நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு புதியபாதையை ஊக்குவித்தல்

Posted: பிப்ரவரி 20, 2012 in MUSLIM WORLD

Poor-muslim

சிறி லங்கா தனது 25 வருட உள்நாட்டு யுத்தத்தின் பின் நாடு வழமை நிலைக்கு திரும்புவதையும் மற்றும் நீண்டகாலம் நிலைத்து நிற்கும் சமாதானத்தை உறுதிப்படுத்தவதற்கும், பல்வேறு  சவால்களை எதிர்நோக்குகிறது.

இடம் பெயர்ந்த மக்களில் ஒரு பகுதியினர் தங்கள் வாழ்விடங்களுக்குத் திரும்புதல், போரினால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு அடிப்படை மறுவாழ்வு உதவிகளை வழங்குதல், முன்னேற்றமான மறுசீரமைப்பு பணிகள், மற்றும் தேர்தல்களை நடத்துதல், பாரிய அபிவிருத்தி திட்டங்கள்  என்பனவற்றால் அத்தியாவசிய சேவைகளின் தரத்தை உயர்த்துதல்,போன்றவை உட்பட பல்வேறு முன்னணிகளினாலும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

எப்படியாயினும் யுத்தத்திலிருந்து மீண்டு நிலையான மற்றும் அர்த்தமுள்ள சமாதானத்தை உருமாற்றுதலுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் தனித்தன்மையான அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமலே உள்ளன. குறிப்பாக நல்லிணக்கத்துக்கான சவால்கள் அப்படியே எஞ்சியிருக்கின்றன. இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள நாம் தவறுவோமாயின் அதன் விளைவு, மோதலுக்கும் அதன் தாக்கங்களுக்கும் தீர்வுகாணும் ஒரு வரலாற்று வாய்ப்பினை சகல சமூகங்களும் நழுவ  விட்டதாகவே இருக்கும்.

கீழே கையொப்பமிட்டுள்ள நாங்கள், முஸ்லிம் அரசியல்வாதிகளும் மற்றும் குடியியல் சமூகப் பிரதிநிதிகளும் அதற்கான கூட்டுப் பொறுப்பினை ஏற்றுக் கொள்வதோடு, பரஸ்பரம் ஒப்புக் கொள்ளப்பட்ட முன்னோக்கிச் செல்லும் வழிகள் மற்றும் செயல்முறைகளை நடைமுறைப் படுத்துவதற்கு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என அழைப்பு விடுக்கிறோம்.

சகல இனங்களைச் சேர்ந்த அரசியல்வாதிகள் மற்றும் குடியியல் சமூக குழுக்கள் என்பன அவர்களின் இனத்தைச் சேர்ந்த மற்றவர்கள் படும் துயரங்களை ஏற்றுக்கொண்டு சமரச முயற்சிகளினூடாக  இனங்களை ஒன்றிணைக்கும் வழிமுறைகளை முன்னேற்ற வேண்டும் என்று நாங்கள் மேலும் வலியுறுத்துகிறோம்.

யுத்தமானது பொதுமக்களை குறிவைத்து பரவலான வன்முறை, எதேச்சதிகாரமான அரசியல்,அச்சம் மற்றும் சமூகங்களுக்கு இடையில் சந்தேகம் என்பனவற்றை எற்படுத்தியுள்ளது. இதன் விளைவாக போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள சமூக இனங்களிடையே, போரின் முன்னான முறைகளின் கூட்டான இருப்பு மற்றும் சமூக பொருளாதார பரஸ்பர சார்புத் தன்மை,போன்றவற்றை முற்றாக வடிகட்டி அழித்ததோடு, இனங்களை பிளவுபடுத்தி தனியாக்கும் முயற்சிகளையும் வழிநடத்தியது.

இதேவேளை அரசாங்கம், தமிழ் போராளிகள், சகல பிரிவினையும் சேர்ந்த அரசியல்வாதிகள் ஆகியோர் வன்முறைகள் மற்றும் அதன் பன்முனைத் தாக்கங்கள் என்பனவற்றுக்கான ஆரம்ப பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவேண்டும், சமயத் தலைவர்கள், சமூகத் தலைவர்கள்,கல்விமான்கள், ஊடகவியலாளர் சட்டத்தரணிகள், சமூகப் பணியாளர்கள், மற்றும் ஏனையோர்கள் தாங்கள் வகித்த பாத்திரங்கள் மூலம் ஒன்றில் தங்கள் செயல்முறைகளினாலோ அல்லது தங்கள் மௌனத்தின் மூலமாகவோ இந்த நிலைக்கு பங்களிப்பை வழங்கியுள்ளனர்.

