வலிமைபெறுவதற்கு சமூகம் தயார்! சில‌ சமூக இயக்கங்கள் தயார் இல்லை!

Posted: ஒக்ரோபர் 13, 2011 in POPULAR FRONT, SDPI

மேற்கூறிய தலைப்பில் ஒரு சிறு கட்டுரையை எழுத மனம் தோன்றியது. இதை எழுதும்போது மன வேதனை அடைந்தாலும், எழுதியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தில் எழுதுகிறேன். இன்று நமது சமூகத்தினுடைய ஒற்றுமைக்காவும், வலிமைக்காகவும் கடுமையான முறையில் போராடி வருகிறோம். இதற்காக நம்முடைய கருத்து வேறுபாடுகளை புறந்தள்ளிவிட்டு சமூக வலிமைக்காக ஒன்று சேர வேண்டும் என்ற எண்ணம் ஒரு புறம் இருந்தாலும் அதை சில இஸ்லாமிய இயக்கங்கள் அதை செயல் அளவில் நடைமுறைப்படுத்த தவறி வருவதையே இந்தக்கட்டுரையில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

இன்று தமிழகத்தில் பெரும்பாலான கட்சிகள் தனி மனிதனை புகழ்பாடக்கூடிய வகையிலேயே செயல்பட்டுவருவதை நாம் பார்க்கலாம்.

அவ்வாறு செயல்படும் கட்சிகள் அந்த தனி மனிதனுக்கு பிறகு அந்தக்கட்சியை திறம்பட வழி நடத்துபவர்கள் அடுத்தது இல்லை என்று கூட சொல்லலாம். உதாரணத்திற்கு

திராவிட முன்னேற்ற கழகம் – மு. கருணாநிதி
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் – ஜெயலலிதா
தேசிய முற்போக்கு திராவிட கழகம் – விஜயகாந்த்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் – வை. கோபால்சாமி
விடுதலை சிறுத்தைகள் – திருமாவளவன்
சமத்துவ மக்கள் கட்சி – சரத்குமார்

மேற்கூறிய கட்சிகளின் நிறுவனர்களாகவும் அதேசமயம் அதன் தலைவர்களாகவும் இருந்து வருகிறார்கள். இவர்களுடைய காலத்திற்கு பின்பு அந்தக் கட்சிகளை வழி நடத்துபவர்கள் யார்? என்றால் அதற்கு விடை கிடையாது.. அதே போன்று இந்தக்கட்சிகளிலிருந்து வெற்றி பெற்றவர்கள் சட்டசபைக்கோ அல்லது பாராளுமன்றத்திற்கோ உறுப்பினர்களாக சென்றார்களேயானால் அவர்களின் தலைவர்களை புகழ் பாடக்கூடிய செயல்களைத்தான் செய்துவருகிறார்களே தவிற சுயமாக, தவறை சுட்டிக்காட்டக்கூடிய தன்மைகள் இந்த கட்சிக்காரர்களிடம் இருப்பதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

இப்பேற்பட்ட கட்சிகளை ஆதரிப்பதினால் முஸ்லிம் சமூகத்திற்கு எந்தப்பலனும் ஏற்படப்போவதில்லை. அப்படியே ஆதரித்து வெற்றி பெற்று சட்டசபைக்குச்சென்றால் அங்கு அவர்கள் பேசும் பேச்சுக்கு எதிர் பேச்சோ, எதிர் கருத்தோ கூறாமல் அமைதி காத்துத்தான் இருக்க வேண்டும். ஏனென்றால் கூட்டணிக்கட்சியாயிற்றே! பேச முடியுமா?

இதற்கு ஒரு நல்ல உதாரணம் சமீபத்தில் தமிழக சட்டமன்றத்தில் விவாதிக்கப்பட்ட ஒரு விஷயம். அதாவது ஒரு சட்டசபை உறுப்பினர் தமிழ அரசு பூரண மதுவிலக்கை அமுல் படுத்த வேண்டும் என கோரிக்கை வைக்கிறார். அதற்கு முதல்வர்கள் அவர்கள் “மது விலக்கு கேட்க்கக்கூடியவர்கள் தான் மதுவை அதிக அளவு விற்பனை செய்கிறார்கள்” என்று பதில் அளித்தார். அங்கே மது அருந்தாத எத்தனையோ சட்டசபை உறுப்பினர்கள் இருந்தும் எவரும் முதல்வரின் இத்தகைய பதிலுக்கு கண்டனமோ அல்லது மாற்றுக்கருத்தோ கூறவில்லை, காரணம் கூட்டணி தர்மமாம்! ஆக ஒன் மேன் ஷோ வாக இருக்கக்கூடிய கட்சிகளை ஆதரித்து வெற்றிப்பெற்று சட்டமன்றத்திற்கு செல்வதினால் எந்த பயனும் இருக்கப்போவதில்லை என்பது இதிலிருந்து நாம் புரிந்து கொள்ளவேண்டும்.

