ஃபிரான்ஸில் 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள்!

Posted: செப்ரெம்பர் 29, 2011 in NEWS

ஐரோப்பாவின் மிக பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்ட ஃபிரான்ஸில், மக்கள் வீதிகளில் தொழாமல் தடுக்க 100 முதல் 150 புதிய பள்ளிவாசல்கள் ஃபிரான்ஸ் நாட்டில் கட்டப்பட்டு வருகிறது. முஸ்லிம்கள் பள்ளிகளில் போதுமான இட வசதி இல்லாமல் வீதியில் தொழுகிறார்கள்.இதை தடுப்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஃபிரான்ஸ் அரசாங்கம் இறங்கியுள்ளது.

Mohammed Moussaoui, ஃபிரான்ஸ் முஸ்லீம் கவுன்சில் (CFCM) தலைவர், திட்டங்கள் பல்வேறு நிலைகளில் நடைப்பெற்றுக் கொண்டிருக்கிறது ,சில பள்ளிகள் வடிவமைப்பிலும் சில பள்ளிகள் முடியும் நிலையிலும் உள்ளதாக அவர் தெரிவித்தார். ஃபிரான்ஸில் மொத்த மக்கள் தொகையான 65 மில்லியன் மக்களில் ஏழு மில்லியன் முஸ்லிம்கள் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டத்திற்கான பணம் ஃபிரான்ஸ் நாட்டில் வாழும் முஸ்லிம்களிடமிருந்தே அதிகமாக வருகிறது,வெளிநாட்டில் இருந்து குறைவாகவே உதவி தொகை வருவதாக ரமளானை முன்னிட்டு RTL என்ற பிரெஞ்சு வானொலி நிலையத்திற்கு பேட்டி அளித்த Moussaoui தெரிவித்தார்.

பள்ளிவாசல்களில் உள்ள இட பற்றாக்குறை காரணமாகவே வீதியில் முஸ்லிம்கள் தொழும் நிலை ஏற்படுவதாக அவர் கூறினார்.

 

Marseille , ஃபிரான்சின் இரண்டாவது பெரிய முஸ்லீம் சமூகத்தை கொண்டிருக்கும் நகரம்.இந்த நகரத்தின் மொத்த மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கை விட அதிகமாக முஸ்லிம் மக்கள் வசிக்கிறார்கள் அதாவது 250,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.இந்த நகரத்தில் ஒரு பெரிய மசூதி தேவை என பரவலான கருதப்படுகிறது.

பதினோரு ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ரோம் (ROME) நகரத்தில் 2000 பேர் தொழும் அளவுக்கு பிரமாண்டமான பள்ளிவாசல் ரமலானின் திறக்கப்பட்டது.இந்த பள்ளியை எழுப்புவதர்க்கும் அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் நெருக்கடி ஏற்படத்தான் செய்தது.

Dalil Boubakeur, பாரிஸ் கிராண்ட் மசூதியின் இமாம் கூறுகையில் ஃபிரான்ஸில் உள்ள பள்ளிகளின் எண்ணிக்கையை 2000 த்திலிருந்து இரு மடங்காக ஆக்க வேண்டும் என்று கூறுகிறார்.மேலும் பிரெஞ்சு ஜனாதிபதியான சர்கோசியும் பள்ளிகள் அதிகரிப்பதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஃபிரான்ஸ் நாட்டில் உள்ள La Croix என்ற தினசரி செய்தித்தாள் நிறுவனத்தால் நடத்தப்பட்ட ஒரு ரமலான் வாக்கெடுப்பில் ரோமன் கத்தோலிக்கர்களை விட ஃபிரஞ்சு முஸ்லிம்களின் நம்பிக்கை நடைமுறையில் மிகவும் அதிகம் என்று தெரிவித்துள்ளது.

பிரெஞ்சு மக்களில் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் தங்களை கத்தோலிக்கர்கள் என்று கூறிக் கொள்கின்றனர் ஆனால் அவர்களுடைய மத சடங்குகளில் 15 % மட்டுமே ஈடுபடுகிறார்கள் என்று சென்ற வருடம் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பு ஒன்று தெரிவிக்கிறது.

பிரெஞ்சு முஸ்லிம்களில் 1994 ஆம் ஆண்டு 60% மக்கள் மட்டுமே ரமலான் மாதத்தில் நோன்பு நோற்றார்கள் எனவும் தற்போது 71% மக்கள் நோன்பு நோர்கிரார்கள் என்பதாகவும் அந்த செய்தித்தாள் தெரிவிக்கிறது.

“ரமலான் என்ற நடைமுறை மதம் சம்பந்தமாக மட்டும் இல்லாமல் கலாசார முக்கியத்துவம் வாய்ந்தாதாக இருக்கிறது.ரமளானை அனைவராலும் கண்ணியமாக பார்க்கப்படுகிறது.இந்த நடைமுறையை நம்பாதவர்களாக இருந்தாலும் ரமளானை மதிக்கக் கூடியவர்களாக இருக்கிறார்கள் என்று Franck Fregosi, என்ற ஒரு இஸ்லாமிய முன்னணி ஃபிரஞ்சு ஆய்வாளர், செய்தித்தாளுக்கு தெரிவித்தார்.

source: http://www.frtj.net/2011/08/100.html

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s