கொலைக்களமாகிவரும் ஏமன் மற்றும் பாகிஸ்தான்

Posted: மார்ச் 10, 2012 in MUSLIM WORLD

ஏமன் – பாகிஸ்தான்: கடந்த வெள்ளிக்கிழமை (09.03.2012) அமெரிக்க யுத்த விமானங்களின் ஏவுகணைத் தாக்குதல்களினால் ஏமன் நாட்டின் அல் பெய்தா மாகாணத்தைச் சேர்ந்த 20 பேரும், பாகிஸ்தானின் பழங்குடியினர் 15 பேரும் பலியாகியுள்ளனர்.

பெயர் குறிப்பிட விரும்பாத ஏமன் நாட்டின் உள்ளூர் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவர் தகவல் அளிக்கையில், இந்த விமானத் தாக்குதல்களின்போது பெய்தா மாகாணத்தின் ஜப்ரா பகுதியில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாகவும், பெய்தா நகருக்கு வெளியே மூன்று கிராமங்கள் அமெரிக்கப் போர் விமானத் தாக்குதல்களுக்குத் தொடர்ந்தும் இலக்காகி வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆப்கானிய எல்லைப் பிராந்தியமான தென் வஸிரிஸ்தான் பகுதியில் அமெரிக்கப் படையினரால் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் தாக்குதல்களின்போது 15 பேர் உயிரிழந்துள்ளதோடு, மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

2012 ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் இருந்து அமெரிக்கப் படைகள் மேற்கொண்டுவரும் போர் விமானத் தாக்குதல்களின்போது ஏராளமான பாகிஸ்தானியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானிய எல்லைப்புறத்தில் உள்ள தாலிபான்களை இலக்குவைத்து இந்தத் தாக்குதல்கள் நிகழ்த்தப்படுவதாக அமெரிக்கத் தரப்பினரால் சொல்லப்பட்டாலும், இந்த ஏவுகணைத் தாக்குதல்களினால் ஏராளமான அப்பாவிப் பொதுமக்களே பலியாகி வருகின்றனர் எனப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய அமெரிக்கப் படைகளின் இந்தத் தன்னிச்சையான தாக்குதல் நடவடிக்கைகளை எதிர்த்து பாகிஸ்தான் மக்கள் பல்வேறு எதிர்ப்புப் பேரணிகளை நடாத்திவருவது குறிப்பிடத்தக்கது.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s