மோடியும் ஹிட்லரும் எவ்வித வித்தியாசமுமில்லாத தலைவர்கள்

Posted: பிப்ரவரி 24, 2012 in NEWS

Modi-Hitlor

இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமான குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும், 2 ஆம் உலக மகா யுத்தத்தின் சூத்திரதாரியும், அப்போதைய ஜெர்மனின் தலைவருமான ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

பொலிவூட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்த இவர், படத்தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2002 இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான நடந்த அரச பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து ‘பிராக்’ எனும் படமும் எடுத்துள்ளார்.

அண்மையில் இந்தியாவின் வதோதராவில் நடைபெற்ற கருந்தரங்கொன்றுக்கு விசேட பிரதிநிதியாகக் கலந்து கொண்ட நந்திதா தாஸிடம், 2002 இன் குஜராத்திற்கும் 2012 இன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார்.

“ஹிட்லரின் ஆட்சிக் காலத்தில்தான் ஜெர்மனியின் மிகச் சிறந்த வீதிகள் அமைக்கப்பட்டன. அதேபோல் ஜெர்மனியின் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் அப்போதுதான் கட்டப்பட்டன. ஹிட்லர் ஒரு இசைப் பிரியராகவும், சைவ உணவு உண்பவராகவும் மது குடிக்காமலும் இருந்தார். அக்காரணங்களுக்காக ஜெர்மனியார்கள் யாரும் ஹிட்லரை உயர்ந்த மனிதனாக நினைப்பதில்லை. மாறாக அவர் மனித இனத்திற்குச் செய்த அநீதிகளாலேயே அவர் நினைக்கப்படுகிறார்” என நந்திதா தாஸ் கூறினார்.

மேலும் பத்து வருடங்களுக்கு முன்னரும் பிற மாநிலங்களை விட குஜராத் நன்றாகவே இருந்தது. வெறும் அஹமதாபாத்தையும் வதோதராவையும் வைத்து ஒட்டு மொத்த குஜராத்தின் வளர்ச்சியை அளவிடக் கூடாது. பின் தங்கிய செளராஷ்டிரா பகுதிகளயும் உள்ளடக்கித்தான் குஜராத்தின் வளர்ச்சியை அளவிட வேண்டும் என்றும் கூறினார்.

மனித இனத்திற்கு எதிரான மனிதப் படுகொலையை மறக்க முடியுமா?

2002 இல் குஜராத்தில் நடைபெற்ற கலவரத்தை மறந்து விட வேண்டும் என்று தம்மிடம் சிலர் அறிவுரை கூறுகின்றனர். ‘‘இன்னும் சிலர் முஹம்மது கஜினியைப் பற்றிப் பேசுகின்றனர். இன்னும் சிலர் ஒரு சமூகத்தை அவுரங்கசீப்பின் இரத்தமாக நினைத்து வெறுப்பை உமிழ்கின்றனர். அப்படியிருக்கும் போது தங்கள் உடமையும் உறவுகளையும் இழந்து நிற்கும் ஒரு சமூகத்தை இச்சம்பவங்களை பத்து வருடங்களுக்குள் மறந்து மன்னிக்கச் சொல்வது எந்தவகையில் நியாயம்.

அவ்வாறு கூறுவது நியாயமும் இல்லை. இப்படுகொலையை மறக்க வேண்டுமாக இருந்தால் உலக வரலாற்றில் இருந்து ஹிட்லரின் நாமமும் அழிக்கப்பட வேண்டுமல்லவா‘‘ என்றும் நந்திதா தாஸ் கூறினார்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s