ஈரானிய யுத்தக்க கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசிப்பு

Posted: பிப்ரவரி 21, 2012 in MUSLIM WORLD, POPULAR FRONT

habibollah-sayari

ஈரானிய யுத்தக் கப்பல்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை சுயஸ் கால்வாய் ஊடக மத்திய தரைக்கடல் பகுதிக்குள் பிரவேசித்ததாக ஈரானிய கடற்படைத் தளபதி அட்மிரல் ஹபிபுல்லா சயாரி தெரிவித்தார் என ஈரானிய தேசிய தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

பிராந்திய நாடுகளுக்கு தமது வல்லமையை காட்டுவதற்காக ஈரானிய யுத்தக்கப்பல்கள் மத்திய தரைக்கடலுக்குச் சென்றதாகவும் 1979 ஆம் ஆண்டின் ஈரானிய இஸ்லாமிய புரட்சியின் பின்னர் அந்நாட்டுக் கப்பல்கள் சுயஸ் கால்வாயை கடந்தமை இது இரண்டாவது தடவை எனவும் அவர் கூறினார்.

மேலும் பாதுகாப்பு அமைச்சரிடம் இது தொடர்பாக வினவப்பட்டபோது, மத்திய தரைக்கடல் சர்வதேச நீர்ப்பரப்பிற்குரியது. அது உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது. அதனூடாகவே ஈரானும் தனது இரண்டு யுத்தக் கப்பல்களைப் பரீட்சித்துப் பார்ப்பதற்காக அனுப்பியுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இக்கப்பல்கள் சிரியாவின் டாடோஸ் நகரிலுள்ள துறைமுகத்தில் நிறுத்தப்பட்டு, சிரிய கடற்படையினருக்கும் பயிற்சி வழங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெப்ரவரி 4 ஆம் திகதி ஈரானிய கப்பலான சஹிட் காண்டி மற்றும் விநியோக கப்பலான கார்க் ஆகியன செங்கடலில் தரித்துநின்றதாக ஈரானிய ஊடகங்கள் கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க யுத்தப் கப்பல்கள் பாரசீக வளைகுடாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ஹேர்முஸ் நீரிணை நோக்கி நகர்த்தப்பட்டுள்ள நிலையில் ஈரானிய யுத்தக் கப்பல்கள் மத்திய தரைக்கடல் பகுதிக்குச் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Iranship

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s