இனக்கலவர நினைவு எதிர்ப்பு பேரணிகளுக்கு அனுமதி மறுத்த குஜராத் காவல்துறை

Posted: மார்ச் 13, 2012 in NCHRO

அஹ்மதாபாத்:குஜராத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக மோடியால் முன்னின்று நடத்தப்பட்ட இனக்கலவரம் நடந்து 10 ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் அதனை நினைவு கூறும் விதமாகவும் அதற்கு நீதிகேட்கும் விதமாகவும் பேரணிகள் நடத்த குஜராத் காவல்துறை அனுமதி மறுத்து வருகிறது.

கடந்த பிப்ரவரி 26_ஆம் தேதியும் மற்றும் மார்ச் 10-ம் தேதி சமூக அமைப்புகள் போராட்டங்களை நடத்த குஜராத் காவல்துறை அனுமதி மறுத்தது.

அஹமதாபாதில் 11  நாட்கள் நடைபெற்ற குஜராத் இனக்கலவர எதிர்ப்பு நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக கடந்த பிப்ரவரி 26-ம் தேதி மெஹ்தி நவாப் ஜங் அரங்கில் அமைதி, நீதி மற்றும் மத நல்லிணக்கத்திற்காக சமூக ஆர்வலர்களின் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பேரணி செல்ல சமூக ஆர்வலர்கள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் இறுதி நிமிடத்தில் குஜராத் காவல்துறை இந்த பேரணிக்கு அனுமதியை ரத்து செய்தது. மேலும் மெஹ்தி நவாப் ஜங் அரங்கையும் சுற்றி வளைத்து முற்றுகையிட்டது.

மேலும் மதசார்பற்ற ஜனநாயக அமைப்பு மற்றும் குடிமையியல் உரிமைகள் அமைப்பும் மற்ற சமூக அமைப்புகளுடன் சேர்ந்து அதே இடத்தில் மீண்டும் கடந்த மார்ச் 10-ம் தேதி பேரணி நடத்த முயன்றனர். ஆனால் குஜராத் காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து அவர்கள் தடையை மீறி ஊர்வலம் செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறை கைது செய்து பிறகு விடுவித்தது. இந்த போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் அனைவரும் பிரபல சமூக ஆர்வலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

காவல்துறையின் இந்த நவடிக்கை குறித்து சமூக ஆர்வலர்கள், குஜராத் அரசு அமைதியான முறையில் நடத்தப்படும் போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்கும் அனுமதி தர மறுப்பதாகவும் இதன் மூலம் அரசு தனக்கு எதிராக யார் பேச நினைத்தாலும் அவர்களை அடக்க நினைப்பது தெளிவாகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.

Advertisements

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / மாற்று )

Connecting to %s