பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா – ஒரு IB report!!

Posted: செப்ரெம்பர் 16, 2011 in POPULAR FRONT

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தை பற்றி விமர்சிப்பவரா நீங்கள்? அதனுடைய செயல்பாடுகள் இதுவரை உங்களுக்கு என்னவென்று தெரியவில்லையா? பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா என்னும் இயக்கத்தைப் பற்றி உங்களுக்கு ஏதாவது கேள்விகள் மனதிலே உதிக்கின்றனவா? அப்படியானால் இந்த கட்டுரை உங்களுக்கு பதில் தரும் என்று நம்புகிறேன்…!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்பாடுகள்
நாமறிந்த வகையில் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பின்பு இது ஒரு மதசார்பற்ற நாடு என்று நம் முன்னோர்களால் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான ஃபாசிஸ சங்கப்பரிவாரங்களால் இந்த நாட்டை இந்து நாடாக மாற்றியே தீர வேண்டும் என்ற நோக்கத்தோடு நீண்ட கால திட்டங்களை தீட்டி அதன் விளைவாக நாடு முழுவதும் கலவரங்களை ஏற்படுத்தி முஸ்லிம் சமுதாயத்தின் உயிரும், மானமும் மலிவாக பலியாக்கப்பட்டிருந்த சூழ்நிலையில் வி.டி. இராஜ சேகர் போன்ற மாற்று சமுதாய தலைவர்களே ஸ்பெயினில் முஸ்லிம்கள் அழிக்கப்பட்ட அதே வழிமுறைகளைத்தான் இங்கு செயல்படுத்தப்பட்டு வருகிறது என்று எச்சரிக்கை செய்து கொண்டிருந்த காலச் சூழ்நிலையில், இந்தியாவில் இஸ்லாம் நிலை நிறுத்தப்படவேண்டும்,  இஸ்லாமிய சமுதாயம் மானத்தோடும், கண்ணியத்தோடும், தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்ற உண்ணத இலட்சியங்களோடு இஸ்லாத்தை முழுமையான வாழ்க்கை நெறியாகக் கொண்டு  கேரள மாநிலத்தில் ஒரு சில சகோதரர்களால் சரியான மாற்று திட்டங்களோடும், அடித்தளத்துடனும் துவங்கப்பட்டதுதான்  இந்த “பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா” என்று இந்திய மக்களால் அறியப்படும் ஒரு தேசிய இயக்கமாகும்.

இன்று இதன் வளர்ச்சி பல மாநிலங்களை கடந்து தேசிய அளவில் குறிப்பாக வட மாநிலங்களில் பலமாக அடித்தளமிட்டுவருகிறது. இதே லட்சியத்தோடு சமுதாயத்தில் பல்வேறு கிளைகளையும் உருவாக்கி ஒரே தலைமையின் கீழ் ஒன்றுபடுத்த வேண்டும் என்ற உண்ணத நோக்கோடு பல துணை பிரிவுகளை நாடு முழுவதும் உருவாக்கி நடத்தி வருகிறது. கொள்கையே இல்லையென்றால் ஒரு அமைப்பால் இவ்வளவு தூரம் வளர்ச்சியை அடைய முடியாது என்பது சிந்திப்பவர்களுக்கு தெளிவாக விளங்கும் என கருதுகிறேன்.

ஓரளவு வளர்ச்சி அடைந்த பிறகு இயக்கத்தின் செயல்பாடுகளில் மாற்றம் கொண்டு வருவது என்பது எல்லா அமைப்பிற்கும் பொதுவான விஷயம். அதன் அடிப்படையில் தமிழகத்தில் இயக்கம் வளர்ச்சி அடைந்த பிறகு எம்.என்.பி (மனித நீதிப் பாசறை) என்ற பெயர் சூட்டிய பிறகு கொள்கைக்கு மாற்றமில்லாத வகையில் செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டது.

தமிழகத்தில் இயக்கத்தின் ஆரம்ப கால கட்டத்தில் ஜனநாயகம் கூடாது என்று நிலையில் செயல்பட்டாலுல், இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வாழக்கூடிய முஸ்லிம்களின் அவல நிலையை பார்க்கும்போது, இந்தியாவில் எல்லா குடிமக்களுக்கும் சமமான நீதியும், சுதந்திரமும், பாதுகாப்பும் கிடைக்கச்செய்யவேண்டுமென்றால் ஆட்சி அதிகாரத்தில் முஸ்லிம்கள் பங்கெடுத்தால் மட்டுமே சாத்தியமாகும் என்று அறிந்தவுடன் நாம் முன்னர் இருந்த நிலையை  விட்டு முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக எல்லா ரீதியான போராட்டங்களையும் செயல்படுத்த தொடங்கினோம்.

