ஜனவரி, 2012 க்கான தொகுப்பு


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்துறையாடல் சென்னை மண்ணடியில் உள்ள ஆஷிகா பேலஸில் 26.11.2012 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாநில பொது செயலாளர் M. ஹாலித் முஹம்மது அவர்கள் வரவேற்புறை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் மாநில தலைவர் A. S. இஸ்மாயில் அவர்கள் தலைமை உரை நிகழ்த்தினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வின் தேசிய துணைத்தலைவர் M. முஹம்மது அலி ஜின்னா அவர்கள் அறிமுக உறை நிகழ்த்தினார்கள்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வரவிருக்கின்ற ஏப்ரல் மாதம் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான போராட்டத்தை சென்னை, கோவை, நெல்லை, மதுரை மற்றும் தஞ்சையில் நடத்தவிருக்கிறது. அதன் தொடர்பாக பிற இஸ்லாமிய இயக்கங்களின் ஆலோசனைகளை பெறுவதற்காக இந்த கலந்துரையாடலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  ஏற்பாடு செய்திருந்தது.

இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட தலைவர்கள்:

K. K. S. M. தெஹ்லான் பாக்கவி –  மாநில தலைவர், SDPI

உமர் பாருக் – மாநில தலைவர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

A. K. முஹம்மது ஹனிபா – தொண்டு இயக்கம்

P. S. ஹமீது –  மாநில செயலாளர், த. மு. மு. க

முஹம்மது முனீர் – மாநில துணைத்தலைவர், INTJ

சிக்கந்தர்- வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா

முஹம்மது ஷாபி – மாநில தலைவர், CFI

செயத் இப்ராஹிம் உஸ்மானி – மாநில தலைவர், ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில்

அஜ்மல் கான் – மாவட்ட துணைத்தலைவர், மனித நேய மக்கள் கட்சி

முஹம்மது காசிம் – மாநில செயலாளர், ஜமாத்துல் உலமா சபை

வழக்கறிஞர். அப்துல் காதர் – மாநில மக்கள் தொடர்பு அலுவலர், NCHRO

முஹம்மது உசேன் – தென் சென்னை மாவட்ட தலைவர், SDPI

முஹம்மது பிலால் – காஞ்சிபுரம் மாவட்ட தலைவர், SDPI

புஹாரி – திருவள்ளூர் மாவட்ட தலைவர், SDPI

ஹாமித் பக்கீர் – தலைவர், ஐக்கிய சமாதான பேரவை


CM DV Sadananda Gowda, few ministers of Karnataka govt attended the event in Sangha Ganavesh

பெங்களூர்:கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில் ஆதரவு தேடி முதல்வர் டி.வி.சதானந்தாகவுடா ஆர்.எஸ்.எஸ் முகாமில் சீருடை அணிந்து கலந்துக்கொண்டார்.

வடக்கு கர்நாடகாவில் ஹுப்ளியில் மூன்று தினங்களாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘ஹிந்து சக்தி சங்கம’த்தில் முதல்வர் சதானந்தாகவுடா மீண்டும் சங்கின் வாலண்டியராக கலந்து கொண்டார்.

13 மாவட்டங்களில் சங்க் தொண்டர்களுடன் ஆர்.எஸ்.எஸ்ஸின் சீருடையான காக்கி ட்ரவுசரும், வெள்ளை சட்டையும், நீலநிற தொப்பியும் அணிந்து சதானந்தகவுடா காணப்பட்டார். ஆர்.எஸ்.எஸ் தேசிய பொதுச்செயலாளர் சுரேஷ் பய்யாஜி ஜோஷி, மோகன் பாகவத் உள்ளிட்ட முக்கிய தலைவர்களும், பா.ஜ.கவின் தேசிய தலைவர்களும் பங்கேற்கும் முகாமில் கர்நாடகாவின் தலைமைப் பதவி குறித்த விவாதம் நடைபெறும் என கருதப்படுகிறது.

சங்கமத்தின் முதல் நாளில் கலந்துகொண்ட சதானந்தா கவுடா, தனது முதல்வர் பதவிக்காக ஆர்.எஸ்.எஸ் தலைவர்களின் ஆதரவை கோரியதாக தகவல். முதல்வர் பதவிக்காக எடியூரப்பா தீவிர முயற்சியில் ஈடுபட்டுவரும் வேளையில் கர்நாடகா பா.ஜ.க தலைவர்களை ஆர்.எஸ்.எஸ் தனது தலைமையகத்திற்கு அழைத்து எச்சரிக்கை விடுத்திருந்தது. கட்சியை உடைக்கும் வகையில் செயல்படக் கூடாது என்றும், பகிரங்க அறிக்கையை வெளியிடக் கூடாது என்றும் எடியூரப்பா உள்ளிட்ட தலைவர்களுக்கு ஆர்.எஸ்.எஸ் எச்சரிக்கை விடுத்துள்ளதாம்.