இன்று வலிமை அடைவதற்கு முஸ்லிம் சமூகம் தயாராகிவிட்டது! ஆனால் ஏனோ சில முஸ்லிம் இயக்கங்கள் மட்டும் அதற்கு தயாரில்லை. ஏன் இவ்வாறு கூறுகிறோம் என்பதற்கு தொடர்ந்து படியுங்கள்…..

இன்று தமிழகத்தில் ஒரு திருப்புமுனையாக முஸ்லிம் சமூகம் தலித் சமூகத்தோடு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தல் களத்தை சந்திக்கிறது. இதற்கு அவர்கள் மக்கள் ஜனநாயகக்கூட்டணி என்று பெயர் வைத்துள்ளார்கள். இந்தக்கூட்டணியில்…

1. சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா
2. விடுதலை சிறுத்தைகள்
3. வெல்ஃபேர் பார்டி ஆஃப் இந்தியா
4. சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை
5. ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த்
6. ஜம்மியதுல் உலமாயே ஹிந்த்
7. ஆல் இந்தியா மில்லி கவுன்சில்
8. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்
9. ஷரிஅத் பாதுகாப்பு பேரவை
10. இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்
11. இஸ்லாமிய இலக்கிய கழகம்
12. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
13. மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

இது தவிற சில கிறிஸ்தவ அமைப்புகள் ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்துள்ளது. இந்தக்கூட்டணியின் சார்பாக சென்னை மேயர் பதவிக்கும் அதே சமயம் சென்னை முழுவதும் 20 இடங்களில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் போட்டியிடுகின்றனர். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவும் இந்தக்கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளது என்ற அடிப்படையில் எஸ்.டி.பி.ஐயின் வேட்பாளர்களை ஆதரித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சகோதரர்களூம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். அந்த வகையில் நாமும் மண்ணடியில் உள்ள 60 வட்டத்தின் வேட்பாள் எஸ். அமீர் சுல்தானை ஆதரித்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டோம்.

மற்றக்கட்சிகளெல்லாம் எங்களுக்கு ஓட்டுப்போட்டு வெற்றியடையச்செய்தால் இந்த பகுதி மக்களுக்காக நாங்கள் அதை செய்வோம்! இதை செய்வோம் என்று வெற்றுக்கூச்சல் போட்டு பிரச்சாரம் செய்து கொண்டிருக்கையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மட்டும் புதுமையான முறையில் பிரச்சாரத்தில் இறங்கினர். கட்சி தொடங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளே ஆன நிலையில் 60 வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் செய்த சேவைகள் அனைத்தையும் புகைப்படம் எடுத்து ஒவ்வொரு வீடாகச் சென்று தாங்கள் செய்த பணிகளை மக்களிடம் எடுத்துக்காட்டின் ஓட்டுகள் சேகரித்து வருகின்றனர். ஒவ்வொரு வீடுகளிலும் எஸ்.டி.பி.ஐ ஆற்றிய பணிகளைக்கண்டு வியப்படைந்து தங்களது ஓட்டுக்களை எஸ்.டி.பி.ஐக்கே வாக்களிக்கப்போவதாக வாக்குறுதிகொடுத்து வருகின்றனர்.

பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக  முஸ்லிம் இயக்கத்தலைவர்களையும் மரியாதை நிமித்தமாக சந்தித்து 60 வட்ட வேட்பாளர் அமீர் சுல்தான் ஆதரவு திரட்டி வருகிறார். அதன் அடிப்படையில் சமீபத்தில் போஸ்ட் ஆஃபிஸ் தெருவில் அமைந்திருக்கின்ற இந்திய தவ்ஹீத் ஜமாத் தலைவர் எஸ். எம். பாக்கர் அவர்களை சந்தித்து ஆதரவு கேட்டார்.