உங்களுக்கிடையே கருத்து வேறுபாடு கொள்ளாதீர்கள், அப்படியானால் உங்களுடைய பலம் குன்றிவிடும், நீங்கள் கோழைகளாகிவிடுவீர்கள்” என்று திருமறைக்குர்ஆன் வசனத்திற்கேற்ப சமூகத்தின் ஒற்றுமைக்காக போராடி வரும் இயக்கமே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா.

சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காக பல சமூகப்பணிகளை பாரபட்சமின்றி செய்து வருகிறோம். கடந்த 2004ஆம் ஆண்டு தமிழகத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட‌ கடலூர் மாவட்டம் முதற்கொண்டு பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கிறோம். யூதர்களால் கடுமையான முறையில் பாதிக்கப்பட்டும், மேலை நாட்டவர்களால் பொருளாதார தடையின் மூலமாக கடுமையான நெருக்கடிக்கு ஆளான பாலஸ்தீன மக்களுக்காக வீதிதோறும் இறங்கி மக்களிடம் பொருளாதாரத்தை வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்தோம். அதே போன்று சில ஆண்டுகளுக்கு முன்னால் பீஹாரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒவ்வொரு மஸ்ஜிதுகள், முக்கிய பஜார்கள் என பல்வேறு இடங்களில் தமிழகம் முழுவதும் வசூலித்து உரிய நபர்களிடம் ஒப்படைத்திருக்கிறோம். மேலுமா சில ஆண்டுகளுக்கு முன்னால் குஜராத்தில் நில நடுக்கம் ஏற்பட்டு பல்லாயிறக்கணக்கான மக்கள் வீட்டை இழந்து, குடும்பத்தை இழந்து, அநாதைகளாயினர். அவர்களின் துயரை துடைக்க நம்மாலான முயற்சியாக மாநிலம் முழுவதும் பல்வேறு ஊர்களில் வீடுவீடாக சென்று துணிமணிகளை பெற்று அவர்களுக்காக அனுப்பி வைத்திருக்கிறோம்.
அதே போன்று ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் ஃபித்ரா கடமையுள்ளவர்களிடமிருந்து ஃபித்ரா பணத்தை வசூலித்து ஏழை எளிய மக்களுக்கு விநியோகம் செய்யும் பணியை கடந்த பல வருடங்களாக செய்து வருகிறோம். மாவட்டம் ரீதியாக வசூல் செய்த பணத்தின் கணக்கு விபரங்களை ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்திற்கு பிறகு வெளிவரும் “விடியல் வெள்ளி” என்னும் பத்திரிக்கையில் வெளியிட்டு வருகிறோம்.

கோவை சிறைவாசிகளுக்காக தொடர்ந்து நமது இயக்கம் போராடி வருகிறது. ஆர்ப்பாட்டங்கள் வாயிலாகவும், சட்டத்தின் மூலமாகவும்  ஒவ்வொரு வருடமும் தமிழக அரசுக்கு 7 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடுபவர்களுக்கு கருணையின் அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றோம்.

பாப்புலர் ஃப்ரண்டின் பொருளாதார நிலை:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முழு நேர ஊழியர்களுக்கு வாழ்வாதாரத்திற்காக உதவித்தொகை இயக்கத்தின் உறுப்பினர்கள் தரும் மாத சந்தாவிலிருந்து கொடுக்கப்படுகிறது.  முழு நேர ஊழியர்களுக்கு வழங்கப்படுவது சம்பளம் இல்லை, அது அவர்களின் வாழ்வாதாரத்திற்கான உதவித்தொகை அல்லாஹ்விற்காக இரவு, பகல் பாராமல் உழைப்பவர்களுக்கு கூலி கொடுக்க மனிதர்களால் முடியாது. அல்லாஹ் மறுமையில் வழங்குவான். மேலும் ரமலான் மாதத்தில் ஜகாத் வசூலித்து அதன் மூலம் சமூகப் பணிகளை செய்து வருகிறது. மேலும் சமுதாயத்திற்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்படும் மாநாடுகளாக இருந்தாலும் சரி, பொதுக்கூட்டங்களாக இருந்தாலும் சரி, மற்ற நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, ஒவ்வொன்றிற்கும் சமூக பணிகளில் அக்கறை உள்ளவர்களிடம் சென்று அவர்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்யுமாறு கேட்டதின் அடிப்படையில் அவர்கள் வழங்கும் பணத்தைக் கொண்டு இத்தகைய நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
https://pfikaraikal.files.wordpress.com/2011/09/popularfrontpix2528252529.jpg?w=300

 நிர்வாகிகள் தேர்வும் செய்யும் முறை:

பாப்புலர் ஃப்ரண்டின் கிளை நிர்வாகிகள் முதற்கொண்டு தேசிய நிற்வாகிகள் வரை ஜனநாயகத்தின் அடிப்படையிலேயே தேர்வு செய்யப்படுகிறார்கள். இங்கே தனி மனித ஆதிக்கத்திற்கு இடமில்லை.  இங்கே தன்னாட்சி செய்யும் தனி நபர்கள் கிடையாது. இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை  தெளிவான ஜனநாயக முறையில் (இஸ்லாமிய சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு) புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறையே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பாப்புலர் ஃப்ரண்டில் கட்டுப்படுதலும், செயல்பாடுகளும் தான் முக்கியமே தவிர தனி நபர்களுக்கு முக்கியத்துவமில்லை.

சுதந்திர தின அணிவகுப்பு:

இந்திய நாட்டின் சுதந்திர போராட்டத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமுமில்லை, சுதந்திர தினத்தை கொண்டாட அனுமதியில்லை என்று சங்கப்பரிவாரங்களும், உளவுத்துறையினரும் கைகோர்த்து செயல்பட்ட காலச் சூழ்நிலையில் முஸ்லிம்கள் வாழும் பகுதியில் ஆர்.எஸ்.எஸ் தனது கொடி அணிவகுப்பை நடத்தி “உங்களை அழித்தொழிக்க எங்கள் படை தயாராகிவிட்டது!” என்று அச்சுறுத்திய  நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்துக்கொண்ட சிறப்பான செயல்திட்டம் தான் முஸ்லிம்களின் சுதந்திர  போராட்ட தியாகங்களை வெளிக்கொண்டு வரும் முகமாகவும், சுதந்திர தினத்தை தடையின்றி நெஞ்சு நிமிர்த்தி கொண்டாடுவோமென்றும், இஸ்லாத்தின் எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்க நாங்களும் தயாராகிவிட்டோமெனவும் எழுச்சியுடன் சுதந்திர தின அணிவகுப்பினை நடத்தி வருகிறது.

https://i2.wp.com/popularfrontindia.org/pp/sites/default/files/16%20prde%206-756465.JPG

அதில் ஒரு பகுதிதான் பேண்டு வாத்திய முறையும். பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் தேசியக்கொடிக்கு மதிப்பவர்கள். ஆனால் அதற்கு ஒரு சக்தி இருப்பதாகவோ அல்லது அதை வணங்கவோ செய்கிறார்கள் என்று கூறுவது கடைந்தெடுத்த முட்டாள்த்தனம்.

“எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமையும்” என்பது நபிமொழி. அல்லாஹ் உங்கள் உடைகளையோ, உடைமைகளையோ பார்ப்பதில்லை மாறாக உங்களது உள்ளங்களைத்தான் பார்க்கின்றான் என்பது குர்ஆன் கூறும் வார்த்தைகள். பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் ஏக இறைவனைத் தவிர யாரையும், எதையும் வணங்கமாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கின்றார்கள்.

தீவிரவாதத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஒருபோதும் ஆதரிக்காது:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா “ஜிஹாத்” என்ற பெயரில் நடக்கும் குண்டுவெடிப்பு போன்ற முட்டாள்த்தனமான செயல்களை ஒருபோதும் ஆதரிக்கவும் இல்லை, அதனை செய்ததும் இல்லை. ஆர்.எஸ்.எஸ் போன்ற இந்து வெறிபிடித்த இயக்கங்களிடமிருந்து முஸ்லிம் சமூகத்தை பாதுகாப்பதற்காக, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வகுத்துத்தந்திருக்கக்கூடிய வழிமுறைகளை பின்பற்றி சமுதாய இளைஞர்களை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், அறிவிரீதியாகவும் பலப்படுத்தும் பணிகளைத்தான் செய்து கொண்டிருக்கிறது.

மஹாத்மா காந்தி அவர்கள் இஸ்லாத்தின் இரண்டாம் கலீஃபாவான ஹஜ்ரத் உமர் (ரழி) அவர்கள் செய்த ஆட்சியை போன்று கொண்டு வரவேண்டும் என்று விரும்பினார். அது போன்ற ஆட்சி முறையை கொண்டு வர முடியாவிட்டாலும் கூட அதற்கான முயற்ச்சிகளைத்தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா எடுத்து வருகிறது. நன்மையை ஏவி திமையை தடுக்கும் பணியில் அரசியலும் உண்டு என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும்.