Popular Front of India had organized a discussion session about Muslim reservation on January 25,2012 at Chennai. Prominent Leaders of various Jamaths, organization were participated and expressed their opinions and presented their suggestions.
Almost all Muslim organization had already been struggled hard for Muslim reservation as much as they could.Though Muslim reservation remain as a day dream till now, At-least the announcement of the center to offer Muslim reservation ahead of Elections in UP and elsewhere is commendable and nothing wrong in welcoming their intention to offer reservation for under represented and Socially Educationally Backward Muslim community.
 

Dialogue on Muslim reservationDialogue on Muslim reservation held at chennai

 
In Tamilnadu 3.5 percentage of reservation is inadequate to alleviate Muslims backwardness So the AIADMK government as assured in their Election Manifesto should increase the percentage of reservation for adequate representation in all sectors to ensure social justice. To remind the government and to implement the same at earliest Popular Front of India will be organizing Grand processions rallies and protest demonstration at 5 districts namely Coimbatore, Chennai, Madurai, Tanjavore, Nellai on April 22. “Separate quota for Muslims at the Center and adequate reservation at the State” will be our key demand.Muslim leaders and social activists being consulted to bring a general consensus on what percentage of increase is required for the community in Tamilnadu and based on the decision we would unitedly urge the Tamilnadu state government to implement it at earliest.
Popular Front of India State President A.S.Ismail Presided over this program. General Secretary Mohamed Khalid welcomed the gathering. Vice Chairman Mohamed Ali Jinna in his Keynote address presented a Brief Summary on the Topic of Muslim Reservation. Finally with the vote of thanks from State secretary Sheik Mohamed Ansari program concluded.

Posted: ஜனவரி 23, 2012 in POPULAR FRONT


புதுடெல்லி:அடுத்த மாதம் துவங்கவிருக்கும் உத்தரபிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் சோஷியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் வேட்பாளர்களின் முதல் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிடுகிறது.

குர்ஷித் அலி ஜாமி(ஆர்யா நகர்), ஷக்கீல் அஹ்மத் முஹம்மதி(ஸிஸாமாவு), வழக்கறிஞர் ஹாரூன் அஹ்மத்(சைல்), ஷஃபாத் கான்(ஹமீர்பூர்), பல்வந்த்சிங் சார்வக்(ராம்பூர்மனிஹரன்), மவ்லானா மஸூத்(தேவ்பந்த்), மவ்லானா ஷாஹதப்(புடானா), வழக்கறிஞர் ராவு மிராஜுத்தீன (காத்தோளி), மவ்லானா அப்துல் காலிக்(டான்பூர்), ரஈஸ் அஹ்மத்(தக்கூர் துவாரா) ஆகிய வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த பல ஆண்டுகளாக நடந்துவரும் ஜனநாயக சீர்குலைவிற்கும், அரசியல் கட்சிகளின் ஊழலுக்கு எதிராகவும் மக்களை ஒன்றிணைக்கும் விதமாக பிரச்சாரம் செய்வோம் என எஸ்.டி.பி.ஐ தலைவர்கள் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தனர். செய்தியாளர்கள் சந்திப்பில் தேசிய பொதுச்செயலாளர் எ.ஸயீத், ஹாஃபிஸ் மன்சூர் அலிகான், மாநில தலைவர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன் அஹ்மது ஆகியோர் பங்கேற்றனர்.


Popular Front of India National General Assembly held at Malabar House in Malappuram District of Kerala on 21, 22 January 2011 discussed the prevailing socio- political scenario at the national level and in different states and chalked out plans to empower Muslims and other marginalised communities across the country.

The NGA expressed its anguish and concern at the failure of the Dalit and Backward Caste political parties to address the real issues that vex the Muslim minorities in the states they are either ruling or ruled in the past. These parties have come into prominence or power using caste based identity politics and pursuing Muslims. But unfortunately they have failed to reform the system. They have followed the same path of traditional political parties and tried to keep the Muslims disunited and neglected.  They also did not tolerate the emergence of real political power from within the Muslim community.  BSP in UP was no different in using the police or intelligence agencies to create fear and insecurity in the community by continuing police measures against Muslim activists and organizations. The NGA feels that only the newly emerged SDPI and likeminded parties can articulate the problems like poverty, illiteracy and unemployment among the Muslims and provide them freedom from hunger and fear. Hence the meeting called upon the voters of UP and other states,  not to act as  mere  vote banks of different parties, but to vote SDPI where the party has fielded candidates and support the candidate of the party which seems comparatively more favourable to Muslim issues in remaining constituencies.

In another resolution, the Assembly observed that the growing friendship between India and Israel is a very alarming sign for the future of the country. Israel, the number one terrorist state in the world, which openly exhibits and justifies and violence against Palestinians for the past six decades, is receiving red-carpet welcome in each front by the UPA Government. India has become the biggest customer of Israeli products whether it is defence, intelligence or agriculture. It is also a tragedy that the UPA government is continuously seeking Israel’s help for internal security in the name of war on terror. It is after establishing diplomatic ties with Israel that our country has witnessed a series of mysterious terror attacks. The recent decision to open Israel Consulate in Bangalore is another sign of growing impact of the Zionist state in our policy making. The NGA demands the UPA Government to scrap all ties with Israel and avoid all sorts of internal and international coordination with Israel.

