மஆலிம்பித்தரீக்-இஸ்லாமியஎழுச்சியின்மைற்கற்கள்”என்ற நூலை எழுதினார். இதுவே அவருக் குமரண தண்டனை விதிக்கவும் காரணமாயமைந்தது.இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப்பெற்றது. ஆனால் நாஸரின் வயிற்றில் புலியைக்கரைத்தது.
தூக்கு மேடையில்  துணிச்சலுடன்:

 

மஆலிம்பித்தரீக் நூல் வெளியானதும் அது ஜனாதிபதிஅப்துல் நாஸரைக் கொலை செய்வதற்கான ஒரு சூழ்ச்சியென்றும் இஹ்வான்கள் ஆட்சியைக்க விழ்க்கத் திட்டம் தீட்டு வதாகவும் பொய்யான குற்றச்சாட்டுகளைச் சுமத்தி அவசரகால சட்டத்தை அமுலாக்கம் செய்து சையித் குதுப் உட்பட சுமார் 24000
இஹ்வான் உறுப்பினர் களைக் கைது செய்து சிறையில் தள்ளியது.
இது சையித் குதுப்சிறையிலிருந்து விடுதலையாகி மூன்றே மாதங்களில்(1964 மார்ச்24)நடைபெற்றது. இதன்போது அவர் மீதான சித்தரவதைகள் அதிகரித்தன.இராணுவ நீதி மன்றம் இரகசியமான முறையில் விசாரணைகளை நடாத்தி ஒரு குருட்டுத் தீர்ப்பைவழங்கியது.அந்தவகையில்1966 ஒகஸ்ட் 29ல் சையித் குதுப் உட்பட இன்னும் இருவருக்கும் தூக்குத் தண்டனை நிறை வேற்றப்பட்டது.
(இன்னலில்லாஹிவஇன்னாஇலைஹிராஜிஊன்)  cont..

 

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s