எப்பொழுதுமே அமீர் சுல்தான் அவர்களை அன்போடும் பாசத்தோடும் தம்பி என்று அழைக்கும் பாக்கர் அவர்கள் அமீர் சுல்தானிடம் ” ஏன் முஸ்லிம் சமூகத்தின் ஓட்டை பிரிக்கிறீர்கள்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அமீர் சுல்தான் அவர்கள் நாங்கள் ஓட்டைபிரிக்கவில்லை என்றும், யார் இந்தப்பகுதியில் நல்லது செய்கிறார்களோ அவர்களுக்கு நீங்கள் வாக்களியுங்கள் என்று கேட்டுவிட்டு விடைபெற்றார்.

(அது ஏனோ தெரியவில்லை எஸ்.டி.பி.ஐ போட்டியிட்டால் மட்டும் இந்தக்கேள்வி அவர்களை மட்டும் நோக்கி கேட்கப்படுகிறது. கடந்த சட்டமன்றத்தேர்தலிலு இதே நிலைதான். சென்னை துறைமுகம் தொகுதியிலும், ராமநாதபுரம் தொகுதியிலும் முதன் முதலிம் வேட்புமனு தாக்கல் செய்தவர்கள் எஸ்.டி.பி.ஐயினர். அதற்கு பின்பு தான் ராமநாதபுரத்தில் மனித நேய மக்கள் கட்சியினரும், துறைமுகம் தொகுதியில் முஸ்லிம் லீக் கட்சியினரும் மனு தாக்கல் செய்தார்கள். ஆனால் ஏன் முஸ்லிம் சமூகத்தின் ஓட்டைப்பிரிக்கிறீர்கள் என்ற கேள்வி அவர்களை நோக்கி கேட்கப்படவில்லை.)

இதே 60வது பகுதியில் கவுன்சிலர் வேட்பாளராக அமீர் சுல்தானை எதிர்த்து தி.மு.கவைச் சேர்ந்த கனி, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துல்கருணை, மதிமுகவைச்சேர்ந்த சீமா பஷீர் ஆகியோர் போட்டியிடுகின்றனர். இதில் ம.ம.க மற்றும் இந்திய தவ்ஹீது ஜமாத் அமைபினர் சீமா பஷீர் அவர்களுக்கு ஆதரவு அளித்துள்ளனர்.

நாங்கள் பணிவோடு கேட்கும் ஒரு கேள்வி…..! சகோதரர் பாக்கர் அவர்கள் பதில் கூற வேண்டும்…

மண்ணடியில் 60வது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் எந்தெந்த சமூக சேவைகளில் மதிமுகவினர் குறிப்பாக சீமா பஷீர் அவர்கள் பணியாற்றியுள்ளார் என்பதை கூறுங்கள்.

1. பல ஆண்டுகளாக் கேட்பாறற்று துற்நாற்றம் வீசிக்கொண்டிருந்த ஓலக்கடை மார்கெட் பகுதியை சுத்தம் செய்தது யார்?
2. அங்கப்பென் தெருவில் உள்ள இளையான்குடி பள்ளளி மற்றும் ஈத்கா மஸ்ஜத் அருகே இருந்த குப்பைகளை சுத்தம் செய்தது யார்?
3. மக்கள் அதிகம் வசிக்ககூடிய ஆடியபாதம் தெருவில் பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த குப்பைகளை அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்தது யார்?
4. மூட்டைக்காரன் தெருவில் இடையுறாக இருந்த குப்பைகளை அகற்றியது யார்?

நீங்களும் இதே பகுதிகளில் தான் உலா வருகிறீர்கள். பொதுமக்களின் கண்களுக்கெல்லாம் தென்பட்ட இந்த சமூக சேவைகள் தங்களின் கண்களுக்கு மட்டும் படவில்லையா? யார் வேண்டுமானாலும் வெற்றி பெற்று சமூகத்தை ஏமாற்றலாம் ஆனால் எஸ்.டி.பி.ஐயினர் மட்டும் வெற்றிபெற்று சமூக சேவைகளில் ஈடுபடக்கூடாது என்ற நல்லெண்ணம் தானே?

வாழ்த்துக்கள்! வஸ்ஸலாம்!

SDPI-chennai

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s