 The recent Central Government decision to provide 4.5% reservation to religious minorities is a positive step, but it has many discrepancies and lapses that need immediate corrections. This decision which did not cover all Muslims in the community and even ignores the minimum sub-quota of 6% for OBC Muslims as recommended by Misra Commission is a mere political gimmick. The motive behind the  series of statements issued by few ministers and leaders of different parties for granting reservation for Muslims seems to be just to attract Muslim votes in UP and other states. The government as well as different political parties should understand that mere sweet promises won’t be enough to lure the Muslims as they are becoming politically more aware. The NGA demands the UPA government to convert the words into action and to grant reservation to Muslims as recommended by Justice Ranganath Misra Commission.

The Congress party itself seems to be divided on the issue of handing over the Batla House encounter case to the CBI.  The Batla house fake encounter case was a horrible instance where innocent Muslim youths were killed in cold blood by the Delhi Police. It was not just an encounter but also a serious attempt of stereotyping Muslims especially the students.   None of the political parties seem to be serious in providing justice to the victims and are only competing with each other in lip service. The NGA demanded the Central Government to take immediate steps for handing over the case to CBI and punish the culprits involved in this inhuman act.

The NGA called upon the authorities to prosecute people who launched the vicious smear campaign against the Muslims alleging that there was a project called Love Jihad in Kerala and Karnataka to lure girls of Christian and Hindu communities for converting them to Islam. It is now proved that the Love Jihad itself was the brain child of Hindutva groups to create suspicion and hatred among the communities and to drive away Muslim youths from campuses.  The meeting deplored the wide publicity given by certain newspaper and TV channels about the Love Jihad and call upon to withdraw the fake stories and apologize to their readers.

It is heartening to note that the police have been able to arrest RSS elements in Bijapur, Karnataka who raised Pakistani flag to start communal riots in the city. Popular Front has repeatedly pointed out in the past that such incidents are the handiwork of RSS elements.

The NGA also condemned the efforts of Kerala Police to hack into the email communications of Muslim activists, political leaders and religious scholars. We think that it is a part of racial profiling originally launched by the imperial powers to create enmity among different communities and to buttress racial and religious stereotypes. It is quite deplorable that this kind of illegal police intervention is taking place in a state which claims to have secular and pro-minority government.

In another resolution the NGA urged  the Central Government to make appropriate amendments to the Code of Criminal Procedure providing adequate and sufficient compensations to the individuals who were incarcerated for a long period without bail as remand prisoners and finally acquitted in frivolous cases.

The Annual Assembly was started with the introductory speech by the Chairman E. M. Abdul Rahiman.  He pointed out that the recently held Social Justice Conference which witnessed a very large flow of masses from northern states in the Ramlila Maidan of New Delhi convinced us that the neglected lots of people are in search of a new movement honesty responding to their burning issues.  He exhorted the delegates to take this opening as a challenge to reach out to the new lands and communities in our country.  He also reminded them that mass mobilization is possible only through timely and effective intervention in national and local issues and by always remaining in the forefront of agitation for their rights and justice.

General Secretary K. M. Shareef presents the annual report of the organisation.  The report showed that Popular Front has gained considerable expansion and growth, an improvement in the flow of member, associates and supporter during the past year in spite of the malicious propaganda carried out by communal fascist outfits and their agents in administration, police, intelligence and media. The report presentation was followed by  in-depth  discussions.  The members of Central Secreatrite and State Presidents   Karamana Ashraf Moulavi (Kerala),   Elyas Muhammed Thumbe (Karnataka),  A. S. Ismail (Tamil Nadu),  Muhammad Arif Ahmed (Andhra Pradesh),   Muhammad Kaleemulaa Siddiqui (Delhi), Muhammad Shafi (Rajasthan),   Muhammad Shahabuddin (West Bengal), Mufti Arshad Qasimi  (Manipur) led the discussions.

On the second day of  the Assembly, there was an open forum on the contemporary political situation in India.  National Executive Council member Anis Ahmed delivered a power point presentation on Social Networking.  A video Documentary of the Social Justice Conference in different languages was released on the occasion. Six resolutions were adopted after discussion.   The two days programme was concluded with the valedictory address by the Vice Chairman Muhammad Ali Jinnah.


Arab-league

சமீபத்திய அறபுப் புரட்சிகளின்போது மிகவும் பிரபலம் பெற்ற அறப் லீக் கடந்த 50 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டது. ஒருபுறம் அதன் சாதனைகள் குறித்து சிலாகிக்கப்படுகின்றபோது இன்னொரு புறம் அதற்கெதிரான தீவிர விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அரை நூற்றாண்டில் அறப் லீக் அடைந்த சாதனைகள் மற்றும் பின்னடைவுகள் குறித்து ஒரு நேர்மையான மதிப்பீடு அவசியமாகியுள்ள சூழ்நிலையில், இப்பத்தி அது குறித்து விளக்க முயல்கின்றது.

