சங்பரிவார் ஒரு வரலாற்று பார்வை!! – I

Posted: செப்ரெம்பர் 19, 2011 in POPULAR FRONT

ங்பரிவார், இதன் பொருள் கூட்டு குடும்பம். இந்த குடும்பத்தில் பல அங்கத்தினர்கள் அதாவது பல அமைப்புகள் உள்ளன. அந்த அமைப்புகளில் தாய் அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்று அழைக்க கூடிய ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்.இந்த சங்பரிவாரத்தினர் இந்தியாவில் எப்பொழுது தோன்றினார்கள்? அவர்களின் நோக்கம் தான் என்ன? அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? இது வரை அவர்கள் என்ன சாதித்தார்கள் என்பது இன்னும் பலருக்கு தெரியாதது ஒன்றும் ஆச்சரியம் இல்லை.ஏனென்றால், அவர்கள் தான் யார்? தன்னுடைய கொள்கை என்ன? தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை எல்லாம் வெளியில் சொல்லி திரிபவர்கள் அல்லர். மாறாக அனைத்தையும் ஒரு மறைமுக செயல் திட்டத்தின் (ர்னைனநn யுபநனெய) அடிப்படையில் செயல்படுத்துபவர்கள்.

ஆர்எஸ்எஸ்ன் தோற்றம்

https://pfikaraikal.files.wordpress.com/2011/07/sinthikkavum_net1.jpg?w=300ஆர்எஸ்எஸ் என்ற இந்த அமைப்பு 1925ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜயதசமி நாளன்று மஹாராஷ்ட்ரா மாநிலம் நாக்பூர் நகரில் வைத்து தொடங்கபடுகிறது.ஒரு அமைப்பு உருவாக வேண்டும் என்றால், அதனை சிறந்த முறையில் நடத்தி செல்ல வேண்டும் என்றால், அந்த அமைப்பு உருவாவதற்கு பல ஆயிரம் ரூபாய் பணம் தேவைபடும், ஆயிரக்கணக்கில் உறுப்பினர்கள் தேவைபடுவார்கள், நீண்ட நாள் நிலைத்திருக்க அந்த அமைப்பிற்கு சிறந்ததொரு கொள்கை பலம் வேண்டும்.ஆனால் ஆர்எஸ்எஸ் என்ற இந்த அமைப்பு இந்த வித படாடோபமோ, பகட்டோ இல்லாமல் அமைதியாக ஆரம்பிக்கப்படுகிறது. அதுவும் வெறும் ஐந்து பேரை கொண்டு. அவர்கள்
1. டாக்டர். சவர்க்கார்
2. டாக்டர். தோல்கார்
3. டாக்டர். ஹெட்கேவர்
4. டாக்டர். மூங்சே
5. டாக்டர். பராங்சிபே
இவர்கள் அனைவரும் பிராண வகுப்பை சேர்ந்த சித்பவன் மராட்டி பார்ப்பணர்கள்.

அமைப்பின் நோக்கம்

இந்த ஐந்து பேரும் இதற்காக இந்த அமைப்பை ஏற்படுத்தினார்கள்? இந்திய நாட்டிற்கு சுதந்திரம் பெற்று கொடுக்கவா? இல்லை இந்தியாவை வல்லரசாக்கவா?
இல்லை இந்தியாவில் ராமர் ஆட்சியமைப்பதற்காக இவர்கள் அன்று போட்ட வித்து, இன்று செடியாகி, மரமாகி, நன்கு வேர்பிடித்து அசைக்கவே முடியாது இன்ற அளவிற்கு வளர்ந்து நிற்கிறது. இவர்கள் வேதகால ஆட்சியை, வர்ணாசிரம ஆட்சியை கொண்டு வர அல்லும் பகலும் அயராது உழைத்து கொண்டிருக்கிறார்கள் இந்தவித ஆரவாரமும் இல்லாமல்.
அல்லாஹ் கூறுகிறான்,’…எவர்கள் அல்லாஹ் இறக்கியருளிய சட்டத்திற்கேற்பத் தீர்ப்பு வழங்கவில்லையோ அவர்கள்தாம் நிராகரிப்பவர்கள்’. (அல்மாயிதா:44)

அல்லாஹ்வின் சட்டங்களை கொண்ட ஆட்சியை – இஸ்லாமிய ஆட்சியை – இந்த மண்ணில் நிலைநாட்ட நாம் பாடுபடுகிறோமோ இல்லையோ, இந்த ஆர்எஸ்எஸ் காரர்கள் பாடுபடுகிறார்கள் ராம ராஜ்யம் உருவாக்க.அவர்கள் உண்டாக்க துடிக்கும் அந்த வேதகால ஆட்சிக்கு தடையாக உள்ள அனைத்தையும் அவர்கள் துடைத்து எறிய நாடுகிறார்கள்.