சிறி லங்காவின் போருக்கு பிந்திய காலத்தில் நல்லிணக்கம் தொடர்பான சில அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண சில ஆரம்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக நடைபெற்றுவரும் மீள்குடியேற்றம் மற்றும் மீள்கட்டமைப்பு முயற்சிகள் போன்ற மற்றைய முக்கிய நடவடிக்கைகள் குறைவாக மதிப்பிடப் படக்கூடிய நிலை உருவாயிற்று.ஒரு குறிப்பிட்ட பகுதியில் சிறுபான்மை சமூகமாக உள்ள இடம்பெயர்ந்தவர்கள் வடக்கு மற்றும் கிழக்குக்கு     மீளத் திரும்பும்போது, அவர்களை வரவேற்கும் அங்குள்ள பெரும்பான்மை சமூகத்தவர்கள் அவர்களை வளங்கள் மற்றும் நிலங்களை பிடுங்க முயற்சிக்கும் வெளியாட்கள் என்கிற கண்ணோட்டத்தில் பார்ப்பதால் மீள் திரும்புகை கடினமான ஒன்றாக அதிகரித்து வருகிறது. இந்த விடயத்தில் அரசாங்க மற்றும் குடியியல் சமூக செயற்பாட்டாளர்கள் அனுதாபமோ ஆதரவோ   காட்ட மறுப்பவர்களாக இருக்கிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் மேற்கொள்ளப்படும்   அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்ந்தும்  பெருமளவு ஒரு இனத்தைச் சேர்ந்த சமூகத்துக்கே நன்மையளிப்பதாகவும் மற்றைய சமூகங்களை வரம்பிற்கு உட்பட்டதாக வரையறை செய்து வடிவமைக்கப்படுவதால் அவர்கள் இதேபோன்ற திட்டங்களை உருவாக்குவதற்கு நிர்ப்பந்திக்கப் படுகிறார்கள்.

வளங்களை பகிர்ந்தளிப்பதில் இவைகள் சமமற்றதாகவும் சில சமயங்களில் பயனற்றதாகவும் வினியோகிக்கப் படுவதால், அவை சமூகங்களை தனிமைப்படுத்துவதை வலுவூட்டுவதில் போய் முடிகிறது. யுத்தத்தின்போது அபிவிருத்திகள் மேற்கொள்வதில்  ஒரு சமூகத்துக்கோ அல்லது மற்றொன்றிற்கோ சார்பாகப் பயன்படுத்தப்படுத்தப்பட்டுவந்த இனப்பாகுபாடுகள் தொடர்ந்தும் சாதாரணமாக அரசாங்கத்தால் மட்டுமல்லாது, சர்வசே மற்றும் தேசிய மனிதாபிமான அமைப்புகளாலும் மற்றும் முஸ்லிம் அரசியல்வாதிகளாலும் பின்பற்றப்பட்டு வருவதனால் அது இனப் பாரபட்சங்களை வலுவூட்டி வருகிறது.

