ஷஹீத் சையித் குதுப் அவர்களின் அழைப்புப் பணி சிந்தனைக்கு ஒரு படம்- I

Posted: செப்ரெம்பர் 6, 2011 in INDIAN MUSLIM, ISLAMIC MORAL, MUSLIM HISTORY

  •  குறிப்பு:   குதுப் அவர்கள் தொடர்பாக பலதரப் பட்டவர்களிடமும் பல்வேறு மாற்றுக் கருத்துக்கள் காணப்பட்டபோதிலும் அல்குர்ஆனின் கூற்றுக்கு ஏற்ப (எங்கள் இரட்சகா! எங்களையும்விசுவாசம் கொள்வதில் எங்களை முந்திவிட்டார்களே அத்தகைய எமது சகோதரா்களையும் நீ மன்னித்துவிடுவாயாக! விசுவாசம் கொண்டவர்களைப்பற்றி எமது இதயங்களில் வெறுப்பை ஏற்படுத்தா  திருப்பாயாக! எமது இரட்சகா! நீ மிக்க இரக்கமுடையவன். மிக்க கருணையுடையவன்”

-59:10-)

இங்கு அவரது குறைகளை ஆராய்வதைவிட்டு இஸ்லாத்திற்காக அவர் புரிந்த தியாகங்களையும் பணிகளையுமே நான் குறிப்பிட்டுள்ளேன்.

அன்றைய எகிப்தின் நிலை :

பதின்எட்டு மற்றும் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் ஐரோப்பியக் காலனியாதிக்கத்திற்கு உட்பட்டிருந்த எகிப்து அப்போதிருந்தேபடிப்படியா அதன் பண்பாட்டு, கலாசார, விழுமிய அடையாளங்களை இழந்து கொண்டிருந்தது.ஐரோப்பிய நாடுகள் எகிப்தை ஆக்கிரமித்து வளங்களைச் சுரண்டுவதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை.

தமது மதத்தையும் கலாசாரத்தையும்  எகிப்திய முஸ்லிம்கள்மீது கட்டுடைப்புச் செய்வதனையும் நோக்காகக்கொண்டு செயற்பட்டன.
தமது ஆதிக்கத்தை முஸ்லிம்கள் மத்தியில் தொடர்ந்தும் நிலைநிருத்த வேண்டுமாயின் முஸ்லிம்களை அவர்களது சத்தியமார்க்கம் இஸ்லாத்திலிருந்தும் தூரப்படுத்த வேண்டும்.
அல்குர்ஆனுடனான தொடர்பைத்துண்டிக்க வேண்டும் என ஐரோப்பிய நாட்டுத்தலைவர்கள் கருதி அதன்படிசெயலாற்றினர்.

விக்டோரியா கால பிரிட்டிஷ் பிரதமர் கிளாட்ஸ்டன் மக்கள் அவையில் குர்ஆனைக் கையில் ஏந்தியவாறு இந்தப்புத்தகம் எகிப்தியரிடம் இருக்கும்வரை அந்நாட்டில் எம்மால் அமைதியை அனுபவவிக்க முயாது என்றுகுமுறியது

எனவே முஸ்லிம்களைக் குர்ஆனுடனான தொடர்பிலிருந்து துண்டிப்பதற்காகவும் இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத் துவதற்காகவும் நன்கு திட்டமிட்ட அடிப்படையில் சில தீர்மானங்களை எடுத்தனர்.
அவை:

    • மேற்கின் கலாசார நாகரீகங்களின்பால் முஸ்லிம் இளைஞர்களின்கவனத்தைஈர்த்தல
    •  வரையறைகளின்றி அவர்கள் மத்தியில் ஆபாசக்குப்பைகளைக்குவித்தல்.
    • இஸ்லம் பற்றிப்பெய்யான சந்தேகங்களைக் கிளப்பிதப்பபிப்பிரயங்களை ஏற்படுத்தி மேற்கு அறிஞர்களின் சிந்தனைகளைவிதைத்தல்.
    • வரைமுறையின்றி இஸ்லாத்தைக் கொச்சைப்படுத்தல் என்பனபற்றிய ஆய்வுகளை மேற் கொண்டு அவற்றைத் திரிபுபடுத்தி எழுதுதல். (Oriantelism)

இத்திட்டமிடல்களின் அடிப்படையில் மேற்குலகம் எகிப்தது
முஸ்லிம்களை இஸ்லாத்தை விட்டும் தூரப்படுத்திக் கொண்டிருந்தது.
முஸ்லிம்களை மேற்குவிலை கொடுத்து வாங்கியது. முஸ்லிம்களுக்கு
மேற்குநாடுகளில் கூடிய ஊதியத்துடன் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.உயர்படிப்புக்காக முஸ்லிம் மாணவர்களுக்கு சிறப்புப் புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டு மேற்கின் பல்கலைக்கழகங்களில் கல்விபயிலும் வாய்ப்புகள் வழங்கப்பட்டன.

அவர்களது சடவாதநாஸ்திகக் கல்விக்கொள்கையில் பயிற்றப்பட்ட இளைஞர்கள் பெயர்தாங்கி முஸ்லிம்களாகவே நாடு திரும்பினர்.
மேற்கின் மூலைச் சலவைக்குட்பட்ட நிலையில் நாடு திரும்பிய அவர்கள் ஐரோப்பாவைப் புகழ்ந்துரைப் பவர்களாகவும் அவர்களுக்காகவும் அவர்களது சீர்கெட்ட கலாசாரங்களுக்காகவும் வக்காலத்து வாங்கியதோடு இஸ்லாத்தைப் பரவலாக விமர்சனம் செய்தனர்.அல்குர்ஆன் தற்காலத்திற்கு ஒவ்வாத வொன்றெனவாதித்தனர். நபியவர்களது ஹதீஸ்களைப் பொய்ப்பித்தனர்.மொதத்தத்தில் இவர்கள் மதமறியா மிஸ்டர்களாகவே இருந்தனர்.

