பெங்களூரில் இஸ்ரேல் தூதரகம்

Posted: ஜனவரி 11, 2012 in NEWS

imagesCA4075CF

ஜெருசலம்:மத்தியக் கிழக்கில் பயங்கரவாதத்தை விதைத்து ஃபலஸ்தீன் மக்களின் நிலங்களை அபகரித்து மண்ணின் மைந்தர்களை அகதிகளாக்கி வரும் இஸ்ரேலுக்கு இந்தியாவின் சைபர் நகரமான பெங்களூரில் தூதரகத்தை திறக்க தாராள மனசுடன் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இஸ்ரேலுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும், இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் அவிக்தர் லிபர்மனும் நடத்திய பேச்சுவார்த்தையில் இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.

புதுடெல்லி மற்றும் மும்பையில் தற்பொழுது இஸ்ரேலுக்கு தூதரகங்கள் உள்ளன.

பெங்களூரில் தூதரகம் திறக்க அனுமதி வழங்கிய எஸ்.எம்.கிருஷ்ணா உள்ளிட்ட இந்திய பிரதிநிதிக் குழுவிற்கு லிபர்மன் நன்றியை தெரிவித்தார். இத்தீர்மானம் இரு நாடுகளிடையே வர்த்தக உறவை மேம்படுத்த உதவும் என்றும், இந்தியாவும், இஸ்ரேலும் தூதரக உறவை துவக்கி 20 ஆண்டுகளை கழிந்த சூழலில் இச்செய்தி மகிழ்ச்சியை அளிப்பதாக லிபர்மன் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் பெங்களூரில் பல்வேறு ஹைடெக் துறை பிரதிநிதிகள் தூதரகத்தை திறப்பதற்கான தீர்மானத்தை வரவேற்றனர்.

இதற்கிடையே, ஐக்கிய நாடுகள் சபை பாதுகாப்பு கவுன்சில் நிரந்தர உறுப்பினருக்கான இந்தியாவின் முயற்சிக்கு ஆதரவு அளிப்போம் என இஸ்ரேல் அதிபர் ஷிமோன் பெரஸ், கிருஷ்ணாவிடம் தெரிவித்தார்.

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராவது தங்களின் விருப்பமும் ஆகும் என பெரஸ் கூறினார்.

சர்வதேச பயங்கரவாதத்தை எதிர்கொள்ள இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து செயல்பட தீர்மானித்துள்ளதாக எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் நடந்த சந்திப்பிற்கு பிறகு இதனை கிருஷ்ணா அறிவித்தார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s