இந்தியா யூதர்கள்???

Posted: செப்ரெம்பர் 22, 2011 in NEWS


ந்தியாவிலுள்ள யூதர்கள் பல்வேறு காலப்பகுதிகளில் இந்தியாவிற்குள் வந்தனர். சாலமோனுடைய காலத்திலிருந்தே இந்தியாவில் யூதர்கள் இருந்தார்களென்று சரித்திர ஆராய்ச்சியாளர்கள் திட்டமாக கூறுகின்றனர். பிற்காலங்களில் வந்த யூதர்கள் இந்தியாவின் பல பாகங்களில் குடியேறினர். சிலர் வணிக நோக்கத்துடன் இந்திய வந்தார்கள். அதிகமானோர் அசீரிய சாம்ராச்சிய காலத்தில் சிறையிருப்பிலிருந்து தப்பியோடி பல தேசங்களை கடந்து இந்தியா வந்தடைந்தவர்கள். சிலர் மதக்கலவரங்களினால் இந்தியா வந்தவர்கள்…..

கோச்சின் யூதர்: 2500 ஆண்டுகளுக்கு முன்பு வியாபார நோக்கத்துடன் இந்தியா வந்தவர்கள் (கேரளா)

பெனே இஸ்ரவேல்: 2100 ஆண்டுகளுக்கு முன்பு மஹாராஷ்டிரா பிரதேசத்தில் குடியேறினர்.

பக்தாத் யூதர்கள்: ஏறக்குறைய 250 ஆண்டுகளுக்கு முன்பு அரேபியாவின் பல பாகங்களிலிருந்து வந்து குடியேறியவர்கள்.

பெனே மனாசே: மணிப்பூர், மிசோரம் பகுதிகளில் குடியேறிவர்கள்.

பெனே எப்ராயிம்: இவர்களை தெலுங்கு யூதர்கள் என்று அழைப்பர்.

(இந்த வரைபடம் அண்ணளவாகவே குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கின்றது: உதாரணம் குஜராத்திலிருந்த யூதர்கள் பிற்காலங்களில் கல்கத்தா, பம்பாய் போன்ற நகரங்களில் குடிபெயர்ந்தார்கள்)

கோச்சின் யூதர்கள் (கேரள யூதர்கள்)

இவர்கள்தான் இந்தியாவுக்கு முதலில் வந்த யூதர்கள். இவர்கள் வியாபார நோக்கமாக இந்தியாவிற்கு வந்து, பிற்பாடு அங்கேயே குடியேறியவர்கள். 2500 ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் இந்தியா வந்து, அங்கே தங்களுக்கென்று ஒரு சங்கத்தினையும் அமைத்தனர்.  தற்பொழுது மிகவும் சிறியளவிலேயே இவர்கள் இப்போது இந்தியாவில் இருக்கின்றார்கள். 5000க்கும் அதிகமான யூதர்கள் இஸ்ரவேலுக்கு மீண்டும் சென்று விட்டார்கள். கோச்சின் என்பது கேரளாவிலுள்ள ஓர் பட்டணம். கேரளாவில் உள்ள சினாக்கோக் (யூதர்களுடைய ஜெப ஆலயம்) மிகவும் முக்கியம் வாய்ந்த ஒரு சரித்திரப்பின்னணியுள்ள ஒரு நினைவுச்சின்னமாகவுள்ளது.   இவர்கள் சாலமோனின் காலத்தில் வந்தவர்கள் என்று சில ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர், இன்னும் சில ஆராய்ச்சியாளர்களின் கருத்துப்படி: இவர்கள் பாபிலோனிய படையெடுப்பின்போது வந்திருக்கின்றார்கள். சில யூதர்கள்: தாங்கள் கி.பி 70 நூற்றண்டளவில் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டபொழுது வந்தார்கள் என்று சொல்கின்றார்கள்.

cochin-temples

இவர்களைக்குறித்து தமிழ் மொழியில் எழுதப்பட்ட இரண்டு செப்பு-தகடுகள் உள்ளன. இவைகளின் காலம் 4- 10 நூற்றண்டு. இந்த தகடுகள் தற்பொழுது கோச்சின் பரதேசி யூதர்களின் சினாக்கோக்-கில் உள்ளது.

இங்குள்ள யூதர்கள் தங்களை 3 வகுப்புக்களாக பிரித்து வைத்துகள்ளனர்.