Co-Existance71 தமிழ் குடியியல் சமூகப் பிரதிநிதிகளால் “தமிழ் சமூகத்துக்கும் அதன் குடியியல் மற்றும்  அரசியல் பிரதிநிதிகளுக்கும் ஒரு விண்ணப்பம்” என்கிற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள  சமீபத்தைய அறிக்கை,ஒக்டோபர் 1990 ல் வடக்கைவிட்டு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதற்கு விடையளிப்பதாகவும்,நல்லிணக்க முயற்சியை வரவேற்கும் ஒரு சைகையாகவும் அமைந்துள்ளது. கடந்த காலத்துடன் முரண்படும் இந்த முயற்சி, கூட்டுப் பொறுப்பினை அங்கீகரிப்பதாகவும்,நல்லிணக்கத்தை நோக்கிய ஒரு புதியபாதை என்பதை நிரூபிக்கும் வகையில், கடந்த இரண்டு தசாப்தங்களுக்கு மேலாக  தமிழ் – முஸ்லிம் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கும் குறிப்பிடத்தக்க முயற்சிகளில் ஒன்றாகவும் விளங்குகிறது. கடந்த காலங்களில் தனிப்பட்ட தமிழர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த வெளியேற்றம் ஒரு கொடூரமான செய்கை என்பதை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கை பலவந்தமாக வெளியேற்றப்பட்டதை கண்டிப்பதோடு நின்றுவிடாமல் திரும்பவும் அப்படி நடக்காது என்று சபதமேற்றுள்ளது, ஆனால் துரத்தியடிக்கப்பட்ட அந்தச் சம்பவத்தின் நீண்ட நிழல் வடபகுதி முஸ்லிம் சமூகத்தினரிடம் படிந்தே இருக்கும்  என்பதையும் அது சுட்டிக்காட்டியுள்ளது. அது மேலும் இந்த சமூகத்தினரின் தற்போதைய    நிலமைக்கு பரிகாரம் காணவேண்டியது தமிழ் குடிமக்களின் பொறுப்பு என்பதை வெளிச்சம்   போட்டுக் காட்டியிருப்பதுடன், தமிழ் சமூகத்திற்குள் நம்பகமான விரிவான கலந்துரையாடல் ஒன்றை நடத்துவதையும் ஊக்குவித்துள்ளது.

அந்த அறிக்கை, அதிகாரப் பரவலாக்கம் சம்பந்தமான பிரச்சினைகள், எல்லாக் குடிமக்களுக்கும் சம உரிமை, மற்றும் நல்லிணக்கம் போன்றவற்றைத் தீர்ப்பதற்கான பரந்த அளவிலான பேச்சுவார்த்தைகளுக்கு மேலும் அழைப்பு விடுத்துள்ளது, இது நாம் அனைவரும்  கருத்தில் கொள்ளவேண்டிய ஒரு அழைப்பு. தமிழ் – முஸ்லிம் ஒருங்கிணைப்பை    ஏற்படுத்துவதற்கான சிக்கல்களை தீர்க்கவேண்டியது மிக அவசியம்,அதற்காக இரண்டு  சமூகங்களுமே பொறுப்பு ஏற்கவேண்டியதும் அவசியமான ஒன்று.

தமிழ் குடியியல் சமூகப் பிரதிநிதிகளின் முயற்சிகளை வரவேற்கும் அதேவேளை, முஸ்லிம்; குடியியல் சமூக ஆர்வலர்களாகிய நாம் ஒரு சுய பரிசோதனை என்கிற செயல்முறையில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டியது அவசியம் என உணர்கிறோம். யுத்தத்தின்போது முகம் கொடுத்த பிரச்சினைகளுக்கு அங்கீகாரம் நேடுவதற்காக முஸ்லிம் சமூகம் போராடுகிறது. பலவந்தமாக வெளியேற்றப்பட்டது, கிழக்கிலும் மற்றும் வேறு இடங்களிலும் முஸ்லிம்கள் படுகொலை  செய்யப்பட்டது, கூட்டாக இடம்பெயர்ந்தது, நிலங்களை இழந்தது, மனித உரிமை மீறல்கள், மற்றும் சமாதானப் பேச்சு வார்த்தைகளில் இருந்து விலக்கப்பட்டது, போன்ற சில விடயங்களில் முஸ்லிம்கள் பெரிய சிறி லங்காவாசிகளின் சமூகம், அதேபோல கொள்கை வகுப்பாளர்கள்  ஆகியோரின்  அங்கீகாரத்தை பெறுவதில் பாரிய சிரமங்களை எதிர்கொண்டனர். எனினும் எங்கள் சொந்தக் கவலைகளை தெளிவு படுத்துவதற்காக நாங்கள் போராடிய போதிலும்,அதற்கான பச்சாத்தாபம் பாதிப்புக்குள்ளான ஏனைய சமூகத்தவர்களிடம் சென்றடையும் விதத்தில் பூரணமாக வெளிப்படுத்த இயலாதவர்களாக இருந்தோம். சில விடயங்களில் முஸ்லிம் சமூகத்தின் ஒரு பகுதியினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக்கூட கவனியாது, எமது சுய பாதுகாப்பு என்கிற   உணர்வு காரணமாக மற்றும் அரசாங்கம், எல்.ரீ.ரீ.ஈ ஆகியோருக்கு எதிராக சவால் விடுவதற்கு அச்சப்பட்டு, சிலவேளைகளில், பிராந்தியம், வர்க்கம், பாலினம் என்பனவற்றின் அடிப்படையிலான பாரபட்சம்காரணமாக  நாம் மௌனமாக இருந்தோம்.