1945 மார்ச் 25 இல் ஆறு நாடுகளுடன் தொடங்கிய இக்கூட்டமைப்பில் தற்போது 22 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. அத்தோடு நான்கு பார்வையாளர் நாடுகளும் உள்ளன. அங்கத்துவ நாடுகளிடையே கூட்டுறவையும் ஒத்துழைப்பையும் மேம்படுத்துவதன் மூலம் பலதரப்புப் பொருளாதார அரசியல் நலன்களை எட்டுவதே இவ்வமைப்பின் பிரதான குறிக்கோளாகும். இதற்கென கிளை நிறுவனங்களும் செயல்படுகின்றன.

அறபு லீக் கல்வி, கலாசார, விஞ்ஞான அமையம் (Alesco), அறபுப் பொருளாதார ஒன்றியம் (CAEU) என்பன இக்குறிக்கோளை அடைவதற்கென செயல்பட்டு வருகின்றன. தொடக்கத்தில் எகிப்து,ஈரான், ஜோர்தான், சவூதி அறேபியா, சிரியா, யெமன் ஆகிய நாடுகள் இவ்வமைப்பில் அங்கத்துவம் பெற்றிருந்தன.

தற்போது ஆசியாவிலும் ஆபிரிக்காவிலுமுள்ள அறபைத் தாய் மொழியாகக் கொண்ட அனைத்து முஸ்லிம் நாடுகளையும் இவ்வமைப்பு உள்வாங்கியிருக்கின்றது. 20 ஆம் நூற்றாண்டின் இறுதி அரைப்பகுதியிலேயே அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

அறபு லீக் பல்வேறு நோக்கங்களோடு செயல்பட்டு வருகின்றது. அரசியல், பொருளாதாரம்,பாதுகாப்பு, கலாச்சாரம் போன்ற நான்கு பிரதான தளங்களில் செயல்பட்டு வரும் அறப் லீக்,பின்வரும் வேலைத் திட்டங்களிலும் கவனம் குவித்து வருகின்றது.

1. அறபு நாடுகளிலுள்ள பாடசாலைகளின் கலைத் திட்டத்தை மேம்படுத்தல்.

2. சிறுவர் நலன்களைப் பாதுகாத்தல்.

3. இளைஞர்கள் மற்றும் விளையாட்டுத் துறையை முன்னேற்றல்.

4. அறபுக் கலாச்சாரப் பாரம்பரியத்தை வளர்த்தல்.

5. அறபு இலக்கியத்தை மேம்படுத்தல்.

6. ஆய்வுகளை முன்னெடுத்தல்.

7. தொழில்நுட்ப வசதிகளைப் பகிர்தல்.

அறபு லீக் சமகால இஸ்லாமிய உலகிலுள்ள மிக முக்கியமான சர்வதேச நிறுவமாகத் திகழ்கின்றது. ஏனெனில், அறபு லீக்கில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பொருளாதார வளமும் மக்கள் தொகையும் மிகவும் முக்கியமானவை. 13,000,000 சதுர கி.மீ. பரப்பை இதில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகள் கொண்டுள்ளன. புவியியல் ரீதியில் ஆசியாவை மட்டுமன்றி,ஆபிரிக்காவையும் உள்ளடக்கியுள்ளது. பாலைவனங்கள் உள்ளிட்டு, மிகப் பரந்தளவிலான பசுமையான நிலங்களை, உலகின் மிக நீளமான நதிகளை, உயர் மலைத் தொடர்களை, அடர்ந்த காடுகளை உள்ளடக்கிய பரந்துபட்ட புவியியல் அதன் மிகப் பெரும் பலமாக உள்ளது. நைல் நதி,உயர் அட்லஸ் மலைத் தொடர் என்பவை அறப் லீக் அங்கத்துவ நாடுகளை ஊடறுக்கின்றன.

அறப் லீக்கின் கடந்த கால கல்வி, கலாச்சார வேலைத் திட்டங்கள் பாரியளவு வளர்ச்சி கண்டுள்ளன. மிகப் பெரும் எண்ணெய் வளம் கொண்ட நாடுகளும் இதில் உள்ளடங்கியிருப்பதால்,எண்ணெய் வளத்தின் பலாபலன்களை அறபு நாடுகளிடையே பகிர்வதற்கான வாய்ப்புள்ளது. மற்றும் சர்வதேச சந்தையில் இடம்பிடித்துள்ள Orascom, Etisalat போன்ற தொலைத்தொடர்பு கைத்தொழில் நிறுவனங்கள் பாரிய வளர்ச்சி கண்டு வருகின்றன.

