இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி எகிப்திய தேர்தலில் அமோக வெற்றி

Posted: ஜனவரி 19, 2012 in MUSLIM WORLD

Muslim brotherhood

எகிப்தின் பாராளுமன்றத் தேர்தல் ஏறத்தாழ ஒன்றரை மாத காலமாக இடம்பெற்று, ஒருவழியாக இப்போது அதன் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. கடைசி நேரத்தில் கூட மறுவாக்குப் பதிவு இடம்பெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டன. மூன்றாம் கட்ட வாக்குப்பதிவின் பின்னர், மேன்முறையீடு காரணமாகவே இந்த புதிய இழுபறி ஏற்பட்டது.

சிக்கலான தேர்தல் முறை காரணமாக, இறுதி முடிவுகளை அறிவிப்பதில் அனாவசியமான காலதாமதம் ஏற்பட்டுள்ளது. எனினும், பாராளுமன்றத்தின் முதல் அமர்வு இம்மாதம் 23 ஆம் திகதி இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த அமர்வு மார்ச் மாதம் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இம்மாதம் 25 ஆம் திகதி எகிப்திய மக்கள் புரட்சி ஒரு வருட நிறைவை எய்துகிறது. இதற்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடத்த வேண்டும் என சில ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரி வந்தனர். எனினும், வரும் ஜூன் மாதமே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறவுள்ளது. கடந்த வருடம் இடம்பெற்ற மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பின் பிரகாரம் ஷூறா சபைத் தேர்தலின் பின்னரே ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

எகிப்திய பாராளுமன்றத்தின் செனட் சபையை ஒத்த மேல் சபையான ஷூறா சபைத் தேர்தல் அடுத்து இடம்பெறவுள்ளது. அது நிறைவுபெற்ற பின்னரே ஜனாதிபதித் தேர்தல் இடம்பெறும். ஷூறா சபைக்கான தேர்தலை குறைந்த கால இடை வெளியில் நடத்துவதற்கு, ஆளும் இராணுவ உயர்சபை இணக்கம் தெரிவித்துள்ளது.

Muslim brotherhood3இப்போது நடந்து முடிந்துள்ள பாராளுமன்றத் தேர்தலில், இஹ்வான்களது அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றியீட்டியுள்ளது. இதுவரை 222ஆசனங்களை தமது கட்சி பெற்றுள்ளதாகவும்,இன்னும் 18 ஆசனங்களுக்கான முடிவுகளுக்காக காத்திருப்பதாகவும் கலாநிதி முஹம்மத் ஸஅத் அலைவா தெரிவித்துள்ளார். இவர் சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் தேர்தல் மையத்தின் தலைவராக உள்ளார்.

498 ஆசனங்களில் தாம் 46% மான ஆசனங்களை வென்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி 11 கட்சிகள் அடங்கிய ஜனநாயகக் கூட்டணியில் (Democratic Alliance – DA) அங்கம் வகிக்கிறது.

எகிப்திய பாராளுமன்றத்தில் மொத்தமாக 508 ஆசனங்கள் உள்ளன. இதில் 498 ஆசனங்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டன. மிகுதியாக உள்ள 10 ஆசனங்களை ஜனாதிபதியே நியமிக்க வேண்டும். ஜனாதிபதி இல்லாத சூழ் நிலையில், அந்த அதிகாரத்தை தற்போது கொண்டுள்ள ஆளும் இராணுவ உயர் சபையே இந்த நியமனங்களை மேற்கொள்ளவுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் ஸலபிக்களின் அந்நூர் கட்சி அண்ணளவாக 25% மான ஆசனங்களைப் பெற்றுள்ளது. இது மூன்று கட்சிகளின் கூட்டமைப்பாகும். எகிப்தின் பழம்பெரும் அரசியல் கட்சியான தாராளவாதப் போக்குள்ள வப்த் கட்சி 9% மான ஆசனங்களைப் பெற்று மூன்றாவது நிலையில் உள்ளது. இஹ்வான்களை கடுமையாக எதிர்த்த மதச்சார்பற்ற எகிப்திய கூட்டமைப்பு நான்காம் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

Muslim brotherhood2

சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி, அந்நூர் கட்சி,ஜமாஆ இஸ்லாமியா இயக்கத்தின் கட்டியெழுப்பல் மற்றும் சீர்திருத்தக் கட்சி, இஹ்வான்களிலிருந்து1990 களின் மத்தியில் பிரிந்து சென்றோர் உருவாக்கிய வஸத் கட்சி ஆகியன இஸ்லாமியப் போக்கைப் பிரதிபலிக்கும் கட்சிகளாகும்.

இவை அனைத்தும் பெற்றுள்ள ஆசனங்களை தொகுத்து நோக்கினால் 75 வீதமான ஆசனங்களை இஸ்லாமியவாதிகளே வென்றுள்ளனர். இது மூன்றில் இரண்டு பங்கை விடவும் அதிகமான தொகையாகும். இஸ்லாமியவாதிகளின் இந்த அமோக வெற்றி, அந்நாட்டின் மதச் சார்பற்ற சக்திகளுக்கு பெரும் ஏமாற்றமாக அமைந்துள்ளது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s