போர் வெடிப்பதற்கு முன் நடந்த இனக்கலவரம், மற்றும் யுத்தக் கறை படிந்த வருடங்களின் போது கொல்லப்பட்டவர்கள், காணாமற்போனவர்கள், முடமாக்கப் பட்டவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்கள் உட்பட மோதலில் பாதிப்புக்குள்ளான பல தரப்பட்டவர்களிடமும் எமது பச்சாத்தாபத்தை தெளிவாக வெளிப்படுத்த நாம் தவறிவிட்டோம். சகல இனத்தவர்களுமே போரினால் பாதிக்கப்பட்ட அதேவேளை குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் சமூகத்தவர்கள்  மிகக் கொடுமையான மட்டத்தில் வன்முறைகளால் பாதிப்புக்கு உட்பட்டார்கள் என்பதை நாம் அங்கீகரித்து ஏற்றுக் கொள்ள வேண்டியது, முதன்மையாக உள்ளது.

அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு (எல்.எல்.ஆர்.சி) வின் அறிக்கையில், முஸ்லிம் சமூகத்தினர் எதிர் கொள்ளும் சில பிரச்சினைகளை அங்கீகரித்திருப்பது உட்பட விவாதிக்கப்பட்ட ஆழமான பிரச்சினைகள் மற்றும் பரிந்துரைகளை நாம் வரவேற்கிறோம். சிறிலங்காவில் சமாதானம் மற்றும் ஜனநாயகம் என்பனவற்றைப் பலப்படுத்துவதற்கு சாதகமான சில பரிந்துரைகளை எல்.எல்.ஆர்.சி யின் அறிக்கை வழங்கியுள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்.

இந்த அறிக்கை பிரதானமாக வெளிப்படுத்துவது, இடம் பெயர்ந்தவர்கள் திரும்பி வருவதற்கு வசதியளித்தல், காணி உரிமையாளர்களின் பிரச்சினைகள், இராணுவத்தை மீளப்பெறுதல்,  காணாமற் போனவர்களைப்பற்றிய விசாரணைகளை மேற்கொள்ளுதல், போன்ற ஏனைய மனித உரிமை மீறல்கள், மொழிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல், மற்றும் அரசாங்கத்தால் வழி நடத்தப்படும் ஒரு நல்லிணக்க நடவடிக்கை போன்ற பல்வேறுபட்ட விடயங்களில் உடன்   நடவடிக்கை மேற்கொள்வதன் அவசியத்தை. எனினும் விசேடமாக அதிகாரப் பரவலாக்கல்    மற்றும் பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்ற விடயங்களில் குறிப்பிடத்தக்க இடைவெளி விடப்பட்டிருப்பதை நாங்களும் அவதானிக்கிறோம். இந்த இடைவெளிகளை ஏற்றுக்கொள்ளும் அதேவேளை அவைகளை தீர்த்து வைக்கும்படி அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறோம்,எல்.எல்.ஆர்.சியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு நாம் அரசாங்கத்திற்கு அழைப்பு விடுக்கிறோம், அவைதான் தேசிய அளவிலான சமாதானம், சமரசம், மற்றும் ஜனநாயகம் என்பனவற்றை அடைவதற்கான முக்கிய அடையாளங்கள்.

அந்த செயற்பாடுகளை கண்காணிப்பதற்கு பாராளுமன்றத்திற்கு பதில் கூறத்தக்கதான ஒரு  பொறிமுறையை உருவாக்குவது, இம் முயற்சியில் பயனுள்ள ஒருநடவடிக்கையாக இருக்கும். எல்.எல்.ஆர்.சி.யின் அறிக்கை சுட்டிக்காட்டுவதைப்போல நல்லிணக்க முயற்சிகளை செயற்படுத்துவதற்கும்; மற்றும் நல்லிணக்கத்துக்கு வசதியான ஒரு சூழலை உருவாக்கவதற்கும்  தகுதியான பிரதான செயற்பாட்டாளர் அரசாங்கமேயாகும். இது ஏனைய செயற்பாட்டாளர்கள்  வகிக்கவேண்டிய பாத்திரத்தின் முக்கியத்துவத்தை விலக்குவதாகவோ அல்லது குறைப்பதாகவோ அமையாது.