சில வருடங்களுக்கு முன்பாக தென் இந்தியாவில் (கேரளா, கர்நாடகா, தமிழ் நாடு) மட்டுமே செயல்பட்டு வந்த பாப்புலர் ஃப்ரண்ட் தற்போது வட மாநிலங்களில் அதிக அளவில் வளர்ந்து வருகிறது (அல்ஹம்துலில்லாஹ்!) அதற்கான ஆரம்பம்தான் பி.ஜே.பி சங்கப்பரிவாரங்களின் கோட்டையாக இருந்த ராஜஸ்தானில் எஸ்.டி.பி.ஐ பெற்ற வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் கடுமையாக போராடினார்கள். இறைவன் அருளால் வெற்றி பெற்றார்கள்.

தோழமை உணர்வு:

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, எந்த போராட்டங்களாக இருந்தாலும் சரி அவ்வனைத்திலும் சமுதாய இயக்கங்களின் நிர்வாகிகளை அழைக்காமல் இருந்ததில்லை. என்ன தான் சமூக இயக்கங்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு கொண்டிருந்தாலும் ஒட்டு மொத்த சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் பொருட்டு சமூகத்தின் எல்லா இயக்க நிர்வாகிகளையும் நமது நிகழ்ச்சிகளுக்காக அழைத்துள்ளோம். அதே போன்று அவர்கள் அழைத்தும் நமது நிர்வாகிகள் கலந்தும் கொண்டிருக்கிறார்கள்.

தமுமுக‌வைச் சேர்ந்த சகோதரர் ஹாஜா கனி
சகோதரர் லியாகத் அலி (சிறுபான்மை புரட்சி இயக்கம்)
சகோதரர் முனீர் (இந்திய தவ்ஹீத் ஜமாத்)
எஸ்.எம்.ஹிதாயத்துல்லா (தமிழ் இலக்கிய கழகம்) மற்றும் பலர்
கே.எம்.ஷரீஃப் (தலைவர், மக்கள் ஜனநாயக கட்சி, தமிழ் நாடு)
ஷரீஅத் பாதுகாப்பு பேரவை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் நாடு தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில்
இன்று அல்லாஹ்வினுடைய உதவியைக்  கொண்டு நமது இயக்கம் பல்வேறு பரினாமங்களாக வளர்ந்து அடர்த்தியான வேறுடன் இன்று இந்திய தேசம் முழுவதும் பரவி வருகிறது. “பாப்புலர் ஃப்ரண்ட்” என்று கோஷமிட்டால் “ஜிந்தாபாத் ஜிந்தாபாத்” என்று கூறுவதற்கு எல்லா மாநிலங்களிலும் நமது சகோதரர்கள் உண்டு (குஜராத் உட்பட). https://pfikaraikal.files.wordpress.com/2011/09/163277_1499570899591_1543711546_31076595_149006_n.jpg?w=300சுதந்திரம், நீதி மற்றும் பாதுகாப்பு அனைத்து மக்களுக்கும் கிடைக்கவேண்டும் என்ற அடிப்படையில் போராடிவருகிறது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகள் தங்களது செல்வாக்கினை பயன்படுத்தி எப்படியாயினும் பாப்புலர் ஃப்ரண்டை தடை செய்ய வேண்டும் என்று முனைப்புடன் செயல்பட்டுவருகின்றனர். அதனுடைய வெளிப்பாடு தான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு எதிராக இன்று ஊடங்களால் வெளியிடப்படும் அவதூறு செய்திகள்.”அவர்கள் சூழ்ச்சி செய்தார்கள், அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்தான்! ஆனால் அல்லாஹ்வோ சூழ்ச்சியாளர்களெக்கெல்லாம் சூழ்ச்சியாளன்” எனவே அல்லாஹ்வுடைய உதவியை கொண்டு லட்சியத்தை நிச்சயமாக ஒரு நாள் அடைந்தே தீருவோம்! இன்ஷா அல்லாஹ்!

எனவே ஊடகங்கள் தரும் செய்தியை அப்படியே நம்பி விடவேண்டாம். அது நல்ல செய்தியாக இருந்தாலும் சரியே! ஏனென்றால் அல்லாஹ் கூறுகிறான்…

முஃமீன்களே! ஃபாஸிக் (தீயவன்) எவனும் உங்களிடம் ஒரு செய்தியை கொண்டு வந்தால், அதை தீர்க்க விசாரித்துக் கொள்ளுங்கள் (இல்லையேல்) அறியாமையினால் (குற்ற மற்ற) ஒரு சமூகத்தாருக்கு நீங்கள் தீங்கு செய்து விடலாம், பின்னர் நீங்கள் செய்ததைப் பற்றி நீங்களே கைசேதப் படுபவர்களாக (கவலைப்படுபவர்களாக) ஆவீர்கள். (அல் குர்ஆன் 49:6)

யாவற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே!

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s