ஈராக் யுத்தத்தின்போது 69,263 பேர் பலி, 2,39,133 பேர் காயம்

Posted: மார்ச் 1, 2012 in MUSLIM WORLD

ஈராக்கில் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 69,263 பேர் பலியாகியுள்ளனர், 2,39,133 பேர் காயமடைந்துள்ளனர் என ஈராக் அரசாங்கம் தகவல் வெளியிட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் நடந்த போர், பயங்கரவாத சம்பவங்கள் மற்றும் வன்முறைச் சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கையை ஈராக்கின் சுகாதாரத் துறை அமைச்சகம் மற்றும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் இரண்டும் இணைந்தே இத்தகவல்களை வெளியிட்டுள்ளது.

ஈராக்கின் அப்போதைய ஜனாதிபதி சதாம் ஹுசைன் மீதான குற்றச்சாட்டின் அடிப்படையில், 2003ஆம் ஆண்டு அங்கு சென்ற அமெரிக்கப் படைகள் 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18 ஆம் திகதி வெளியேறிய காலம் வரையே இவைகள் இடம்பற்றதாக அவ்வரசு தெரிவித்துள்ளது.

அதன்படி 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதி முதல், 2011 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்31 ஆம் திகதி வரையிலான காலகட்டத்தில், 69,263 பேர் பலியாகியுள்ளனர், 2,39,133 பேர் காயமடைந்துள்ளனர்.

உச்சகட்ட யுத்தத்தின் போது 21,539 பேர் பலியாகியுள்ளனர், 39,329 பேர் காயமடைந்துள்ளனர்.

2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்தில் ஈராக் மனித உரிமைகள் அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, 2004 – 2008 ஆண்டுகளுக்கிடையில் 85 ஆயிரத்து 694 பேர் பலியாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஆனால், தற்போதைய அறிக்கை அதைவிடக் குறைவானவர்களையே பட்டியலில் காண்பித்துள்ளது. மேலும் அமெரிக்காவினால் கடந்த ஆண்டு இறுதியில் வெளியிடப்பட்டிருந்த அறிக்கையில் 76 ஆயிரம் பேர் பலியாகியுள்ளனர் என்றும், பிரிட்டனைச் சேர்ந்த தனியார் இணையத்தள அறிக்கையின்படி ஒரு லட்சத்துக்கும் அதிகமானோர் இப்போரில் இறந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

iraq war_001

iraq war_005

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

w

Connecting to %s