இது தவிர, அறபு நாடுகளிலுள்ள இயற்கை எரிவாயுவை தங்களுக்குள் பகிர்ந்துகொள்வதற்கான அறபு எரிவாயுக் குழாய்த் திட்டம் பூரணப்படுத்தப்பட்டுள்ளது. எகிப்து, ஈராக்கில் உள்ள எரிவாயு ஜோர்தான், சிரியா, லெபனான், துருக்கி என்பவற்றுக்கு குழாய்த் திட்டம் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 2008 முதல் அமுலாகி வரும் Gafta எனப்படும் சுங்கவரி நீக்கத் திட்டம் அறபு நாடுகளுக்கு பயனளித்து வருகின்றது. இதன் மூலம் அறபு நாட்டு உற்பத்திகளில் 95வீதமானவற்றுக்கான சுங்க வரி நீக்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறம் 340,000,000 மக்கள் தொகையைக் கொண்டுள்ள அறப் லீக்கின் அங்கத்துவ நாடுகளுக்கிடையில் நிலவி வரும் பாரிய பொருளாதார ஏற்றத்தாழ்வை நீக்குவதில் அறப் லீக் முழு வெற்றி காணவில்லை என்ற விமர்சனம் கறாராக முன்வைக்கப்படுகின்றது.

அறபு நாடுகளின் உணவுத் தொட்டி என அழைக்கப்படும் சூடான், மிகவும் வளமான நிலத்தைக் கொண்டுள்ளது. அங்கு விவசாயத்தை தொழில்நுட்ப மயமாக்குவதன் மூலம் முழு அறபு முஸ்லிம் நாடுகளின் உணவுத் தேவைகளையும் நிறைவு செய்யலாம். ஆனால் சூடானில் அறபு லீக்கில் அங்கத்துவம் பெறும் குவைத், சவூதி அறேபியா போன்ற நாடுகள் எதிர்பார்த்தளவு முதலீடு செய்யவில்லை.

கொமொரோஸ், ஜிபூத்தி, மொரிட்டானியா, சோமாலியா போன்ற ஆபிரிக்க அறபு முஸ்லிம் நாடுகளும் அறப் லீக்கில் அங்கத்துவம் வகித்து வருகின்றன. சவூதி அறேபியா, குவைத் என்பவற்றின் தலாவீத வருமானம் 35,000 அமெரிக்க டொலரை தாண்டியுள்ள நிலையில்,சோமாலியாவில் 250 டொலரையேனும் பெறாத மக்கள் பட்டினியோடு போராடும் நிலை நீடிக்கின்றது.

அறப் லீக்கின் பொருளாதாரத் திட்டம் சரியான திசை வழியில் செல்கின்றதா எனும் கேள்வியை இது எழுப்பியுள்ளது. பொருளாதாரத் திட்டங்களை விட அறப் லீக்கின் அரசியல் செயல்பாடுகள் வினைத் திறனற்றவை என்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. 1945 இல் அறப் லீக் ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இது வரை 32 உச்சிமாநாடுகள் நடத்தப்பட்டுள்ளன. அவற்றின் தீர்மானங்கள் எந்தளவுக்கு நடைமுறைக்குக் கொண்டு வரப்பட்டன என்பது பெருத்த கேள்வியாகும்.

22 அங்கத்துவ நாடுகளில் பலஸ்தீனும் இணைத்துக் கொள்ளப்பட்டிருப்பது ஒரு முக்கிய அம்சமாகும். கொள்கை அளவில் பலஸ்தீனை ஓர் இறைமையுள்ள தேசமாக அறப் லீக் அங்கீகரித்துள்ளபோதும் பலஸ்தீன் நெருக்கடிக்கான நிரந்தரத் தீர்வைக் காண்பதில் அறப் லீக் தோல்வி கண்டுள்ளது. இவ்வமைப்பிலுள்ள சில நாடுகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளே இத்தோல்விக்கான மூல காரணம் எனலாம்.

2002 றியாதில் கூடிய அறப் லீக்கின் உச்சி மாநாட்டில் சவூதி அறேபியா முன்வைத்த தீர்வுத் திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இஸ்ரேலுடனான அறபு நாடுகளின் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டு வர வேண்டும் எனவும், அதற்குப் பகரமாக ஆக்கிரமிக்கப்பட்ட பிராந்தியங்களிலிருந்து இஸ்ரேல் பின்வாங்க வேண்டும் எனவும் கோரப்பட்டது. பலஸ்தீன் சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட வேண்டும் எனவும் அதன் தலைநகராக கிழக்கு ஜெரூசலம் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

2007 இல் மீண்டும் சவூதியின் திட்டம் அறப் லீக்கில் அங்கீகரிக்கப்பட்டது. எனினும்,இஸ்ரேலுடனான உறவுகளை அறபு நாடுகள் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்ததே ஒழிய, சவூதி அறேபியா முன்வைத்த எந்தவொரு திட்டத்தையும் இஸ்ரேல் ஏற்றுக்கொள்ளவில்லை.

