முஸ்லிம்களுக்கு 5 மனைவிகள் 25 பிள்ளைகள் – பிரவீன் தொகாடியா

Posted: நவம்பர் 9, 2011 in POPULAR FRONT

அஹமதாபாத்: ஆர்.எஸ்.எஸ் தீவிரவாத இயக்கத்தின் சாமியார்களின் பிரிவான‌ விஷ்வ ஹிந்து பிரிஷத்தின் (வி.ஹெச்.பி) மூன்று நாள் நிகழ்ச்சி குஜராத் மாநிலத்தில் அஹமதாபாத்திலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள பிரானா நகரில் நடைபெற்றது. இமாம் ஷாபா தர்கா அருகே வைத்து நடைபெற்ற இம்மாநாட்டில் வி.ஹெச்.பி.யின் பொதுச்செயலாளர் கலந்து கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான விஷப்பேச்சுக்களை அள்ளி தெளித்திருக்கிறார்.

முஸ்லிம்கள் இறைவனின் ஆணைப்படி தியாகத்திருநாளில் குர்பானி கொடுத்து கொண்டாடிய இச்சமயத்தில் பிரவீன் தொகாடியா மாடுகள் அறுக்கப்படுவதை ஒரு போதும் பொருத்துக்கொள்ளமாட்டோம் என்று பேசியுள்ளான்.

குஜராத்திலிருந்தும் நாட்டின் இன்ன பிற பகுதியிலிருந்தும் வி.ஹெச்.பி.யின் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்க கூடாது என்று குஜராத் ஆளுனருக்கு கோரிக்கை வைத்திருந்தும் நவம்பர் 5 முதல் 7ஆம் தேதி வரை வி.ஹெச்.பி தனது நிகழ்ச்சியை நடத்தியது.

வி.ஹெச்.பி. நடத்திய இந்த நிகழ்ச்சியால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது.காரணம் இவர்கள் பேசிய பேச்சு ஸ்பீக்கர் மூலம் வெளியில் இருந்த மக்களின் காதுகளிலும் விழுந்தது.  இந்நிலையில் தனக்கே உரித்த பாணியில் சிறுபான்மை முஸ்லிம்களுக்கெதிரான தனது விசமத்தனமான பேச்சுக்களை பிரவீன் தொகாடியா என்ற கொடியவன் கட்டவிழ்த்துவிட்டான்.

இந்துக்களுடைய வரலாறும் இந்துக்களுடைய கலாச்சாரமும் 6000 கோடி வருடங்களுக்கு முன்பாக இந்த தேசத்தில் இருந்து வருகிறது. இந்த முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் 1400 மற்றும் 2000 ஆண்டுகளுக்கு முன்பு எங்கே இருந்தார்கள்? இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து அரேபியாவில் இருக்கின்ற முஸ்லிம்களின் புனித ஸ்தலத்தையும், வாடிகனில் இருக்கின்ற கிறிஸ்தவர்களின் புனித ஸ்தலத்தையும் கைபற்ற வேண்டும்.முஃமீன் (இறை நம்பிக்கையாளன்) என்று முஸ்லிம்கள் உபயோகப்படுத்தும் வார்த்தையை நையாண்டி செய்து விட்டு, இந்துக்களின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும், இந்துத்துவ கொள்கையை பரப்புவதற்கும் இந்துக்கள் ஜாதி வேறுபாடின்றி ஒன்று சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று  கூறியுள்ளான்.

இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து நம்முடைய பலத்தை இவ்வுலகத்திற்கு உணர்த்த வேண்டும், அதற்கு இதுவே சரியான தருணம். கோத்ராவில் நடந்த சம்பவம் தான் இந்துக்களை ஒன்றினைத்து அதன் பலம் என்ன என்பதை மாநிலத்திற்கு உணர்த்தியது.இந்த தேசத்தில் அட்டூழியங்களை அரங்கேற்றும் முஸ்லிம்களை இந்த மத்திய அரசு கண்டுகொள்வதில்லை. கலவர எதிர்ப்பு மசோதா சட்டத்தின் மூலம் அவர்களுக்கு பாதுகாப்பு அளித்து வருகிறது.

ஜிஹாதிகளின் தாக்குதல்கள் அதிகமாகிக்கொண்டிருக்கிறது. இஸ்லாமிய ஜிஹாதிகள் நாடுமுழுவதும் எல்லா இடங்களிலும் பரவி வருகின்றனர். முஸ்லிம்களுக்கு முன்பாகவும் கிறிஸ்தவர்களுக்கு முன்பாகவும் மத்திய அரசு மண்டியிட்டுவிட்டது. எனவே தான் இந்துக்கள் அனைவரும் ஒன்றினைந்து வீதிக்கு வந்து தங்களுடைய பலத்தை வெளிக்காட்ட வேண்டும்.