முஸ்லிம் சமூகத்தை பொறுத்த மட்டில் எங்கள் அரசியல்வாதிகள் அரசியல் பேச்சு வார்த்தைகளில் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கப்படவில்லை, நாங்கள் தவிர்க்கப்பட்டுள்ளோம் என வழக்கமாக தெரிவிக்கும் முறைப்பாடன பதிலளிக்கும் முறையிலிருந்து அப்பால் நகரவேண்டியது அவசியம். உள்ளக இடம்பெயர்ந்தவர்களின் மறவாழ்வு, காணி, அரசியல் தீர்வு, மற்றும் ஒருங்கிணைப்பு, ஆகிய விடயங்கள் உட்பட போருக்கு பிந்திய வித்தியாசமான விடயங்கள் எந்த விதத்தில் எங்களுக்கு தேவைப்படுகிறது என நாங்கள் கருத்தொருமிப்புடன் திட்டமிட வேண்டும். இது எங்கள் சொந்த நிலையை பலப்படுத்தும் அதேவேளை பொதுவான சிக்கல்களைத் தீர்த்து  நிவாரணத்தை ஏற்படுத்தும், அத்துடன் தமிழர்,சிங்களவர், மலையகத் தமிழர்கள் உட்பட்ட இதர சமூகங்களுடன் கருத்தொருமிப்பை ஏற்படுத்துவதும் அவசியம்.

எங்கள் அரசியல் தலைவர்கள் இவ்வாறு செய்வதில் தோல்வி காண்பார்களாயின், குடியியல் சமூக ஆர்வலர்களாகிய எங்களுக்கு கருத்தொருமிப்பை உருவாக்கும் இந்தச் சவாலை ஏற்றுக் கொள்வதற்கான ஒரு கடப்பாடு உள்ளது என்பதை ஏற்றுக் கொள்வது அவசியமாகிறது, அத்தோடு   எங்கள் அரசியல் பிரதிநிதிகளிடம் இதற்குரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரவேண்டும். நாங்கள் அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் அதன் விளைவு பிரத்தியேக இனவாத அரசியல், பாகுபாடான சமூக நடைமுறைகள் என்பனவற்றுக்கு உரமூட்டுவதாக அமைவதுடன் அவை    யாவற்றையும் விட மோசமாக மோதலை நிலைநிறுத்துவதாகவும் ஆகிவிடும். அதன்காரணமாக எங்கள் வேற்றுமைகளைக் களைந்து, ஜனநாயகம் மற்றும் நீதியான சிறிலங்காவை அடிப்படையாகக்   கொண்டு பன்முகத்தன்மையுள்ள கொள்கைகளை கட்டியெழுப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த வாய்ப்பினை நாங்கள் நழுவ விடவேண்டி ஏற்படும்.

(இந்த அறிக்கை வடக்கு கிழக்கு உட்பட சிறிலங்கா முழுவதிலுமுள்ள சமூகம் மற்றும் குழுக்களைச்   சேர்ந்த 147 முஸ்லிம் குடியியல் அமைப்பு நபர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டதாகும்)

