எகிப்திய ஜனாதிபதித் தேர்தலிலிருந்து வாபஸ் பெறுகிறார் அல் பறாதி

Posted: ஜனவரி 19, 2012 in MUSLIM WORLD

ElBaradei

முன்னாள் சர்வதேச அணுசக்தி நிறுவனத்தின் தலைவரான முஹம்மத் அல் பறாதி, எகிப்தின் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார்.

‘‘உண்மையான ஜனநாயக முறையில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்ற நிலை காணப்படவில்லை. ஆதலால் அதில் போட்டியிட எனது மனச்சாட்சி இடமளிக்கவில்லை‘‘ என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது அறிக்கை நேரடியாக எகிப்தின் ஆளும் இராணுவ உயர் சபையை குற்றம் சாட்டியுள்ளது. இராணுவத்தினர் எகிப்தின் நிலைமாறும் காலகட்டத்தை உரியமுறையில் கையாளத் தவறிவிட்டனர் என்பதே அவரது பிரதான குற்றச்சாட்டாக இருந்தது.

எனினும், இம்மாதம் 25 ஆம் திகதி இடம்பெறவுள்ள புரட்சியின் ஒரு வருட நிறைவு நிகழ்வில், தாம் உற்சாகமாக கலந்து கொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எகிப்தில் நடந்து முடிந்துள்ள பாரளுமன்றத் தேர்தலில், அல் பறாதியை ஆதரித்த மதச்சார்பற்ற சக்திகள் மிகக் குறைந்தளவு வாக்குகளையே பெற்றுள்ளனர். ஆனால், இஸ்லாமியவாதிகள் 70 வீதமான வாக்குகளைப் பெற்றுள்ளமை இங்கு கவனிக்கத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s