தொடர்ந்து முஸ்லிம்கள் மீது குற்றச்சாட்டையும் அவதூறையும் அள்ளித் தெளித்த பிரவீன் தொகாடியா மேலும் உளறிய வார்த்தைகள் இதோ:

அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் சிரமத்திற்கு ஆளாகிக்கொண்டிருக்கிறான். இதற்கு காரணம் நாட்டின் ஜனத்தொகை கூடுவதால் தான். பொது சிவில் சட்டத்தை முஸ்லிம்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் அவர்கள் மீது அதை அரசாங்கம் உடனடியாக திணிக்க வேண்டும். முஸ்லிம்கள் 5 மனைவிகளை கட்டிக்கொண்டு 25 பிள்ளைகள் பெறுவதை தடுத்து நிறுத்தாத வரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காண முடியாது. அதே போன்று வங்காளதேசத்திலிருந்து திருட்டுத்தனமாக ஊடுருவியுள்ள லட்சக்கணக்கானவர்களை உடனடியாக நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும். ஆனால் இந்த அரசாங்கமோ அவர்களை தன்னுடைய மருமகனைப்போல பாவித்து வருகிறது.

இந்தியாவில் 12% முஸ்லிம்கள்,  2.5% கிறிஸ்தவர்கள் தான் வாழ்கிறார்கள்.ஆனால் 80% அதிகமாக வாழும் இந்துக்கள் இரண்டாம் தார குடிமக்களாக‌ நடத்தப்பட்டுவருகின்றனர். இதை இனிமேல் அவர்கள் ஒருபோதும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள். இஸ்லாமிய பயங்கரவாதத்தால் இந்துக்கள் அவமானப்படுத்தப்பட்டு வேதனைக்குள்ளாக்கப்பட்டு வருகிறார்கள், ஆனால் இந்த அரசாங்கமோ அவர்கள் ஹஜ்ஜு செய்வதற்காக மாணியம் வழங்கி வருகிறது.  என்று கூறினான்.

ஜனநாயக கடமையான ஓட்டுரிமையை முஸ்லிம்கள் சரியாக பயன்படுத்தாவிட்டால் அதை அவர்களிடமிருந்து பரித்து விட வேண்டும். முஸ்லிம்கள் இந்த நாட்டில் இருக்கும் வரை பசுக்களுக்கு பாதுகாப்பு என்பதே கிடைக்காமல் போய்விடும். இந்தியாவில் புனித பசுக்களுக்கு பாதுகாப்பு இல்லை. பசுவை தாயாக அறிவிக்க வேண்டும். பசுக்கள் கொல்லப்படுவதை எல்லா ரீதியிலும் தடைசெய்து அதற்கு பாதுகாப்பளிக்க வேண்டும்.

மோடியின் உண்ணாவிரதம், அத்வானியின் ரதயாத்திரை போன்ற விவகாரங்களைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்ப முயற்சித்தும் அவர்களுக்கு விடையளிக்காமல் நைசாக நழுவி சென்றுவிட்டான் பிரவீன் தொகாடியா.
நிகழ்ச்சியின் போது நடந்த‌ முக்கிய அம்சங்கள்:

அஹமதாபாத் என்ற பெயரை எப்படியாவது ஆமதாவாத் என்று மாற்றிவிடவேண்டும்  என்பதற்காகவே அஹமதாப்பத்திற்கு பதிலாக ஆமதவாத் என்று மேடையில் பேசிய அனைவரும் உச்சரித்து வந்தனர். ஆனால் மூடர்கள் அவர்கள் அடித்த பேனரிலேயே அஹமதாபாத் என்றே எழுதியுள்ளார்கள்.

பேசும் போது மட்டும் முஸ்லிம்களுக்கு எதிராக விஷமத்தனமான கருத்துக்களை கூறிவிட்டு அமரும் போது பிரவீன் தொகாடியா சோகமாகவே காணப்பட்டான். (இதற்கு காரணம் பின்னர்தான் தெரியவந்தது. தொடர்ந்து படியுங்கள்)

விஜயபாதை என்ற கையேடு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவர்களுக்கும் இலவசாமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.
சட்டீஸ்கர் போன்ற வெவ்வேறு மாநிலங்களிலிருந்தும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்திருந்தாலும், பெரும்பாலானவர்கள் நிகழ்ச்சியின் இரண்டாம் நாளே குஜராத்தில் உள்ள பல இடங்களை சுற்றிப்பார்ப்பதற்கு சென்றுவிட்டனர். பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் கேட்டதற்கு முதலைமைச்சர் நரேந்திர மோடி இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது தங்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளிப்பதாக கூறியுள்ளார்கள். நரேந்திர மோடியின் அரசபையிலிருந்து ஒருவர்கூட இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாதது குறிப்பிடத்தக்கது.

பிரவீன் தொகாடியாவின் இந்த பேச்சை கேட்டவர்கள் நிகழ்ச்சி முடிந்த பிறகு அருகிலுள்ள ஷா பாபாவின் தர்காவிற்கும் விஜயம் செய்துள்ளனர்.ஆக மொத்தத்த்ல் வி.ஹெச்.பி நடத்திய இந்த  நிகழ்ச்சிக்கு அவர்களின் உறுப்பினர்களுக்கு மத்தியில் கூட வரவேற்பினை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisements
பின்னூட்டங்கள்
  1. yasirhasani சொல்கிறார்:

    iஇதுஅழிவின் அறிகுறி அபு ஜ்ஹல் மற்றும் அபு லஹ்ப் போன்றவர்களை பார்த்த இஸ்லாம் இவன்கள் எல்லாம் துசு .

  2. Ameen சொல்கிறார்:

    மறுமொழிக்கு “இடுமொழி” தேவை … ஆர் எஸ் எஸ் எழுதிய மறுமொழிக்கு பதில் தரவும்… மறுமொழிக்கு பதில் தந்தாள் நன்றாக இருக்கும்….

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s