LIST OF SIGNATORIES

1) Ms. Azra Abdul Cader -Colombo
2) Mr M. Abdul Cader -Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
3) Mr. K.A.M. Aboobaker -Federation of All Farmers Societies, Muttur
4) Mr. A.C. Aboobucker -Mohideen Jummah Mosque, Konarpannai
5) Mr. M. Ahamed Naina -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
6) Mr. Hilmy Ahmed
7) Mr. Shifan Ahmed-Colombo
8)Mr. M.H.M. Ajmeer -Matale
9) Ms. M.S. Ajmiya -PMA, Sammanthurai
10) Mr R.M. Ali Khan -Husainiya Jummah Mosque, Tharapuram
11) Mr. M.A.C.M. Ameen -Hira Islamic Reawakening Academy
12) Mr. H. Ameer Ali
13) Ms. M. Anitha -Palavi Women Development Society
14) Mr. A.S. Anoordeen
15) Mr. F.M.S. Ansar Moulana -Maruthamunai
16) Mr. M.S. Anver -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
17) Mr. S.A. Ashar -Mohideen Jummah Mosque, Konarpannai
18) Ms. U.L.F. Ashriffa -PMA, Sainthamaruthu
19) Mr. S.H. Ashroff-Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
20) Mr. K.M. Asker-All Fishermen’s Federation, Muttur
21) Mr. A.H.M. Aroos -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
22) Ms. L. Arushiya -Women Development Society, Kalpitiya
23) Ms. A. Asvina -Sammanthurai
24) Mr. Y.A. Athuham -Husainiya Jummah Mosque, Tharapuram
25) Dr. U.L.A. Azeez -Justice of Peace, Maruthamunai
26) Mr. S.M. Azhar -Husainiya Jummah Mosque, Tharapuram
27) Mr. A.G.A. Azeem -Husainiya Jummah Mosque, Tharapuram
28) Mr. A.W. Badurdeen -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
29) Ms. S.F. Beham -Women’s Action Network, Trincomalee
30) Ms. M.B.F. Bisliya -Jaffna Civil Society for Equality
31) Ms. M.A.B. Bisriya -Muslim Womens Development Trust, Puttalum
32) Mr. A.H.M. Buhary -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
33) Mr. A.M. Fahim -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
34) Mr. S.M. Faizal -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
35) Mr. A.C.M. Faleel -Sainthamaruthu
36) Mr. S.A.C.M. Fareed -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
37) Ms. A. Fareeda -Federation of Womens Societies, Muttur
38) Moulavi A.A.M. Farzath -Oluvil
39) Ms. Saadiqa Fauz
40) Mr. A.S.M. Firthows -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
41) Mr. A.R. Furhamdeen -Husainiya Jummah Mosque, Tharapuram
42) Mr. M.S. Gazzali
43) Mr. Sajahan Hameed -Board of Trustee Thanneeruthu Mosque
44) Ms. Sharmila Haneefa -Jaffna Civil Society for Equality
45) Ms. Anberiya Hanifa -Muslim Women Research Action Forum
46) Mr. M.M. Hanifa -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
47) Dr. Farzana Haniffa -University of Colombo
48) Ms. Rishana Haniffa -Colombo
49) Mr. A.B.M. Hasmin -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
50) Mr. N.M. Hassan-Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
51) Mr. A.H.M. Hilmy -Maruthamunai
52) Mr. M.A.A.Husain -Mullaitivu District Youth Development Federation
53) Ms. Rifla Husain -Womens Action Network
54) Mr. S.M.S Hussain -Addalachenai
55) Mr. M.Y.M. Ieyas -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
56) Mr. M.I. Illiyas -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
57) Mr. M.C.M. Iqbal
58) Dr. Zulfika Ismail
59) Ms. Jezima Ismail -Muslim Womens Research and Action Forum
60) Mr. A.C. Iyoob -Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
61) Mr. Ameen Izzadeen
62) Mr. M.T. Jaber Ali -Malikaikadu
63) Mr. A.R.A. Jahan -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
64) Mr. M. Jahubar -Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
65) Ms. M.S. Jaleel -MWRAF, Maruthamunai
66) Mr. S.H.M. Jameel
67) Mr. A. Jameel -Natpiddimunai
68) Mr. S. Jamoon -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
69) Mr. M.I.M. Jawath -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
70) Mr. A.W.M. Jihad -Peoples Forum, Muttur
71) Mr. M. Jusli -Alangkuda Mosque Trustee
72) Mr. M.M. Kajoon -Husainiya Jummah Mosque, Tharapuram
73) Mr. M.M. Kamal -Husainiya Jummah Mosque, Tharapuram