2010 ஜூன் மாதம் முன்னாள் செயலாளர் அம்ர் மூஸா காஸாவுக்கு மேற்கொண்ட விஜயத்தின்போது இஸ்ரேல் மீதான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு பொருளாதாரத்தடை நீக்கிக் கொள்ளப்பட வேண்டும் என கோரியிருந்தார். ஆனால், எதுவும் நடைபெறவில்லை.

அறப் லீக்கிடம் உள்ள எண்ணெய் வளம் மற்றும் இயற்கை எரிவாயு என்பவற்றை அவ்வமைப்பு இஸ்ரேலுக்கு எதிரான அரசியல் ஆயுதமாகக் கையாள முன்வருமாயின், பலஸ்தீனர்களுக்கு நீதியான ஒரு தீர்வைப் பெற்றுக்கொடுக்கலாம். அறப் லீக் மீது முன்வைக்கப்படும் விமர்சனங்களைத் தவிர்க்கலாம்.

ஆனால், அறப் லீக்கிலுள்ள சில நாடுகள் மறைமுகமாக இஸ்ரேலின் இருப்பை ஆதரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளமையால், பலஸ்தீன் விவகாரம் குறித்து அறப் லீக் எதிர்கொள்ளும் விமர்சனங்களை ஒருபோதும் துடைத்தழிக்க முடியாத துரதிஷ்டம் தொடர்கின்றது.

சிரிய விவகாரத்தில் சில முற்போக்கான தீர்மானங்களை அறப் லீக் எடுத்துள்ளபோதும் உள்ளார்ந்த அரசியல் நெருக்கடிகளைக் கையாள்வது ஒரு பெரும் பலப்பரீட்சையை உருவாக்கியுள்ளது. அறப் லீக் அதில் வெற்றி பெற வேண்டியுள்ளது.


syria pro

லிபியாவிலும் தூனிஸியாவிலும் எகிப்திலும் அறபு வசந்தம் வெற்றி பெற்றுள்ள நிலையில் சிரிய மக்கள் அந்த வெற்றிக்காகக் காத்திருக்கின்றனர்.

கடந்த 10 மாதங்களாக சிரியாவில் பொதுமக்கள் மீதான அரசாங்கத்தின் வன்கொடுமைகள் கட்டவிழ்க்கப்படும் நிலையிலும், மக்கள் தமது நிலைப்பாட்டிலிருந்து தளரவில்லை. அரச பயங்கரவாதத்தினால் அச்சத்தில் உறைந்துபோயிருக்கும் மக்களிடையே இன்னும் வெற்றிக்கான ஏக்கமும் பெருமூச்சும் நின்றுவிடவில்லை.

சிரியாவில் வன்முறைகளை நிறுத்தி படுகொலைகளை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் அறப் லீக் மேற்கொண்ட கண்காணிப்பாளர் நடவடிக்கை முழுத் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அறப் லீக் அதிகாரிகள் பொதுமக்கள் மீதான படுகொலைகளை நிறுத்துவதற்குப் பதிலாக இறந்துகொண்டிருக்கின்றவர்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக் கொண்டிருப்பதாக சிரிய எதிர்க்கட்சிகளின் ஒன்றியமான சிரிய தேசிய சபை (Syrian National Council) வன்மையாகக் கண்டித்துள்ளது.

அஸதின் அரசாங்கத்தை நோக்கி அறப் லீக் முன்வைத்த எந்தக் கோரிக்கையும் கணக்கில் எடுக்கப்படவில்லை. பிரதான நகரங்களிலிருந்து இராணுவத் தளபாடங்களைப் பின்வாங்குதல்,தடுப்புக்காவலில் வைக்கப்பட்டோரை விடுதலை செய்தல், ஊடகவியலாளர்கள் மீதான நெருக்குவாரங்களை நீக்குதல், துப்பாக்கிப் பிரயோகங்களை நிறுத்தல் ஆகிய எந்தவொரு கோரிக்கையும் கவனத்திற் கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் அறப் லீக்கின் கண்காணிப்புக் குழு வெறும் கண்துடைப்பு என தேசிய சபை விமர்சித்துள்ளது. தனது சொந்த மக்களை கொடூரமாகக் கொலை செய்யும்போது, பல்லாயிரக் கணக்கான உயிர்களை இயந்திரத் துப்பாக்கிகளால் பலிகொள்ளும்போது எந்தவொரு மனச்சாட்சியுள்ள மனிதனும் அலட்சியமாக இருக்க முடியாது; இருக்கவும் கூடாது.

அறப் லீக்கின் அங்கத்துவ நாடுகள் மற்றும் ஏனைய மேற்கத்திய நாடுகள் அனைத்தும் சிரிய விவகாரத்தில் காத்துவரும் மௌனம் மிகவும் ஆபத்தானது. சிரியாவின் இன்றைய கொதி நிலையில் மீண்டும் ஒருமுறை தொலைக்காட்சியில் தோன்றி, அஸத் ஆற்றியுள்ள உரை மக்களின் கோபத்தை கிளறியிருக்கின்றது. இரண்டு மணிநேர உரை அஸதின் முதிர்ச்சியற்ற அரசியலையும் வெகுளித்தனத்தையும் வெளிக்காட்டுகின்றது.

