பாப்புலர் ஃப்ரண்ட் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கான அலுவலகம் திறப்பு!

Posted: ஒக்ரோபர் 10, 2011 in POPULAR FRONT

ஒடுக்கப்பட்ட, நசுக்கப்பட்ட, அடக்குமுறைகளுக்கு ஆட்படுத்தப்பட்ட சிறுபான்மை மக்கள் குறிப்பாக முஸ்லிம் சமூகத்தின் ஒட்டு மொத்த வலிமைக்காக போராடிக்கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் தேசிய அளவில் டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் “சமூக நீதி மாநாட்டை” நடத்த தீர்மானித்துள்ளது.

மாநாட்டிற்கான பணி அலுவலக திறப்பு விழா இன்று காலை சரியாக 11.00 மணி அளவில் ராம்லீலா மைதானம் அருகே எண் 2, அஷஃப் அலி ரோடு,  வரதமான் சிட்டி பிளாசாவில் வைத்து நடைபெற்றது. முஸ்லிம் முத்தஹிதா மாஸ் இயக்கத்தின் தலைவர் மெளலானா நவாபுதீன் நக்ஷ்ஷபந்தி அவர்கள் அலுவலகத்தை திறந்து வைத்தார். சமூக நீதி மாநாட்டிற்கான அறிக்கையை சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் ஈ.அபூபக்கர் அவர்கள் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் துவக்க உரையும் மாநாட்டின் நோக்கத்தைப்பற்றியும் உரை நிகழ்த்தினார். அவர் கூறும்போது தென்இந்தியாவை தவிர்த்து தற்போதுதான் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வட இந்தியாவில் முதன் முதலாக மாபெரும் நிகழ்ச்சியை நடத்த இருக்கிறது. ” நீதியால் தேசத்தை புணரமைப்போம்” என்ற கோஷத்தோடு இந்த மாநாட்டிற்கான பணிகள் நடைபெறும் என்றார்.

பின்னர் உரை நிகழ்த்திய எஸ்.டி.பி.ஐயின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் அவர்கள் கூறும் போது “உரிமைகளை பெறுவதற்காக யாசகம் கேட்பதை விட்டு அதற்காக போராட வேண்டிய தருணம் வந்துவிட்டது. 1970 களில் ஆர்.எஸ். எஸ் மற்றும் ஜனசங்கமும் தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக ஜே.பி. நாராயணனை பயன்படுத்தியது, அதே போல் இன்றும் அதே சமூக விரோத சக்திகளால் அன்னா ஹஸாரே பயன்படுத்தப்படுகிறார். சமீபகாலமாக மேற்குவங்காளம், ராஜஸ்தான், உத்திர பிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படும் வகுப்புவாத பதற்றம் தீட்டமிடப்பட்ட சதியேயாகும்!” எனக்கூறினார்.

பின்னர் உரை நிகழ்த்திய அம்பேத்கர் சமாஜ் கட்சியின் தலைவர் பாய் தேஜ் உரை நிகழ்த்தும்போது பாப்புலர் ஃப்ரண்ட் நடத்த இருக்கும் சமூக நீதி மாநாடு வெற்றியடைவதற்கு தான் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறினார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு உறுப்பினரும், மலையாள பத்திரிக்கையான தேஜஸ் நாளிதழின் ஆசிரியருமான பேராசிரியர் கோயா மற்றும் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் துணைத்தலைவர் மெளலானா ஜுல்பிகர் அலி ஆகியோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இறுதியாக மாநாட்டின் ஒருங்கினைப்பாளரும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணைத்தலைவருமான முஹம்மது அலி ஜின்னா அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள். டெல்லி சுற்றுவட்டாரத்தைச்சேர்ந்த பல முஸ்லிம் தலைவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

செய்தி: தன்வீர்

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s