 கறுப்பு யூதர்கள் (மலபார் யூதர்கள்)

வெள்ளை யூதர்கள் (பரதேசி யூதர்கள்)

மண்ணிற யூதர்கள் (மெஷீராரிம் யூதர்கள்)

 பெனே இஸ்ரவேலர்கள் (இஸ்ரவேல் புத்திரர்கள்)

சரித்திர ஆசரியர்களின் கருத்துப்படி: பெனி இஸ்ரவேலர்கள் ஏறக்குறைய கி.பி 2ம் நூற்றண்டளவில் கலிலேயாவிலிருந்து வெளியேறி இந்தியாவிற்கு வந்து குடியேறியவர்கள். அநேகமானோர் மும்பாயில் வாழ்ந்து வந்தார்கள். 18- 19ம் நூற்றாண்டுகளில் இவர்கள் மகாராஷடி;ரா பிததேசத்திலும், அதன் அண்மைகளிலும் வசித்து வந்தனர். 19ம் நூற்றண்டளவில் மும்பாய், பூனா, அகமதபாத், மற்றும் கராய்ச்சி ஆகிய பட்டணங்களில் குடியேறினர். கராய்ச்சி பிற்பாடு பாகிஸ்தானுடன் இணைந்து கொண்டதால் இவர்களை பாகிஸ்தான் இஸ்ரவேலர்கள் என்றும் அழைத்தனர். இவர்கள் மத்தியில் சபாத், விருத்தசேதனம், மற்றும் வேதாகமத்தின் கட்டளைகள் ஆகியன முக்கிய சிறப்பம்சங்கள்.

cochin_jewish_inscription

இவர்கள் எபிரேயு கலந்த மராத்தி மொழியினை பேசி வருகின்றனர். 1948க்கு பிற்பாடு அநேக பெனி இஸ்ரவேலர்கள் தற்பொழுது இஸ்ரவேலுக்கு குடிபெயர்ந்துள்ளனர். இவர்கள் தங்களை ஆரோனின்(மோசேயின் சகோதரன்) வம்சா வழியினர் என்று அழைக்கின்றனர். இவர்களுடைய DNA-யும் அதை உறுதிப்படுத்துகின்றது.

இவர்களின் மொத்த தொகை 65.00

0க்கும் மேலே. இதில் ஏறக்குறைய 60.000

ஆயிரம் பெனி யூதர்கள் தற்பொழுது இஸ்ரவேலில் வசிக்கின்றனர். மும்பாயில் 4000, கல்கத்தா200, டெல்லி 200, அகமதபாத் 200……… மற்றும் ஏனைய ஆங்கிலம் பேசும் நாடுகளில் ஏறக்குடைய 2000ம் பேரும் வசிக்கின்றனர்.

பெனே எப்ராயிம் (எப்ராயிமின் பிள்ளைகள்):

இவர்களை தெலுங்கு யூதர்கள் என்றும் அழைப்பர். காரணம்;: இவர்கள் தெலுங்கு பேசுவது. இவர்கள் மிகவும் சொற்பமானவர்களே. ஏறக்குறைய 300 பேர். ஆந்திரப்பிரதேசத்திலுள்ள குந்தூர் மாவட்டத்தின் கொத்தரட்டிப்பாலம் எனும் கிராமத்தில் இவர்கள் வசிக்கின்றனர். இவர்களும் காணமற்போன 10 கோத்திரங்களில் ஒன்றாகிய எப்ராயிம் கோத்திரத்தை சார்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்படுகின்றார்கள். இவர்கள் எபிரேயு- தெலுங்கு கலந்த ஒரு பாஷையை பேசிவருகின்றனர்.

19ம் நூற்றாண்டில் இவர்களும் பெனி-மனாசே கோத்திரத்தினரைப்போன்று கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். பிற்பாடு 1981ம் ஆண்டிலிருந்து ஏறக்குறைய 50 குடும்பங்கள் யூத மார்க்கத்தையும், அவர்களது மொழியாகிய எபிரேய மொழியையும் கற்று வருகின்றார்கள்.

ஆதாரங்கள்

http://www.bh.org.il/Communities/Archive/Cochin.asp

http://www.shaarhashamaim.com/syn-main.htm

http://www.jewishvirtuallibrary.org/jsource/Judaism/indians.html

http://adaniel.tripod.com/jews.htm

http://www.haruth.com/AsianIndia.html

http://www.jewsofindia.org/home.html

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s