சிஐஏ உளவாளி ஈரானில் கைது! Read more about சிஐஏ உளவாளி ஈரானில் கைது! [1474] | மத்திய கிழக்கு செய்திகள் | செய்திகள் at www.inneram.com

Posted: திசெம்பர் 19, 2011 in MUSLIM WORLD

அமெரிக்காவின் உளவுப் பிரிவான CIA எனப்படும் ஐக்கிய அமெரிக்க மத்திய புலனாய்வு முகமையின் உளவாளி ஒருவரை ஈரான் கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அமைச்சகத்தை மேற்கோள் காட்டி வெளியிடப்பட்டுள்ள ஊடக செய்திகளில், கைது செய்யப்பட்டுள்ள நபர் புலனாய்வு அமைச்சகத்தில் ஊடுருவி பெரிய அளவிலான உளவு தகவல்களை சிஐஏ-வுக்கு பரிமாறும் வேளையில் ஈடுபட முயற்சி செய்ததாகவும், அவரது பணியை செய்வதற்கு முன்னரே அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளன.

ஈரானை பிறப்பிடமாக கொண்ட அந்த சிஐஏ உளவாளி, கடுமையான பயிற்சிகளை பெற்றவர் என்றும் பகுப்பாய்வாளராக  பணியாற்றினார் என்றும் அந்த செய்தி குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன. மேலும் இவர், இராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் அமெரிக்க இராணுவத்தில் பணிபுரிந்தவர் என்பதும் அவரைப் பற்றிய எந்த அடையாளத்தையும் ஈரான் வெளியிடவில்லை எனபதும் குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஈரான் வான் பரப்பில் பறந்து உளவுபார்த்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் முக்கிய உளவு விமானம் ஒன்றை ஈரான் தரையிறக்கிப் பிடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s