ஆளும் அலவிய்யா வர்க்கத்தின் உள்மனவோட்டத்தை ஒப்பு விக்கின்ற அஸதின் உரை பல்வேறு கோணங்களிலிருந்து பார்க்கப்படக் கூடியது. “நாட்டில் சீர்திருத்தம் கொண்டு வருவோம். ஆனால், பயங்கரவாதத்தை சட்ட பூர்வமான வழிமுறைகள் மூலம் அடக்குவோம்” என அஸத் குறிப்பிட்டிருப்பது மிகுந்த வேடிக்கையானது.

சீர்திருத்தம் கொண்டு வருவோம் என்று கடந்த 60 ஆண்டுகளாக கதை அளக்கும் பாத் கட்சியினர், நடைமுறையில் அதற்கான அறிகுறி எதனையும் வெளிக்காட்டியதில்லை. சிரியாவில் அரசியல் சீர்திருத்தம் என்பது அரசாங்க வர்த்தமானி அறிவித்தல் போன்று இலகுவில் செய்ய முடியுமான ஒன்றல்ல. சிரியாவில் தேவையானது கட்டமைப்பு மாற்றம். அடிப்படைகளையே பெயர்த்து, ஒரு புதிய அரசியலமைப்பின் கீழ் நாட்டைக் கொண்டு வருவதே மக்களின் எதிர்பார்ப்பு.

பாத் கட்சியே எப்போதும் ஆட்சிக்குத் தகுதியானது எனவும், 50 வீத ஆசனங்கள் ஏற்கனவே ஆளும் பாத் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு விட்டது எனவும் குறிப்பிடும் ஓர் அரசியலமைப்பின் கீழ் ஆறு தசாப்தங்கள் அதிகாரத்தில் நீடித்திருக்கும் ஷீஆ, அலவிய்யா வர்க்கம் சிரியாவில் அரசியல் சீர்திருத்தம் குறித்துப் பேசுவது மிகுந்த எதிரிடையானது. அதுவும் மொத்த மக்கள் தொகையில் ஐந்து வீதத்தையும் தாண்டாத ஷீஆக்கள்; ஸுன்னிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டில் என்ன சீர்திருத்தம் கொண்டுவரப் போகின்றனர்? இதற்கு முன்பும் இதுபோன்ற வாய்வீச்சுகள் இவர்களிடமிருந்து வெளிவந்திருக்கின்றன. அவை காலப்போக்கில் காற்றோடு காற்றாய் கரைந்து போயிருக்கிறன.

அலவிய்யா வர்க்கத்தின் மிகுந்த கபடத்தனத்தை அஸத் மீண்டும் ஒருமுறை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால், இன்னொரு முறை இதை நம்பி ஏமாறும் நிலையில் சிரிய மக்கள் இல்லை.

சிரியாவின் தற்போதைய நிலைகளை நுணுக்கமாக நோக்கும்போது லிபியாவின் கடாபியை விட படுமோசமான சர்வாதிகாரியாக அஸத் தன்னை வெளிப்படுத்தியுள்ளதை விளங்கிக் கொள்ளலாம். 10 மாதங்களைக் கடந்தும் பெரியளவிலான மாற்றங்கள் அரச தரப்பில் ஏற்படாமைக்கும் சிரிய வசந்தம் தனது இலக்கை அடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளமைக்கும் காரணங்கள் உள்ளன.

கொமைனியின் அநீதிக்கு எதிரான கோஷங்களையும் நீதிக் கதைகளையும் பேசிக் கொண்டிருக்கும் தெஹ்ரானிலுள்ள ஷீஆ மதப் போதகர்களும் நஜாதியும் டமஸ்கஸுடன் கொண்டுள்ள ரகசிய ஒப்பந்தங்களும் இராணுவ ஆதரவும், சிரியாவில் அலவி ஷீஆக்களின் அதிகாரத்தை நீடிப்பதற்கு உதவி வருகின்றன. இன்னொரு புறம் லெபனானில் நிலைகொண்டுள்ள ஈரானின் இராணுவப் பலப்பரீட்சைக் கருவியான ஹிஸ்புல்லாஹ், அஸதுக்கு இராணுவ ரீதியில் ஆதரவு வழங்கி வருகின்றது. இவ்விரு சக்திகளினதும் ஆதரவுதான் அஸதின் திமிருக்குக் காரணமாக உள்ளது.