உயர் படிப்புப் படித்தவர்கள் என்பதால் இவர்களுக்கு சமூகத்தில் உயர் அந்தஸ்தும் காணப்பட்டது.இக்காலப் பிரிவில் இஸ்லாத்தில் பற்றுருதிமிக்கவர்களாக இருந்த முஸ்லிம் ஆலிம்களால் மேற்கின் இச்சவாலை எதிர்த்துநிற்க முடியவில்லை.ஏனெனில் அவர்கள் உலகமறியா முல்லாக்களாகவே காணப்பட்டார்கள். முஆத்இப்னுஜபல்(ரழி)அவர்களால் இஸ்லாமிய வேரூன்றப்பட்ட எகிப்து தேசம் இக்காலகட்டங்களில் படுமோசமாக வீழ்ச்சியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.இதன் போதுதான் இமாம் அஷ்ஷஹீத் ஹஸனுல் பன்னா(ரஹ்)அவர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்தை ஆரம்பித்து இஹ்வானுல் முஸ்லி மூன் என்ற இயக்கத்தையும் தோற்றுவித்தார்கள்.

அன்றைய எகிப்தின் சமூகநிலை இவ்வாறு தரிகெட்டுப்போய்க் கெண்டிருக்கும் போதுதான் 1906ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9ஆம்திகதி எகிப்தின் அஸ்ஸுயூத் மாகாணத்தில் மூஸேகிராமத் தில்ஸையித் குதுப்(ரஹ்)அவர்கள் பிறந்தார்கள். இவரது தந்தை சிறந்த மார்க்க மேதையாக விளங்கியவர். பெயர்இப்றாஹீம்குதுப்.

தாயார் பாதிமா ஹுஸைன் உஸ்மான். இவரும் மார்க்கப் பற்றுள்ள பெண்மனி. இவர்ளுக்கு நான்கு பிள்ளைகள்.ஒருவர்சையித்குதுப். மற்றவர்கள்முஹம்மத்குதுப்,ஆமினாகுதுப்,ஹமீதாகுதுப்ஆவார்கள்.சையித்குதுப் அவர்கள் தமது பாடசாலைக் கல்வியை  1912ல் தொடர்ந்தார்.

பின்பு 1918ல் அதிலிருந்து இடைவிலகி 1920ல் கெய்ரோவந்து தாருல் உலூம் கல்வி நிலையத்தில் சேர்ந்தார்.குதுப் அவர்களுக்கு சிறுவயது முதலே இருந்த இலக்கிய ஆர்வத்தின் விளைவு 1933ல் இலக்கியத் துறையில் பட்டப்படிப்பைப் பூர்த்திசெய்தார்.பின்னர் சிறிது காலம் அங்கேயே விரிவுரையாளராவும் பணியாற்றினார்.

அவரின் கல்வியாற்றலை அறிந்து கொண்ட எகிப்திய கல்வியமைச்சு 1948ல் அவரை அமெரிக்காவின் கல்விக் கொள்கையை ஆராய்ந்து அறிக்கை சமர்பிக்கக்கோரி அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்தது.

அமெரிக்காவில் கழித்த இரண்டு ஆண்டுளில் அவர் அங்கிருந்து இத்தாலி, சுவிட்சர்லாந்து,இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கும் பயணங்களை மேற்கொண்டார்.குதுப் அவர்களது இந்த அமெரிக்கப் பயணம் தான் அவரது பிற்பட்டகால வாழ்க்கையின் திருப்பு முனைக்கு வித்தாயமைந்தது.மேற்குறித்த நாடுகளுக்கான பரவேசத்தின்போது சையித்குதுப் அவர்கள் அந்நாடுகளின் கீழ்த்தரமான நாகரிகங்கள்,கலாசாரங்கள் குறித்தும் இஸ்லாத்தை அழிப்பதற்காக அவர்கள் தீட்டும் சூட்சுமங்கள் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார்.அத்தோடு எகிப்தில் ஹஸனுல்பன்னா(ரஹ்) கொலை செய்யப்பட்ட செய்தியைக் கேள்வியுற்ற அமெரிக்கர்கள் அதனைப்பெரும் ஆரவாரத்துடன் கொண்டாடியமைகுதுப் அவர்களை இன்னும் ஆழமாகச் சிந்திக்கத்தூண்டியது.

அதுவரை மேற்குலகை மெச்சுபவராகவும் மேற்குசார் புடையவராகவும் இருந்த குதுப் அவர்களது உள்ளத்தில் மேற்கின்மீதான வெறுப்பும் அருவறுப்பும் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விடத் துவங்கியது.1950களில் குதுப் அவர்கள் நாடு திரும்பினார்.அவருக்காக கல்வியமைச்சகம் ஏற்பாடு செய்து வைத்திருந்த பதவியையும் அவர் ஏற்க மறுத்துவிட்டார் மேற்குலகின் சடவாத கல்விச் சிந்தனையை முஸ்லிம் மாணவர்கள் மத்தியில் பதித்து அவர்களை மேற்குலக சார்புடையவர்களாகவும் இஸ்லாத்தின் எதிரிகளாகவும் மூளைச்சலவை செய்ய அவர்விரும்பவில்லை……..cont

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s