ஷஹீத் சையித் குதுப் அவர்களின் அழைப்புப் பணி சிந்தனைக்கு ஒரு படம்- III

Posted: செப்ரெம்பர் 7, 2011 in ISLAMIC MORAL, MUSLIM HISTORY

இவரது மரணம் உலக மக்களது உணர்வுகளைக் கொதிப்படையச் செய்தது. எகிப்திய ஆட்சிக்கெதிராக இஹ்வான்களோடு பொதுமக்களும் கண்டனக்கணைகளை எழுப்பினர். இஹ்வானிய இயக்கம் உலகளவில் தடம் பதிக்க அவரது மரணம் அடியாயமைந்தது. “அல்குர்ஆனின் நிழலில், இஸ்லாமிய எழுச்சியின் மைற்கற்கள், ஆத்ம பரவசங்கள், இஸ்லாத்தில் சமூக நீதி, எதிர்காலம் இஸ்லாத்திற்கே”(இவை அரபு நூற்களின் தமிழ் மொழிபெயர்ப்புகளாகும்) என்று அவர் எழுதிய சுமார் 22 புத்தகங்கள் உலகம் முழுதும் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தன.
குதுப் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் சுருக்கமாக:
அஷ்ஷஹீத் சையித் குதுப் (ரஹ்) அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட முக்கியமான நான்கு பிரச்சினைகளில் கவனம்செலுத்தினார்கள்.
ஒன்று; இஸ்லாமிய நாட்டில் காணப்பட்ட மதசார்பற்ற சடவாத அரசு. இஸ்லாமிய சரீஅத் சட்டங்கள் அங்கு அலட்சியப்படுத்தப்பட்டு மனித சட்டங்கள் மக்களை அடக்குமுறைக்கு உட்படுத்திக்கொண்டிருந்தன. இதனைக் குதுப் அவர்கள் வன்மையாக எதிர்த்தார்கள்.
இரண்டாவது; இஸ்லாமியக் கலாசார முறைமை மறக்கடிக்கப்பட்டு மேற்கின் குப்பைக் கலாசாரம் அங்கு புகுத்தப்பட்டு வந்தது. இதனால் பெரும்பாலான மக்கள் தமது அடையாளங்களையே தொலைத்திருந்தனர். எனவே ஹஸனுல் பன்னா (ரஹ்) வின் பாணியில் இஸ்லாத்தின் அடிப்படைக்கோட்பாடுகளினதும் விழுமியங்களினதும் பக்கம் மக்களை அழைக்க அவர் பிரயத்தனம் மேற்கொண்டார்.
மூன்றாவது; ஜனநாயகம், மனித உரிமை என்ற பெயரில் மேற்கு நாடுகள் மக்கள்மீது புரிந்துவந்த அடக்குமுறைகளை அமெரிக்காவுக்கு நேரில் பயணம் மேற்கொண்டு அறிந்துகொண்ட குதுப் அவர்கள் அதிலிருந்து தமது நாட்டையும் நாட்டு மக்களையும் விடுவிக்கப் போராடினார். இக்கருத்துக்களை அவரது “நான் கண்ட அமெரிக்கா, இஸ்லாத்தில் சமூக நீதி” போன்ற நூற்களில் விளக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
நான்கு; முஸ்லிம்கள் மேற்குலகினாலும் அவர்களது அடிவருடிகளினாலும் மூலைச்சலவை செய்யப்படுவதை அவர் வெறுத்தார். எனவே தான் அவருக்கு வழங்கப்பட்ட கல்வியமைச்சுப் பதவியையும் ஏற்க மறுத்தார்.
இவ்வாறு குதுப் அவர்கள் அக்காலத்தில் காணப்பட்ட முக்கியமான முதன்மைப்படுத்தப்பட வேண்டிய பிரச்சினைகளை எதிர்கொண்டு அவற்றைத் தீர்ப்பதற்காகப் பல பிரயத்தனங்களை மேற்கொண்டார். இதற்காக அவர் பயன்படுத்திய மூல ஊடகம் எழுத்துத் துறையே. இறை பொருத்தத்தை நாடி அவர் செய்த பணியில் அவர் வெற்றிபெற்றார் என்றுதான் கூறவேண்டும். அல்லாஹ் அவரது பிழைகளைப் பொறுத்து நற்கூலி வழங்குவானாக!
Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s