அமெரிக்கப் படையினரால் அலகுர்ஆன் எரிக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆப்கானிஸ்தானில் இரண்டாவது நாளாக இவ்வார்ப்பாட்டம் தொடர்ந்துள்ளது. இதன்போது மூவர் கொல்லப்பட்டதுடன் 20 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆப்கான் தலைநகர் காபுலிலும், கிழக்கு நகரான ஜலாலாபாத் ஆகிய நகரங்களில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது காபுல் நகரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்திற்கு கற்களை எறிந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தை கலைக்க பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர். இதன்போது பொலிஸார் மேற்கொண்ட தாக்குதலினாலும், மக்கள் கலைந்தோடும்போது ஏற்பட்ட நெரிசலினுள் சிக்கியுமே சிலர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி ஹமீத் கர்சாய் இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாகவும், இது போன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.