அவர்கள் முன் பெரும் தடையாக இருப்பது இந்த முஸ்லிம்கள். இவர்கள் – இந்த முஸ்லிம்கள் – இந்துவாக இருந்தவர்கள்.  இந்த முஸ்லிம்களை – தாய் மதமான இந்து மதத்திற்கு மாற்ற வேண்டும். இல்லையேல் இவர்களை கொன்றொழிக்க வேண்டும்.முஸ்லிம்கள் இந்த மண்ணில் வாழ்ந்தார்கள் என்ற அடிச்சுவடே இல்லாமல் ஆக்கிடவேண்டும். மஸ்ஜித்கள், தர்காக்கள், மதராஸாக்கள் மற்றும் நினைவிடங்கள் அதுபோல முஸ்லிம்களால் கட்டப்பட்ட அனைத்து கட்டிடங்களும் அவமான சின்னங்கள். இது அனைத்தையும் அழித்து இந்தியாவை சுத்தபடுத்தி, ஒரு தூய்மையான – சைவ – ஆட்சியை இந்திய மண்ணில் நிலைநாட்ட வேண்டும் என்பதே இவர்களின் நோக்கமாக இருந்து கொண்டிருக்கிறது.

கோல்வால்கர் என்ற ஆர்எஸ்எஸின் இரண்டாவது தலைவர் 1938ல் தன்னுடைய  நூலில் ஆர்எஸ்எஸின் கொள்கையை இப்படி பிரகடனப்படுத்துகிறார்:

‘ஹிந்துஸ்தானில் வாழும் ஹிந்து அல்லாத மக்கள் ஹிந்துக் கலாச்சாரம் மற்றும் மொழியை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஹிந்து மதத்தை மதிப்பதற்கும், அதனைப் போற்றுவதற்கும் அவர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். ஹிந்து இனம் மற்றும் கலாச்சாரத்தை போற்றுவதைத் தவிர வேறு எந்த எண்ணத்தையும் அவர்கள் வளர்த்துக் கொள்ளக் கூடாது. வெளிநாட்டவர் என்ற மனப்பான்மையை அவர்கள் உதறி விட வேண்டும். அல்லது ஹிந்து சமூகத்திற்கு முற்றிலும் அடிபணிந்த நிலையில், எதனையும் கோராமல், எந்த சலுகைக்கும் உரியவர்களாக இல்லாமல், எந்த முன்னுரிமையும் பெறாமல், குடிமக்களுக்குரிய உரிமைகளைக்கூடக் கோராமல் வேண்டுமென்றால் அவர்கள் இங்கு தங்கியிருக்கலாம்.’இந்த நோக்கத்தை மார்ச் 2002ல் பெங்களூரில் நடந்த ஆர்எஸ்எஸ் தேசிய குழுக் கூட்டத்தில், ‘பெரும்பான்மையினரின் நல்லெண்ணத்தைப் பெறாமல் முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ முடியாது’ என்ற தீர்மானத்தின் மூலம் புதுபித்து கொண்டார்கள்.

இந்த நோக்கத்தை அடைவதற்காக 200 ஆண்டுகள் திட்டம் தீட்டி செயல்படுகிறார்கள். இதே நோக்கத்திற்காக ஸ்பெயினில் கிருஸ்தவர்கள் 120 ஆண்டுகள் திட்டம் தீட்டி செயல்பட்டார்கள். பாலஸ்தீனத்தில் யூதர்களும் நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் முஸ்லிம்களை திட்டமிட்டு படுகொலை செய்துவருகிறார்கள்.

