ஐநா பொதுச் சபையை அதிரவைத்த ஈரான் ஜனாதிபதி அஹமத் நிஜாத்

Posted: செப்ரெம்பர் 24, 2011 in MUSLIM WORLD

ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபைக் கூட்டத் தொடரில் அமெரிக்காவின் நியூயோர்க் ஐநா தலைமையகத்தில் உலக பொருளாதார அபிவிருத்தி பற்றி உரையாடியுள்ளார் இங்கு உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உலகம் தொடர்பான இஸ்லாமிய கோட்பாட்டை முன்வைத்து தனது உரையை தொடங்கியுள்ளார். பொதுச் சபையை கேள்வி கணைகளினால் அதிரவைதுள்ளார்.  உலகம் புதிய ஒழுங்கு முறை ஒன்றுக்கு வரவேண்டும். இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளுக்கு உதவ உலக நாடுகள் உதவ முன்வரவேண்டும் என்று உரையை ஆரம்பித்தவர்

ஏகாதிபத்தியத்தின் தயாரிப்பான தற்போது உள்ள ”உலக ஒழுங்கு” குறைபாடுகளை கொண்டது என்றும் வறுமையின் பிடியில் பல பில்லியன் மக்கள் வாடுவதாகவும் உலகின் பட்டினியால் தினமும் 20 ஆயிரம் பேர் மரணிப்பதாகவும் உலகின் வறுமையான மக்களில் 40 வீதமானவர்கள் உலக வருமானத்தின் 5 வீதத்தை மட்டும் பெறுவதாகவும் அதேவேளை 20 வீதமான செல்வந்தர்கள் உலக வருமானத்தின் 75 வீதத்தை பெற்றுகொள்வதாகவும் அமெரிக்காவில் உள்ள 10 வீதமான மக்களினால் உலகின் 80 வீதமான வளங்கள் கட்டுப்படுத்த படுவதாகவும் உலகின் 90 வீதமாகவுள்ள மக்களினால் வெறும் 10 வீதமான வளங்கள் கட்டுப்படுத்த படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் உரையாற்றியுள்ள ஈரானிய ஜனாதிபதி ஐக்கிய நாடுகளின் 66 ஆவது பொதுச் சபை உறுபினர்களை பார்த்து நண்பர்களே உலகில் பல மில்லியன் மக்களை ஆபிரிக்காவில் அவர்களின் வீடுகளில் இருந்து அடிமைகளாக பிடித்து சென்றவர்கள் யார் ?  காலனித்துவதை சுதந்திர நாடுகள் மீது திணித்தவர்கள் யார்? 70 மில்லியன் மக்களை கொலை செய்த முதலாம் உலக மகா யுத்தம் , இரண்டாம் உலக மகா யுத்தம் ஆகியவற்றை ஏற்படுத்தியவர்கள் யார் ?  கொரிய வளை குடாவிலும் , வியட்நாமிலும் யுத்தத்தை விதைத்தவர்கள் யார்? உலகில் படுகொலை பயங்கரவாத்தை பரப்பியவர்கள் யார் ? நாடுகளை ஆக்கிரமிப்பவர்கள் யார்? உலகில் அணுகுண்டை பயன்படுத்தி அப்பாவிகளை படுகொலை செய்தவர்கள் யார்?  யாருடைய பொருளாதாரம் யுத்தத்தை நடத்துவதிலும் , ஆயுத விற்பனையிலும் தங்கியிருக்கின்றது? ஈரானுக்கு எதிராக ஈராக்கை தூண்டி எட்டு வருட யுத்தத்தை திணித்தவர்கள் யார் ? அதன் பின்னர் இரசாயன ஆயுதங்கள் இருப்பதாக கூறி ஈராக் மீது போர் தொடுத்தவர்கள் யார் ?

அறியப்படாத செப்டம்பர் 11 தாக்குதலை நடத்தி அதை சாட்டாக கொண்டு ஆப்கானையும் ஈராக்கையும் தாக்கி அதன் மூலம் மத்திய கிழக்கையும் அதன் வளங்களையும் அபகரிக்க திட்டமிட்டவர்கள் யார்? , உலக பொருளாதார கொள்கை வகுப்பை தமது கைக்குள் வைத்திருப்பவர்கள் யார்? எந்த அரசாங்கள் ஆயிரகணக்கான குண்டுகளை அடுத்த நாடுகள் மீது வீசியது ? , சோமாலியா போன்ற பட்டினி சாவை எதிர்கொள்ளும் நாடுகளுக்கு உணவு பொருட்களை அனுப்பாது பின்நிற்பது யார்? ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையை கட்டுப்படுத்தி வைத்திருப்பது யார்? விடை அனைவருக்கும் தெளிவாக தெரியும் என்று தெரிவித்துள்ளார் .

ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத் உரையாற்றி கொண்டிருக்கும்போது இந்த முறையும் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளின் பிரதிநிதிகள் வெளியேறி சென்றுவிட்டனர். அல்லது ஈரானிய ஜனாதிபதி அஹமத் நிஜாத்தின் கேள்வி கணைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் தப்பி சென்றுள்ளனர்.

 

Advertisements
பின்னூட்டங்கள்
 1. Ameen சொல்கிறார்:

  கேள்விக்கு விடை தெரியா !!!மேற்குலக மாமேதைகள் ….

 2. quadhirababil சொல்கிறார்:

  கேள்விக்கு விடை தெரியா !!!மேற்குலக மாமேதைகள் …முற்றிலும் உண்மை.

 3. singaimail சொல்கிறார்:

  Desperately we need bold leaders like ahamad nijad. insha allah the next generation will erase the westerner culture and their economy.

 4. ahemed Khan சொல்கிறார்:

  yes they dont have guts to face questions.

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s