தெஹ்ரானில் நஜாதியின் அரசாங்கம் நடத்திய எழுச்சி மாநாட்டில், பஹ்ரைனில் அரச பயங்கர வாதத்தினால் மக்கள் பாதிக்கப்படுவதாகக் குரலெழுப்பப்பட்டது. ஆனால், அஸதின் அரசாங்கம் சிரியாவில் பொதுமக்கள் மீது நடத்திவரும் கீழ்த்தரமானவன் முறைகள், படுகொலைகள் குறித்து தெஹ்ரான் நன்கு அறிந்து வைத்துள்ள நிலையிலும் டமஸ்கஸை ஆதரித்து வருவது ஈரானின் தார்மீக நிலைப்பாடு குறித்த ஐயத்தை எழுப்புகிறது.

அஸதின் இரண்டு மணித்தியால உரையில், அவர் அறப் லீக்கை சாடியுள்ளார். “அறப் லீக்கில் இடம்பெறும் நாடுகளின் அரசாங்கங்கள் மன்னராட்சியை பிரதிபலிக்கும் நிலையில், சிரியாவுக்கு அவர்கள் ஜனநாயகத்தைப் போதிப்பதற்கு முயல்கிறார்கள். புகைப் பழக்கமுள்ள வைத்தியர்,நோயாளிக்கு புகைப்பழக்கத்தைக் கைவிடுமாறு கோருவது போன்றதே இது” என்கிறார் அஸத்.

அதன் மூலம் சிரியாவிலும் ஜனநாயகம் இல்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளார். சிரியாவில் இன்று முன்னுரிமைக்குரிய விவகாரம் அதன் பாதுகாப்பே எனக் கூறியுள்ள அஸத், பொது மக்களைக் கொல்வதற்கு இராணுவத்திற்குத் தாம் கட்டளையிடவில்லை எனவும் தெரிவிக்கின்றார். சிரியாவின் பாதுகாப்பு என்று அவர் குறிப்பிடுவது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் அற்ற நிலையைத்தான் என்பதை மிகச் சாதாரணமான ஒருவராலும் விளங்கிக் கொள்ளலாம்.

மீண்டும் மீண்டும் அஸத், அவரது அதிகார பீடத்தை அசைக்கின்ற எல்லா சக்திகளையும் பயங்கரவாதிகளாகவும் வெளிச்சக்திகளாகவும் காட்ட முயல்வது ஆளும் அலவி வர்க்கத்தின் மோசமான உள்நோக்கத்தையே புலப்படுத்துகின்றது.

இந்நிலையில் வாயளவில் அவர் பேசிவரும் அரசியல் சீர்திருத்தம் குறித்து நம்பிக்கை கொள்வதற்கு சிரிய மக்கள் தயாரில்லை என்பதையே களநிலவரம் உறுதி செய்கின்றது. அஸதின் அரசாங்கத்துடனான அனைத்துப் பேச்சுவார்த்தைகளும் தோல்வி கண்டுள்ள நிலையில்,குறைந்தபட்சம் பொதுமக்கள் மீதான கொடூரங்களை நிறுத்தாத நிலையில் அஸதுக்கெதிரான மக்கள் போராட்டம் ஓயப் போவதில்லை.

அந்நாட்டின் அனைத்து எதிர்க் கட்சிகளும் உருவாக்கியுள்ள சிரிய தேசிய சபை, அறப் லீக்கின் முயற்சிகள் தோல்வியடைந்துவிட்டன. சிரியாவின் உள்விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்புச் சபை நேரடியாகக் கையாள்வதற்கான நிலை உருவாகிவிட்டது என்று தெரிவித்துள்ளது.

இதேவேளை, சிரிய நகரங்களில் அரசாங்கத்திற்கு எதிராகத் திரளும் மக்களின் எண்ணிக்கை அலைபோல் அதிகரித்து வருகின்றது. லெபனான் ஹிஸ்புல்லாஹ்வையும் தெஹ்ரான் அரசாங்கத்தையும் நம்பியிருக்கும் அஸத் வெகுவிரைவில் தூக்கி வீசப்படுவதற்கான எல்லா அறிகுறிகளும் தெளிவாகத் தென்படுகின்றன.

லிபியாவின் முன்னாள் இரும்புச் சர்வாதிகாரி கடாபியே அறபு முஸ்லிம் உலகின் அசைக்க முடியாத தலைவர் என்று கருதப்பட்டவர். அவர், லிபியர்களுக்கு எதிராக இயந்திரத் துப்பாக்கிகளைத் தூக்கியபோது லிபியப் புரட்சி தோற்றுவிடும் என்றே இஸ்லாமிய உலகம் எண்ணியது. ஆனால், கடாபியின் கதையே முடிந்து விட்டது. அஸதும் இந்த ஆபத்தான முடிவை எதிர்கொள்ளும் நாள் நெருங்கி விட்டதை அவரது உரையும் வாய்ச்சவாடல்களும் உணர்த்தி நிற்கின்றன.

வரலாறு எப்போதும் அதிகாரத்திற்கு ஆதரவாக நகர்வதில்லை. இந்த உண்மை சிரியாவிலும் நிச்சயம் பலிக்கும்.