இங்கே நாம் ஒன்றை கவனிக்க வேண்டும் யூதர்களும், கிருஸ்தவர்களும் மற்றும் இந்து பாசிஸ்ட்டுகளும் முஸ்லிம்களை அழிக்க ஒரு நீண்ட அளவிளான திட்டத்தை தீட்டி, அதனை அடைய மிகவும் முனைப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். (யூதர்களும், கிருஸ்தவர்களும் தன் திட்டத்தில் வெற்றி பெற்றுவிட்டார்கள் என்பது நாம் மறுக்கமுடியாத உண்மையாகும்). ஆனால் முஸ்லிம்களிடம் எந்த வித திட்டமுமில்லை தம்மை பாதுகாத்து கொள்ள என்பது மிகவும் வேதனையான ஒன்று. அப்படி இருந்தாலும், ஒரு குறுகிய நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு, வந்த வேகத்தில் காணமல் போனதை தான் நாம் இதுவரை கண்டிருக்கிறோம்.ஆர்எஸ்எஸின் செயல்பாடுகள்
இவர்கள் வெறும் 5 பேர்களை கொண்டு ஆரம்பித்த இந்த இயக்கத்தில், தற்போது கிட்டதட்ட 65 லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் இருக்கின்றார்கள். இவர்கள் அனைவரும் முன்னாள்ஃஇன்னாள் ராணுவம் மற்றும் போலீஸ் துறை அதிகாரிகளால் நன்கு பயிற்சி அளிக்கப்பட்ட அதாவது போர் பயிற்சி பெற்ற ஆர்எஸ்எஸ் ஊழியர்கள்.
இவர்களில் சுமார் 5000 பேர்களுக்கு மேல் தன்னுடைய உடல், பொருள், ஆவி அனைத்தையும் ஆர்எஸ்எஸ்க்காக அர்ப்பணித்து கொண்ட முழு நேர ஊழியர்களும் அடங்குவர். முழு நேர ஊழியர்களில் நம் பிரதம மந்திரி அதாவது தவறான கட்சியில் சரியான மனிதர் என போற்றப்படும் வாஜ்பேய், உள்துறை அமைச்சர் அத்வானி, நவீன ஹிட்லர் என அழைக்கப்படும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, இல.கணேசன் போன்றோர் சிலர்.இவர்கள் பல அமைப்புகளை ஏற்படுத்தி கொண்டு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். தமிழகத்தில் இந்து முண்ணனி, இந்து மக்கள் கட்சி போன்ற அமைப்புகள் வழியாகவும் செயல்படுகிறார்கள்.

இளம் நெஞ்சங்களை இந்துத்துவ பாணியில் சிந்திக்க வைப்பதற்காக, இந்துத்துவ வாதிகளாக மாற்றுவதற்காக ஒரு பெரும் செயல் திட்டத்துடன் செயல்படுகிறார்கள். இதை இவர்கள் கத்தியின்றி, ரத்தமின்றி தொடுக்கப்படும் போர் என்றே கருதுகிறார்கள். இன்றைய இளைஞர்கள் நாளை வரலாறு படைப்பவர்கள் என்பதை நாமும் மறந்துவிடக்கூடாது.இளம் மனங்களை தங்களின் பாணியில் சிந்திக்க வைக்க 50 வருடம் தொடாந்து உழைத்து கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஹரியானாவில் உள்ள குருஷேத்ரா எனும் இடத்தில் ஒரு பள்ளியை 1946ல் நிறுவினார் ஆர்எஸ்எஸ் தலைவர்களில் ஒருவரான கோல்வால்கர். மீண்டும் 1978ல் வித்யபாரதி எனும் கல்வி நிறுவனம் தொடங்கப்பட்டது. இது தான் அனைத்து காவி கல்வி நிறுவனங்களுக்கும் தாய்.இப்போது இதில் 14000 பள்ளிகள், 60 கல்லுஸரிகள் செயல்படுகின்றன. மேலும் 18 லட்சம் மாணவர்கள் இதில் கல்வி கற்கிறார்கள். கல்வி கற்கிறார்கள் என்று சொல்வதை காட்டிலும், இந்துத்துவ வாதிகளாக மாற்றப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பதே பொருத்தமாக இருக்கும். இவர்களை மாற்றுவதற்கு சுமார் 80 ஆயிரம் ஆசிரியர்கள் உழைத்து கொண்டிருக்கிறார்கள். CONT……

Advertisements
பின்னூட்டங்கள்
  1. nallurselvan சொல்கிறார்:

    இளம் நெஞ்சங்களை இந்துத்துவ பாணியில் சிந்திக்க வைப்பதற்காக, இந்துத்துவ வாதிகளாக மாற்றுவதற்காக ஒரு பெரும் செயல் திட்டத்துடன் செயல்படுகிறார்கள். இதற்க்கு நீங்களே (பா.பி .இ.) போதுமே !

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s