74) Moulavi M. M. Kareem Masjid Al – Shurah Council Muttur
75) Moulavi K. M. Karees -President, Jamiyyathul Ulama, Muttur
76) Mr. Abdul Kayoom -Batticaloa
77) Mr. V.M. Khalideen -All Mosque Federation Muttur
78) Mr. A.M. Lafeer
79) Mr. M. Liyakath Ali S-ELSS, Ninthavur
80) Dr. M. Mahees -University of Colombo
81) Ms. Jensila Majeed -Womens Action Network
82) Ms. Jeslina Majeed -Mullaitheevu Womens Development and Rehabilitation Federation
83) Mr. M.I.M. Mansoor -CELSS, Ninthavur
84) Mr. N. Misjath -Erukkalampiddi Welfare Association for Renaissance Development & Sports
85) Mr. A.C. Mohammed -Sainthamaruthu
86) Mr. Baheej Mohideen -Akkaraipattu
87) Ms. Juweriya mohideen -Muslim Women Development Trust, Puttalum
88) Mr. M.I.M. Mohideen
89) Mr. A.S.M. Mowjood -Kalmunai
90) Mr. Mohamed Mubarak
91) Ms. Rameeza Mubarak -Changers Foundation, Batticaloa
92) Ms. S. Mubeetha -Puthukudiruppu Women Development Society
93) Mr. K.M. Abdhul -Muhaimin Organisation for Rural Education and Cultural Services
94) Mr. A.S.M. Mujahith
95) Mr. N.M.A. Munaf -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
96) Mr. A.G.M. Munaffar -Husainiya Jummah Mosque, Tharapuram
97) Mr. A.C. Musathide -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
98) Mr. M.N. Mushafque
99) Mr. S.H.A. Muthalifu -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
100) Mr. M.S.M. Naleer -Sainthamaruthu
101) Mr. A.R. Naleer -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
102) Mr. S.A.C. Naseer -Mohideen Jummah Mosque & Katubawa Jummah
Mosque, Erukkulampiddi
103) Mr. M.R.M. Nawfeel -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
104) Mr. A.H.M. Nawfer -Kalmunai
105) Mr. M.S. Nazaar -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
106) Mr. M.A.M. Nazeer -Kalmunai
107) Mr. Faleel Mohamad Nifraj
108) Ms. J. Nihara -Erukkalampiddi Womens Society
109) Moulavi S. H. Nizar -Katheebas Federation Muttur
110) Mr. A. Niyas -Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
111) Dr. M.A. Nuhuman
112) Mr. S.M. Nuhuman -Husainiya Jummah Mosque, Tharapuram
113) Mr M.H.A. Raheem -Mullaitivu District Displaced Social Service Organisation
114) Mr. Mirak Raheem – Colombo
115) Mr. P.N.M. Rahman – Mussali
116) Mr. M. Rahmathulla-Puttalam
117) Mr. M. Ranoos-Vethatheevu Resettlement and Development Society
118) Mr. A.S. Mohammed Rayees Mannar
119) Mr. A.N. Riyas -Husainiya Jummah Mosque, Tharapuram
120) Mr. M.R.M. Riyas -Kandy
121) Mr. J. Rizard -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
122) Mr. A.R.M. Rizwi -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
123) Mr. A.C.M. Rumaiz -Puttalam
124) Mr. A.S.M. Safrin -Northern Muslims Students Organisation
125) Mr. A.C. Sajahan -Mohideen Jummah Mosque, Konarpannai
126) Mr. M.N.M. Sarjah -Oluvil
127) Mr. A.C. Sathar -Mohideen Jummah Mosque, Konarpannai
128) Ms. Shreen Abdul Saroor -Mannar Womens Development Federation
129) Mr. S.S. Seinulabdeen -Mohideen Jummah Mosque & Katubawa Jummah Mosque, Erukkulampiddi
130) Mr. A.L. Subuhan -Jaffna Muslim Development Committee
131) Ms. A.L. Tahgiva -Mediation Board, Sammanthurai
132) Ms. Minna Thaheer -Colombo
133) Mr. M.I.M. Tharjoon
134) Moulavi A.S.H. Thasreeq -Arafa Nagar Resettlement Society
135) Mr. M.M. Umar Saibo -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
136) Mr. M.M. Uthuman Lebbe -Sainthamaruthu
137) Ms. Hafsa Uvais -Colombo
138) Mr. M. Uvais -All Ceylon Moors Association
139) Mr. A.S.M. Uvais Karume -Mohideen Jummah Mosque, Moor Street, Mannar
140) Mr. M.A.M. Washasdeen -SESSO, Oluvil
141) Mr. M.H.M. Wazeen Sainthamaruthu
142) Mr. N. Yaseer -Mohideen Jummah Mosque, Grand Bazaar, Mannar
143) Mr S.A. Yasser -Mohideen Jummah Mosque, Konarpannai
144) Mr. A. Yoonus -Mohideen Jummah Mosque, Puthukudiyiruppu
145) Ms. Faizun Zackariya -Muslim Womens Research and Action Forum
146) Ms. Hazeera Zavahir -Kandy
147) Ms. G.M.R.Zeena -Sainthamaruthu

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s