மீடியாக்கள் பாரபட்சம் காட்டுகின்றன – இந்திய நீதியரசர் மார்க்கண்டேயே கட்ஜு

Posted: பிப்ரவரி 6, 2012 in NEWS

katju

தனது கருத்துக்களை தயவு தாட்சண்யம் பார்க்காமல் எந்த இடத்திலும் உடைத்துப் பேசுவதில் சற்றும் தயக்கம் காட்டாதவர் நீதியரசர் மார்க்கண்டேயே கட்ஜு. உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அவர் பதவியில் இருந்தபோதே, ‘அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ஒரு விதமான அழுகிய முட்டை நாற்றம் வீசுகின்றது’ என்று நீதிபதிகளின் ஊழல் குறித்து துணிந்து கருத்துச் சொல்லி, அனைவரையும் அதிர வைத்தவர்.

அக்கறையோடும் சமூகப் பிரக்ஞையோடும் செயல்படும் நீதிபதி என்று பெயர் எடுத்தவர் அவர். தற்போதைய பிரஸ் கவுன்ஸில் தலைவரான அவர், இந்திய பத்திரிகைகள், தொலைக்காட்சி செனல்கள் செயல்படும் விதம் குறித்துத் தெரிவித்து வரும் கருத்துக்கள் இந்திய மீடியா வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. CNN-IBN‡ தொலைக்காட்சியில் ‘கரன் தாப்பர்’ நடத்தி வரும் Devil’s Advocate என்ற புகழ்பெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கட்ஜு கூறிய கருத்துக்கள் சர்வதேச அளவில் பத்திரிகையாளர்களின் விமர்சனத்திற்கு இலக்காகியுள்ளது.

‘சமநிலை சமுதாயம்’ சஞ்சிகையில் வெளியாகியிருந்த அந்த நேர்காணலின் முக்கிய பகுதிகளை மீள்பார்வை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

அண்மையில் பத்திரிகை மட்டும் தொலைக்காட்சி ஆசிரியர்களை சந்தித்த நீங்கள்,மீடியாக்கள் பொறுப்பில்லாமல் செயல்படுகின்றன என்று கவலை தெரிவித்திருந்தீர்கள். மீடியாக்களின் செயற்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?

ரொம்பவே ஏமாற்றம் தருகிறது.

இந்தியாவின் வரலாற்றை மாற்றுவதில் நமது மீடியாவின் பங்களிப்பு குறித்து…

இந்திய மீடியாக்கள் பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதைப் பார்க்கிறேன். மூன்று விடயங்களை இதற்கு உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்சினைகளிலிருந்து மக்களின் கவனத்தை மீடியாக்கள் திசை திருப்புகின்றன. இங்கு எல்லாப் பிரச்சினைகளுமே பொருளாதார அடிப்படையில் எழுகின்றன.

நம் மக்களில் 80 சதவீதம் பேர் இன்னமும் வறுமை, வேலையின்மை, விலைவாசி மற்றும் ஆரோக்கியமின்மையால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அப்பிரச்சினைகளை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து தீர்வு காண்பதை விடுத்து, பிரச்சினைகளிலிருந்து மீடியாக்கள் மக்களை திசைதிருப்புகின்றன.

சினிமா நட்சத்திரங்கள், அழகிப் போட்டி, கிரிக்கெட் மாதிரியான பொழுதுபோக்கு விஷயங்களைப் பெரிது படுத்தி, இதுதான் இப்போதைக்கு நாட்டுக்கு அத்தியாவசியமானது என்பது போன்ற ஒரு மாயையை அவை உண்டுபண்ணிவிட்டன.

மக்களுக்கு போதை ஏற்றவே பெஷன்சினிமாகிரிக்கெட் போன்றவற்றை மீடியாக்கள் பயன்படுத்துகின்றன என்கிறீர்களா?

கிரிக்கெட் என்பது நம் மக்களுக்கு ஓபியம் போன்ற ஒரு போதைப்பொருள். “மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால், சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்யுங்கள்” என்று ரோமாபுரி பேரரசன் சொல்வானாம்.

அதுபோல, இந்தியாவில் மக்களுக்குத் தேவையானதை கொடுக்க முடியாததால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய செனல்களில் இரவு-பகல் வித்தியாசமில்லாமல் எந்நேரமும் ஏதாவது ஒரு கிரிக்கெட் மெட்ச் ஓடிக்கொண்டேதான் இருக்கிறது. அதுதான் நாட்டின் ஒரே பிரச்சினையா?

மீடியாக்கள் மக்கள் விரோதமாகச் செயல்படுவதைக் காட்டும் மற்ற இரண்டு விடயங்கள்?

பெரும்பாலான நேரங்களில் மீடியாக்கள் மக்களைப் பிளவுபடுத்தும் விதமாக செயற்படுகின்றன. நம் நாட்டில் பல தரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாகவும் நிம்மதியாகவும் வாழ முடியும். ஆனால், இங்கு என்ன நடக்கிறது?

ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும்; அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான்’ என்று இந்தியன் முஜாஹிதீன் கூறுகிறது; ஜெய்ஷே முஹம்மத் அல்லது ஹரகத்துல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது என்று ஏதேனும் ஒரு முஸ்லிம் பெயரை செனல்கள் தொடர்ந்து சொல்கின்றன. அதற்குள் உங்களுக்கு எப்படித் தெரியும் என்று கேட்டாள், “எஸ்.எம்.எஸ். வந்தது -ஈ மெயில் வந்தது” என்கிறார்கள். எஸ்.எம்.எஸ், ஈ மெயில் எல்லாம் யார் பெயரில், யார் வேண்டுமானாலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி, மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது?

முஸ்லிம்கள் என்றாலே குண்டு வைப்பவர்கள்; அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் என்று ஒரு குறிப்பிட்ட மதத்தையே ஒட்டுமொத்த குற்றவாளிபோல் மீடியாக்கள் சித்தரிக்கின்றன. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.

இவ்விடயத்தில் மீடியாக்கள் அலட்சியமாக நடக்கின்றன. தகவல்களை உண்மையா என்று உறுதி செய்யாமலே செய்தி வெளியிடுகின்றன என்கிறீர்களாஅல்லது அவை வேண்டுமென்றே திட்டமிட்டு அப்படிச் செய்வதாக நினைக்கிறீர்களா?

மதத்தின் பெயரால் மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கில் மீடியாக்கள் வேண்டுமென்றே இவ்வாறு நடந்து கொள்வதாகவே கருதுகிறேன். இது ஆரோக்கியமான போக்கு அல்ல. நிச்சயமாக நாட்டு நலனுக்கு எதிரானதே.

மீடியாக்கள் வேண்டுமென்ற மக்கள் மத்தியில் பிளவை ஏற்படுத்துகின்றன என்றா சொல்கிறீர்கள்?

குண்டு வெடித்த சிறிது நேரத்திலேயே எஸ்.எம்.எஸ் வந்தது, ஈமெயில் வந்ததை வைத்து மீடியாக்கள் ஒரு குறிப்பிட்ட மதத்தையே வில்லனாகச் சித்தரிக்கும்போது அதற்கு வேறு எப்படி அர்த்தம் கொடுக்க முடியும்.

மீடியாக்கள் ஏன் மாறவில்லை என்று நினைக்கிறீர்கள்?

அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை என்பதும் ஓர் காரணம். கொஞ்சமாவது பயம் இருக்க வேண்டும். தப்பு செய்தால் தண்டனை நிச்சயம் என்ற பயம்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s